Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு ஏற்கனவே தமிழர்களின் தாயகமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது! பேராசிரியர் சிற்றம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

09.jpgபண்டா செல்வா ஒப்பந்தமும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இலங்கையின் வடக்கும் கிழக்கும் இலங்கைத் தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையிலேயே செய்து கொள்ளப்பட்டவை.

இந்த எண்ணக்கருவை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் அதனடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார் பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம்.

யாழ்ப்பாண செயலகத்தில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை இங்கு சாட்சியமளித்த யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞ்ஞானம் கடந்த 60 வருட காலத்தில் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளில் கவனம் செலுத்தப் பயன்படுத்தப்படவில்லை என்றும், இது இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது என்றும், தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஜனநாயகப் போராட்டம் தோல்வி கண்டால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு முகம் கொடுப்பதை இலங்கை அரசு தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிக்கும் போது இவர் இதனைத் தெரிவித்தார். சங்கரத்தையிலும் குருநகரிலும் இடம்பெற்ற அமர்வுகளில் சாட்சியமளித்தவர்களுள் பெரும் பாலானவர்கள் பெற்றோர்கள்.

இலங்கை இராணுவம் ஈ.பி.டி.பி மற்றும் துணை இராணுவத்தினர் பலர் தமது பிள்ளைகளைக் கடத்திச் சென்றதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபின் காணாமல் போயுள்ளதாக அவர்கள் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

ஆணைக்குழுவின் யாழ். பல்கலைக்கழக அமர்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் பி.பாலசுந்தரம் பிள்ளை, ராஜன் ஹூல் ஆகிய முக்கியஸ்தர்களும் சாட்சியமளித்தனர்.

http://www.tharavu.com/2010/11/blog-post_1624.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.