Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அவுஸ்ரேலியாவும் அழைப்பு விடுக்க வேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அவுஸ்ரேலியாவும் அழைப்பு விடுக்க வேண்டும்"

[Friday, 2010-12-03 12:04:38]

சிறிலங்காவில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுக்க வேண்டும் என கோரும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்ரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன்.

இவ்வாறு அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Virginia Judge தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் முழுவிபரமாவது:

எனது தேர்தல் தொகுதியிலுள்ள சிறிய ஆனால் பிரபலமான மக்கள் குழுமம் தொடர்பாக நான் பேசுகிறேன். சிட்னியின் ஸ்ரெயித்பில்ட் தேர்தல் தொகுதியிலுள்ள எனது சமூகத்திற்கு இந்தச் சிறிய மக்கள் குழுமம் அதிளவிலான பங்களிப்பினைச் செய்கிறது.

எனது இந்தத் தேர்தல் தொகுதியில் வசித்துவரும் தமிழர்கள் உறுதியான குடிமக்கள். கல்வி தொடர்பான காத்திரமான ஈடுபாடு, வேலையே கண்ணாயிருக்கும் பாங்கு, குடும்ப வாழ்வுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் தாம் வாழும் சூழலில் சிறந்த சமூகத்தினை உருவாக்குவது எனப் பல சிறந்த பண்புகளை இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

எனது தேர்தல் தொகுதியிலுள்ள தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்விலும், கடமைகளிலும், தொழில் முனைப்புக்களிலும் ஏன் தங்களது சமூகம்சார் கட்டமைப்புக்களிலும் இந்தப் பண்புகளைத் திறம்படப் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகிறது.

தங்களது பொருளாதார மற்றும் இதர தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு தாம் வாழும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழுவதற்கு ஏதுவாக இவர்கள் அயராது உழைக்கிறார்கள்.

இவை தவிர இந்த மக்கள் பலதரப்பட்ட சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறார்கள். மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான நிதி திரட்டலில் இவர்கள் அண்மையில் ஈடுபட்டிருந்ததையும் நான் அறிகிறேன்.

எனது தேர்தல் தொகுதியினைச் சேர்ந்த பிரசாந் செல்லத்துரை என்ற இளைஞன் 2008ம் ஆண்டு இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவுஸ்ரேலிய ஜிம்னாஸ்ரிக் அணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்கிறான். அணி சில்வர் பதக்கத்தினை வெல்லுவதற்கு பிரசாந் செல்லத்துரை முன்னின்று உழைத்திருக்கிறான் என்பதை நான் அறிகிறேன்.

அண்மையில் புதுடில்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவின் பொது இவன் இரண்டு தங்கப் பதங்கங்களைப் பெற்றிருக்கிறான்.

இந்தப் புறநிலையில் இந்தத் தமிழர்களின் தாயகமாம் சிறிலங்காவில் இவர்களது உறவுகளுக்கு எதிரான போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை கடுந்துயருடன் நான் அறிந்து கொண்டேன்.

அத்துடன் 2009ம் ஆண்டு போர் முடிவுக்குவந்ததைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் இடம்பெயந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றபோதும் கூரைகளற்ற வீடுகளில் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பின்மை மற்றும் நீதிமுறை போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள் என அறியமுடிகிறது.

போரின் இறுதி நாட்களில் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினது செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவினை அமைத்திருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் மௌனம் காப்பது பற்றி அவுஸ்ரேலியத் தமிழர் அமைப்புக்களின் கூட்டமைப்பினது தலைவர் கலாநிதி விக்ரர் ராஜகுலேந்திரன் மற்றும் அவுஸ்ரேலியத் தமிழர் காங்கிரசின் தலைவர் கலாநிதி சாம் பிறை ஆகியோர் என்னிடம் தங்களது அதிருப்தியினை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆதலினால் சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்புவிடுக்கப்படவேண்டும் என அழைப்பு விடுக்கும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவுஸ்ரேலிய அரசாங்கமும் இணைந்து கொள்ளவேண்டும் என நான் கோருகிறேன்.

சிறிலங்கா அரச படைகளினால் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 தமிழ் இளைஞர்கள் ஜெனீவா சாசனத்தின் அடிப்படையில் நடாத்தப்படவேண்டும்,

வடக்குக் கிழக்குப் பகுதியில் நிலவுகின்ற இராணுவமயப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதோடு அங்கு சட்டமும் ஒழுங்கும் மீளப்பெறப்படுவதற்கு வழிசெய்யவேண்டும்,

இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவேண்டும், இஸ்ரேலின் மேற்குக் கரைப் பாணியிலமைந்த சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,

சிறிலங்காவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதன் ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும், மற்றும் உண்மையான அமைதியும் இன நல்லிணக்கமும் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை அவுஸ்ரேலிய அரசாங்கமும் மேற்குறித்த நாடுகளுடன் இணைந்து முன்வைக்கவேண்டும்.

சிறுபான்மை இனமொன்றுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நாடொன்றில் தங்களது தாயகத்தினை அமைப்பதற்கான போரின் மீது நம்பிக்கைவைத்துச் செயற்பட்டமைக்காக இந்த மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். மிக மோசமாகத் தண்டிக்கப்படும் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு இந்த மக்கள் மேற்கினைக் கோருகிறார்கள்.

இந்த நிலையில் எங்களது ஆதரவினை வழங்குவதற்கு நாம் பின்னடிப்பது முறையற்றதல்ல. அப்பாவி மக்களைக் கொலைசெய்வது தவறென்றும் இந்தக் குற்றத்தினைப் புரிந்தவர்கள் யாரோ அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறுவதற்கும் நாங்கள் தயங்குகிறோம்.

தமிழர்கள் என்ற எங்களது நண்பர்களுக்கு நாங்கள் ஆபத்தில் உதவுவோம்.

நான் ஒரு கிறிக்கெற் வீரராக இருந்திருந்தால், சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கந்தான் தமிழ் மக்களுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பு என்பதை நான் முழுமையாக அறிந்திருந்தால், தமிழர்களது பரிதாப நிலை தொடர்பாக எதனையும் குறிப்பிடாமல் அந்த நாட்டினது பிரதிநிதிகளுடன் கிரிக்கெட்ட விளையாடுவது முறையாகுமா என்ற கேள்வியினை எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கேள்வி இந்த அவையிலுள்ள அனைவருக்குமானதே.

முடிவில் எங்களது பணிகளைத்தானே நாங்கள் செய்கிறோம் என எவரும் கூறிவிடமுடியாது. விளையாட்டு, தொழில்துறை, வர்த்தகம் அல்லது அரசியல் என நாங்கள் எந்தத் தொழிலையும் செய்யலாம், அடிப்படையில் நாம் அனைவரும் மனிதர்களே.

அரசியலை அரசியல் வாதிகளிடம் மாத்திரம் நாங்கள் விட்டுவிடக்கூடாது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அரசியல் நிறைந்து கிடக்கிறது. ஆதலினால் எங்களது உறவு, கூட்டு மற்றும் வேலைத்தளம் ஆகியவற்றிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது.

ஆதலினால் தாம் விரும்பியதைத் தெரிவு செய்வதற்கான உரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு, அரச சேவைகள், நீதி மற்றும் பிரதிநிதித்துவம் போன்ற அம்சங்களில் நாட்டினது அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு நான் சிறிலங்காவின் ஆட்சியாளர்களைக் கோருகிறேன்.

முதன்மையான இந்த விடயத்தினை எனது கவனத்திற்குக் கொண்டுவந்த எனது தேர்தல் தொகுதியில் வசிக்கும் தமிழர்களின் சார்பாக எனது இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு வேண்டி அவுஸ்ரேலியப் பிரதமர் மற்றும் வெளி விவகார அமைச்சருக்கு நான் நேரடியாகக் கடிதம் எழுதவுள்ளேன். இறுதியாக பிரசித்தி பெற்ற தமிழ் பழமொழி ஒன்றைக் கூறி எனது இந்த வாதத்தினை நிறைவு செய்கிறேன். அதாவது 'கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்'. [in conclusion, in the words of the popular Tamil proverb, popular agitation leads to justice].

இலங்கைத் தமிழர்களது விடயத்திலும் இதுதான் நடக்கும் என நான் பிரார்த்திக்கிறேன்.

மொழியாக்கம்: தி.வண்ணமதி.

*The Hon. Virginia JUDGE, BEd MP: Member of the Legislative, Assembly Member for Strathfield, Minister for Fair Trading, Minister for the Arts, Member of the Australian Labor Party.

நன்றி:புதினப்பலகை.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.