Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துமாற்றமும் அதன் அவசியமும் - உமை

Featured Replies

கருத்துமாற்றமும் அதன் அவசியமும் - உமை

தமிழீழ நிருபர்

ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010

Maveerar naal 2010

போரின் முடிவு பேரவலம் ஆகியதும் மாவீரர்களைக்கூட விமர்ச்சிக்கும் அளவிற்கு எம் புலம் பெயர் சமூகத்தில் சிலர் வம்புகள், வாதாட்டங்கள், குசும்புகள், குள்ளத்தனங்கள், வர்க்க தனங்கள் கொண்டவையாக யாரும் எதுவும் பேசலாம் என வளர்ந்துவிட்டார்கள்.

இதே போர் பெரும் வெற்றிபெற்றிருந்தால் கதை வேறு... எல்லோரையும் தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், கடவுள்கள் என ஆராய்ச்சிகள் கிளம்பி இருக்கும். கருத்து விமர்சனங்கள் நியாயம் தான் ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என பழகி கொள்ள வேண்டும்.

MV8.jpg

சென்ற வருடம் பிரித்தானியாவில் போர் வீரர்களின் நினைவு மயானத்தில் சிறு நீர் கழித்ததற்காகவும் மதுபோதையில் அந்த வளாகத்தில் நடமாடியதற்காகவும் இறந்த போர் வீரர்களை அவமதித்தார் என பிரித்தானிய நீதிமன்றம் ஒரு பிரித்தானிய பிரஜையை தண்டித்தது.

ஒவ்வொரு நாடுகளிலும் போர் வீரர்களை அந்த நாட்டு மக்களும், அரசுகளும் கட்சிகளும் எந்தவித வேறுபாடும் இன்றி வணங்குகின்றார்கள், அவர்கள் கனவை நினைவில் சுமக்கின்றார்கள். அவர்கள் பேரால் உறுதி எடுத்துக்கொள்கின்றார்கள். அந்த கலாச்சாரம் மட்டும் புலம்பெயர் மக்கள் சிலரிடம் ஏன் இன்னமும் ஒட்டிக்கொள்ளவில்லை.

Heroes%20cemetory%20destroed.jpg

Maveerar naal 2010

ஒரு தலைவனுக்கு ஓர் அமைப்பிற்கு அவர்களது செயற்பாட்டில் பெருவாரியான விமர்சனம் இருக்கும். இரஷ்யாவில் ஸ்டாலின் கிராட்டில் ஜோசெப் ஸ்டாலின் அவர்களின் சிலையை அகற்றவேண்டும் என சிலரும் கூடாது என சிலரும் இன்றும் வாதிட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர் போரை நடத்திய விதம் பற்றி விமர்சனம் செய்கின்றார்கள்.

ஆனால் நியாயபூர்வமாக விவாதிக்கின்ரார்கள்.. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான பல வரலாறுகள் உள்ளன. என்றாலும் அந்த மக்கள் சமூகம் தன் விடுதலைக்காக தம் இலட்சியத்திற்காக தம் நாட்டிற்காக நல்ல நடைமுறைகளை பின்பற்றி இருக்கின்றார்கள்.

இளப்புக்களை துன்பங்களை கண்டு அஞ்சியதில்லை மாறாக அதில் இருந்து மீண்டார்கள். எப்படி மீட்கப்படவேண்டும் என வாதிட்டார்கள் திட்டமிட்டார்கள்.

எல்லாவற்றையும் தான் விடுங்கள் இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் மதங்களை பாருங்கள் எல்லாமே எதனை போதிக்கின்றன. ஆனால் அதனை போதிப்பதற்காக மில்லியன் கணக்கான உயிர்கள் மாய்க்கப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களாகியும் இன்னமும் மதங்கள் தம் இலட்சியம் முடியவில்லை எனத்தான் கூறுகின்றன.

இப்போதும் மில்லியன் கணக்கில் செலவு, உயிர்க்கொலை, சொத்தழிவு என தொடர்கின்றன. கிறிஸ்தவ மதத்தை போதிக்க ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ குருமார் கரும்புலிகள் போல தம் உயிர்களை மாய்த்தார்களே தம் தலைகளை நிரை நிரையாக நின்று வெட்டி வீழ்த்தினார்கள் அவர்கள் தற்கொடை செய்த இடம் ரோமில்தான் நடந்தது. இன்று நாம் அன்பிற்கும் அமைதிக்கும் அடையாளமாக பார்க்கும் பாதிரிமார்கள் அன்று ஆயுதம் ஏந்திய போராளிகள், தற்கொடையாளர்கள்.

நாம் இவற்றில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை என்ன ஓர் இலட்சியத்திற்காக அந்த இலட்சியத்தை அடைவதற்காக அர்ப்பணிப்புக்களை வரையறை செய்ய முடியாது, காலத்தை வரையறுக்க முடியாது, இழப்புக்களை நியாயப்படுத்தி சலுகைகளிற்காக சோரம்போக முடியாது அதே வேளை இளப்புக்களை ஈடுசெய்யவும், அதில் இருந்து மீழவும் மாற்று வழிகளை கையாண்டு செயற்படாமல் இருக்கவும் முடியாது. இதுபற்றித்தான் நாம் நல்ல முறையில் சிந்திக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் இந்த நல்ல விடயங்களைத்தான் பின்பற்றவேண்டும்.. ஆனால்... ஒரு முதியவர் பகிடியாக எனக்கு கூறுவார் அட தம்பி எங்கட சனம் அங்கையும் சரி இங்கையும் சரி வெள்ளக்காரனிட்ட இருக்கிற கூடாத குணங்களைத்தான் என்றார்.

எங்கள் மாவீரர்கள் செய்த தியாகங்கள் உண்மை, உயிர்விட்டமை உண்மை ஓர் உன்னத இலட்சியத்திற்காக தம்மை தியாகம் செய்தது உண்மை கடந்த 30 வருடங்களாக உண்மையாக இருந்தது... இன்றும் என்றும் இருக்கும் ஏனென்றால் அவர்கள் எமக்காக தம்மை அழித்தவர்க|ள்.

ஆகவே..

இந்த புனித நாட்களில் இலட்சியத்தை மனதில் ஏந்தி நாம் செயற்படுவோம். இலட்சியத்தை அடைவதும், இலக்கை எட்டுவதும் என்றோ ஒரு நாள் நடக்கும். ஆனால் நாம் இப்போ செய்தவுடன் நடக்கும், நடக்க வேண்டும் என நினைப்பதே எம் தெளிவற்ற சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் காரணம்.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நடப்பதனையே அறிய முடியாதவனாக இருக்கின்றான். தன் வாழ்க்கையினை திட்டமிட முடியாமல் ,தான் திட்டமிட்டவற்றை செய்ய முடியாமல் தன் எத்தனையோ சின்ன சின்ன கனவுகளை நிறைவேற்ற முடியாமல் தன் வாழ்க்கையினை முடித்துக்கொள்கின்றான்.

ஆனால் நாம் பிறரை மட்டும் ஏன் முடியவில்லை என்று கேட்கின்றோம். பிறரின் இயலாமை பற்றி பேசுகின்றோம், பிறரை விமர்சனம் செய்கின்றோம், பிறரை பழிக்கின்றோம். இதற்கு கருத்து சுதந்திரம் என தரமாக பொதியிட்டு விற்பனை செய்கின்றோம்.

இதே கருத்து சுதந்திரம் ஒருவர் தன்னைப்பற்றி தானே விமர்சனம் செய்யவும், பழிக்கவும், இழிக்கவும் உண்டுதானே ஏன் செய்யவில்லை? ஏன் செய்வதில்லை?

எங்களால் முடியாதவற்றை மற்றவனை செய்யவேண்டும் என்பது நல்ல விடயம் ஆனால் அவன் எப்போ செய்யவேண்டும் எப்போ முடிக்க வேண்டும் என கட்டளை இடமுடியாது.

இப்படித்தான் எம் விடுதலைப்போராட்டம்.

தமிழீழத்தேசியத்தலைவர்.. அவர் எம் விடுதலைப்போராட்டத்தின் அடையாளம் இதனை யாரும் சொல்லவில்லை அவரே கூறியுள்ளார். இந்திய இராணுவத்தின் போரின் உச்சக்கட்டம் தான் சாவடையலாம் என தெரியும்.. அப்போது கூறினார். இதே காட்டில் 200 வருடங்களுக்கு முன்னர் எம் மன்னன் பண்டாரவன்னியன் எம் விடுதலைப்போராட்டத்தின் அடையாளமாக இருந்து போராடினார். அவர் சரணடையவில்லை...இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்தார்.

அதுபோல நானும் எம் இனத்தின் சுதந்திரத்திற்காக அதே காட்டில் 200 வருடங்களின் பின்னர் போராடுகின்றேன் என்றார். எனவே நான் சாவடைந்தாலும் எங்கள் இலட்சியப்பயணம் முடியாது. என்னைப்போல் ஒருவன் இதே காட்டில் இருந்து ஜோசிப்பான் போராடுவான் என்று தன் பொறுப்பாளர் போராளிகளை தைரியமூட்டினார்.

ஆனால் எம் மக்கள் தான் தலைவர் காலத்தில் போராட்டம் முடியவேண்டும், தலைவர் காலத்தில் தீர்வு கிட்டவேண்டும் என்றனர். ஆனால் தலைவரைப்பொறுத்தவரை அவர் அப்படி ஒருபோதும் நினைக்கவில்லை. தனக்கு அப்படி எண்ணம் இருந்திருந்தால் தான் வரதராஜப்பெருமாள் போல இருந்திருக்கலாம் என்றார்.

2002 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கு அதன் குழுவினரை அனுப்பும் போது நாம் சர்வதேசத்துடன் சண்டை பிடிக்க போகின்றோம். அது எனக்கு தெரியும் ஆனால் உங்களுக்கு தெரியுமோ தெரியாது என கூறிய தலைவர்.. சர்வதேசத்துடன் சண்டை பிடித்தாலும் நான் என் மாவீரர்களின் இலட்சியத்தை கைவிட போவதில்லை..அப்படி ஏதாவது திணிப்புக்கள் வந்தால் கூட அது பிரபாகரனின் உயிர் இருக்கும் போது நடக்காது என இறுக்கமாகவும் தெளிவாகவும் கூறினார்.

நீங்கள் தான் எனக்கு தேசியத்தலைவர் என பட்டம் சூட்டினீர்கள். நான் எனது புரட்சிகர இயக்கத்தின் தலைவனாக இருக்க விரும்புகின்றேன். விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து எம் மக்களிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராடுவேன். என்றுதான் பலதடவைகள் கூறி இருக்கின்றார்.

இது தனது எண்ணங்களிற்காக தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் மீது அவர் ஆண்டுதோறும் செய்யும் சத்தியம். அதேபோல தான் மக்களும் சத்தியம் செய்து வருகின்றனர். தேசியத்தலைவர் தான் அரசியல் வாதியாக இருக்க விரும்பவில்லை என்பதற்கு இதுதான் காரணம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் தன் இலட்சியத்திற்காக உயிரை விட்டுக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் அவர்களின் கனவை கபடம் செய்யும் நோக்கில் பேரம்பேசி பிச்சை எடுக்கும் நிலைக்கு தான் போகமாட்டேன் என தெளிவாக கூறியிருந்தார்.

ஆகவே எம் இலட்சியம் உறுதியானது என்றோ ஓர் நாள் அது எட்டப்படும். அதுவரை இலட்சியத்தை கைவிடாது போராடுவோம். போராட்டத்தின் போது பல வழிகள், பல நெளிவு சுழிவுகள், பல தந்திரோபாயங்கள் வரும் ஆனால் இலட்சியம் மாறாது.

அண்மையில் பர்மாவில் ஆங்சாங் சூசி அவர்களின் விடுதலை பற்றி சிந்தியுங்கள்.. இரு தசாப்தமாக நடை பிணமாக இருந்தார் அதுவும் ஓர் போராட்டமே அவரது அப்பா ஓர் இராணுவ தலைவர் ஆனால் சூசி தன் தந்தை வழிய பின்பற்றாது நிலமைகேற்ப போராடினார்.

குறுகியகால அரசியல் இலாபம் பெற நினைத்திருந்தால் 20 வருடமாக ஏன் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். ஆங்காங் சூசிக்கு சொத்துக்கள் உள்ளன, சுகபோகமாக வாழ வேணும் என்றால் அரசுடன் டீல் பேசி, சமாதானம் பேசி இருக்கலாம் அல்லவா..

சூசியின் இலட்சியம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.. இங்கு சொல்வது என்னவெனில் தனது இலட்சியத்திற்காக பொறுமையுடன் போராடினார் என்பதே..

எம் வாழ் நாளில் எதுவும் நடக்காமல் போகலாம்.. எம் அடுத்த சந்ததிக்கு கூட எம் போராட்டம் துயரத்தை கொடுக்கலாம்.. ஆனால் எம் பணி எம் மக்களின் துயரங்களைத்துடைத்துக்கொண்டு தொடர்ந்தும் பல வழிகளில் இலட்சியத்தை நோக்கி போராடுவதே எம் பணியாகும்.

யாரும் என் காலத்தில் தீர்வு கிடைக்க வேண்டும் என போராட நினைக்க வேண்டாம். இந்த கருத்துமாற்றம் எம்மிடையே அவசியம். எப்போ ஒரு விடுதலைப்போராட்டம் தனது விடுதலைக்கு காலத்தை வரையறுக்கின்றதோ அன்றில் இருந்தே அந்த போராட்டத்தின் இலட்சியம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போகபோவது என்பதுதான் அர்த்தம்.

எப்போ ஒரு தலைவன் என் காலத்தில் எப்படியாவது முடிவு வரவேண்டும் என நினைத்து செயற்படுகின்றானோ அது சுய நலமே , அது அவனை இராஜதந்திரம் எனும் நவீன அரசியல் சாக்கடைக்குள் தள்ளிவிட்டு அவனது இலட்சியத்தை மழுங்கடித்து விடும்.

எம் தலைவரும் எம் மாவீரர்களும் அதனை செய்யவில்லை. சிலர் செய்தார்கள் அவர்கள் இப்போ எங்கிருக்கின்றார்கள் என நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

ஆகவே எம் இனிய மக்களே.. எமக்கான விடுதலை என்றோ ஒரு நாள் கிடைக்கும் .. அதுவரை இலட்சியத்தை சுமந்து நாம் பயணிப்போம்....

தொடரும்

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%88

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.