Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களை மனதில் நினைப்போம் தமிழீழத்தை மீட்க உறுதியெடுப்போம்…

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களை மனதில் நினைப்போம் தமிழீழத்தை மீட்க உறுதியெடுப்போம்…

தமிழீழ விடுதலைப் போரில் மாவீரர் தியாகங்கள் முதன்மை பெறுகின்றன. லெப்.சங்கருடன் துவங்கிய மாவீரர் தியாகங்கள் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. மூன்று தசாப்த காலங்கள் தமிழீழ விடுதலைப் போரை உலகம் உற்று நோக்குவதற்கு இந்த மாவீரரின் தியாகங்கள் தான் வழிவகுத்தன என்பதில் மாற்று கருத்திற்கு இடமேயில்லை.

தரை, கடல், மற்றும் ஆகாயம் என நம் வீரமறவர்கள் செய்த சாதனைகள் கொஞ்சமல்ல. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல் எம்மண்ணில் எம்மக்களின் ஆதரவுடன் விடுதலை தீயில் தம்மை ஆகுதியாக்கிய வீர மறவர்களின் கனவுகளை நனவாக்கவேண்டிய கடமை எம்மண்ணில் உதிர்த்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு.

இன்று தமிழீழ விடுதலை போர் மௌனித்த நிற்கின்றது. இந்த நிலையில் அடுத்தது என்ன என்பது என்ற கேள்வி நம் எல்லோர் மனங்களிலும் எழுகின்றது. முன்னுக்கு பின் முரணாக வரும் அறிக்கைகள் சில எம்மக்களை குழப்பிவருகின்றது. விடுதலைப்போரில் ஆரம்பகாலம் தொட்டு எமக்குள் இருந்த கருத்து ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் இருந்த முரண்பாடுகளின் நாம் பலவற்றை சாதிக்கத்தவறினோம். இதுபோன்ற இன்னுமோர் வரலாற்றுத்தவறு நிகழ்வதற்கு நாம் இடம்கொடுக்ககூடாது. சர்வதேசமெங்கிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சிந்தித்து ஒற்றுமையுடன் வாழவேண்டிய காலமிது.

தமிழீழ விடுதலைப் போரை பொறுத்தமட்டில் பலர் பங்காளிகளாக இருந்தபோதிலும் சிலர் பார்வையாளராக இருந்தார்கள். ஆனால், இன்று பங்காளிகளாக இருந்தவர்கள் வேதனையில் ஆழ்ந்திருக்க பார்வையாளராக இருந்தவர்கள் விடுதலை போரை விமர்சிக்கும் நிலையினை நாம் காண்கின்றோம்.

ஏன் இந்த நிலை என்பதனை அறிந்து அதற்கான மாற்றுவழிகளை தேடுவதனை விடுத்து விமர்சனம் மட்டுமே நம் எண்ணங்களும் சிந்தனைகளும் நிறைவேற்றும் தீர்வாகாது என்பதனை நாம் முதலில் சிந்திக்கவேண்டும்.

தமிழீழ விடுதலை போரில் ஒவ்வொரு மாவீரரின் தியாகங்களையும் நாம் இன்று மீண்டும் ஒரு தடவை ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதோடு, அந்த ஒவ்வொரு மாவீரரின் கனவுகளையும் நனவாக்கும் முயற்சியில் நாம் மீண்டும் உறுதியெடுத்துக்கொள்ளவேண்டும். அந்த மாவீரர்களின் தியாகங்களை நாம் வீணடிக்கக் கூடாது. இந்நாட்களில் அவர்களை நம் மனதில் நிறுத்திக்கொண்டு அக்கபூர்வமாக சிந்திக்க முன்வரவேண்டும்.

முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் நமது போராட்டப்பாதையில் மிகப்பெரிய பின்னடைவு என்பதனை மறுப்பதற்கில்லை. வெற்றி சிங்களத்திற்கும், தோல்வி தமிழனுக்கும் சொந்தமானதுமல்ல நிரந்தரமானதுமல்ல. இப்போதுள்ள நிலையில் பின்னடைவுகளை நாம் சந்தித்தாலும் தோல்வி நமக்கு நிரந்தரமானதல்ல. தோல்விக்கான பாதைகளை சரியாக உணரும்போது வெற்றிக்கான பாதை திறக்கப்படும். மிகப்பெரிய மோசமான தோல்விகள் கூட பின்நாட்களில் மிகப்பெரிய வெற்றியின் வரலாறாக அமைந்துவிடலாம். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டவர்கள் மீண்டும் வரலாறு படைக்கின்றார்கள் என்பதுபோல் கால நேரமறிந்து பணியாற்றுவோர் கரைசேர்வார்கள். ஒற்றுமையும் வீரமும் ஒருமுகப்படும் போதே ஒடுக்குமுறையை நாம் தகர்க்கமுடியும். வீரமும் விவேகமும் ஒன்றிணையும் போதே விடுதலை பிறக்கும்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் தமிழர்களின் புலம்பெயர் தேசம் தமிழீழ விடுதலைப்போரின் பின்தளமாக இருந்தது. ஆனால், முள்ளிவாய்கால் சம்பவங்களுக்குப் பின்னர் தமிழர்களின் விடுதலையின் ஒரே நம்பிக்கையாக புலம்பெயர்தேசம் மாறியுள்ளது. எமது மக்கள் இதனை யதார்த்தபூர்வகமாகச் சிந்தித்து பணியாற்றாவிடின், ஒரு குடையின் கீழ் பணியாற்ற முன்வராவிடின் எந்த நம்பிக்கையான விரும்பத்தக்க மாறுதல்களும் ஏற்படப்போவதில்லை என்பதனை முதலில் சிந்திக்கவேண்டும்.

இதனை உணர்ந்து இன்று தேசியத்திற்காக பணிசெய்யும் உறவுகள் அக்கறையிலெடுக்கவேண்டும். ஒற்றுமை இன்மையே தமிழரின் சாபக்கேடு என்ற வரலாற்றுப்பழியை சுமப்பதனை நாம் தவிர்த்து இன்று நம் முன்னுள்ள வரலாற்றுக்கடமையை நிறைவேற்ற இந்த புனிதமான நாளில் உறுதியெடுத்துக்கொண்டு செயற்படுவோம்.

விடுதலை பற்றியும் நமது தேசியம் பற்றியும் மணிக்கணக்கில் பேசலாம். பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், யாரொருவன் தன் தேசத்திற்காக தன்னுயிரை தரத்துணிந்தானோ அவனே உயர்ந்தவன்.

தமிழீழ தேசம் போற்றிவணங்கும் மகோன்னுதமான மனிதப்பிறவிகளான மாவீரர் செல்வங்களை இந்நாளில் மனதில் நினைத்து அவர்களின் கனவுகளை நனவாக்க ஒன்றிணைவோம் என இந்நாளில் நாம் நாம் உறுதியெடுத்துக்கொள்வவோம்.

ஆசிரியர்.

மீனகம் தளம்

http://meenakam.com/2010/11/27/14652.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.