Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபட்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 3, டிசம்பர் 2010 (16:13 IST)

ராஜபட்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்: வைகோ

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சே கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழ் இனத்தை தன் முப்படைகளையும் ஏவி படுகொலை செய்த மகிந்த ராஜபட்சே லண்டன் மாநகரில் நட்சத்திர ஓட்டலுக்குள்ளும் தங்க முடியாமல், வீதிக்கும் வரமுடியாமல், தூதரகத்திலும் இருக்க முடியாமல் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேட்டு மூடி மறைக்கப்பட்ட கவச வண்டியில் சென்று இருக்கிறார்.

லண்டனில் உறைபனி கொட்டிக் கொண்டிருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் இலங்கைத் தூதரகத்தையும், ராஜபட்சே முதலில் தங்கியிருந்த ஓட்டலையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள். கைகளில் புலிக்கொடிகளையும் பிரபாகரன் படத்தையும் ஏந்தியவாறு, "ராஜபட்சேவைக் கைது செய்!" என்றும், என்று முழக்கமிட்டுள்ளனர்.

இதற்கு முதல்நாள் டிசம்பர் 1ம் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேரவையில் ராஜபட்சே உரையாற்றுவதாக செய்யப்பட்ட ஏற்பாட்டினைப் பல்கலைக் கழகப் பேரவை நிர்வாகம் ரத்து செய்தது.

1823ம் வருடத்தில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அதிபர் பேச அழைக்கப்பட்டு, கூட்டத்தை ரத்து செய்து விட்டோம் என்று அறிவித்தது இதுவே முதல்முறை.

தமிழர் நெஞ்சைப் பிளக்கும் துயரமான செய்தி நவம்பர் 30ம் தேதி இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. சிங்கள ராணுவத்தால் ஈழத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் நம் ரத்தத்தைக் கொதிக்கச் செய்கிறது.

இலங்கையில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. விசாரணை அதிகாரியான பேராசிரியர் கிறிஸ்ட் ஆஃப் ஹேல்ஸ் தாங்க முடியாத அதிர்ச்சியுற்றதாகவும், இந்தக் கொடூரக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு முழு உண்மையும் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கொடுமைக்கு உள்ளான தமிழ்ப் பெண்களில் 27 வயதான இசைப்பிரியா என்று அழைக்கப்படும் ஷோபா எனும் தமிழ்ப் பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தியாளராகவும் இருந்த இந்தப் பெண் சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பின்னர் நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிங்கள ராணுவம் தமிழ் ஈழப் பெண்களை கற்பழித்து சுட்டுத் தள்ளும் இன்னும் பல காட்சிகள் ஒளிபரப்ப முடியாத அளவுக்குக் கொடூரமானவை என சேனல் 4 நிர்வாகமே அறிவித்துள்ளது.

இதற்கு மத்தியில் உலகத்தையே பரபரப்பாக்கி வருகிற விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளில் இலங்கை ராணுவமும், அதிகாரிகளும் போர்க்காலத்தில் நடத்தினார்கள் என்று சொல்லப்படும் குற்றங்கள் ராஜபட்சேவுக்கு சிக்கலான பிரச்சினையாக உள்ளது.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், இலங்கை அரசின் போர்க்

குற்றங்கள் குறித்தும் விசாரிக்க அமைத்துள்ள மூவர் குழுவிடம் சேனல் 4 நிறுவனம் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சே கூட்டம் போர்க் குற்றவாளிகளாகப் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தக் போர்க் குற்றத்துக்கு இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெரிதும் உதவியிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் அதன் பின்னால் இன்னும் மறைந்து இருக்கும் மர்மங்களும் செய்யப்பட்ட துரோகங்களும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

nakkheeran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.