Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு மேர்வின் டி சில்வாவாக செயற்பட்ட மகிந்தா!

Featured Replies

சிறிலங்கா ஜனாதஜபதி மகிந்த ராஜபக்சவை இலண்டனுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகமும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் அறிவுறுத்தி இருந்ததாக சிறிலங்கா கார்டியன் எனும் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஆனால் இவர்களின் அறிவுறுத்தல்களையும் மீறி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்த பின்னணி குறித்து இந்த இணையத்தளத்தில் தயா ரணசிங்க எனும் ஊடகவியலாளர் நேற்று எழுதியுள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதரகமும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலண்டனுக்கு தற்போது விஜயம் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்ததாக இவர் தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். >இச் செய்திக் கட்டுரையில் அவர் தெரிவித்த முக்கிய விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'ஒக்ஸ்போட் பல்கலைக்கழக்கத்தில் பல்வேறுபட்ட நாடுகளையும், இனங்களையும் சேர்ந்த மக்கள் பலவகைப்பட்ட அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர்.

இந்தியா, பங்களாதேஸ், துருக்கி மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் என இப் பல்கலைக்கழகத்தில் தமக்கான அமைப்புக்களை உருவாக்கி ஆண்டு தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வலுகின்றனர்.

இந் நிகழ்ச்சிகளுக்கு தமது நாடுகளிலிருந்து கலைஞர்களையும், அரசியல் பிரமுகர்களையும் உரையாற்ற இம் மாணவர் அமைப்புக்கள் அழைப்பார்கள். ஆனால் இதற்கான முன் அனுமதியை இம் மாணவர் ஆமைப்புக்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து இவ்வனுமதி கிடைத்த பின்னரே பல்கலைக்கழகத்தின் கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்தி மாணவர் அமைப்புக்களின் தலைவர்கள் உரையாற்ற வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பிதழை அனுப்புவார்கள்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் 16 சிங்கள மாணவர்களைக் கொண்ட சிறிலங்காவின் மாணவர் அமைப்பும் உள்ளது. இந்த மாணவர் அமைப்பும் இரண்டு குழுவாகப் பிரிந்திருப்பதால், எட்டு சிங்கள மாவர்களே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

இந்த மாணவர் அமைப்பின் தலைவர் டிலான் பெனாண்டோ எனும் மாணவரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமது மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதேவேளை, ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்திற்கும், இப் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புக்களுக்கும் எவ்வித தொடர்புகளும் கிமையாது. ஓக்ஸ்போர்ட் ஒன்றியம் தனியான நிர்வாகத்தைக் கொண்டு இயங்கி வருகின்றது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி கற்று வரும் இலங்கையைச் சேர்ந்த எந்த மாணவர்களும் இந்த ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இல்லை.

இது இவ்வாறிருக்க, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்ற அழைப்புக் கிடைத்தமை தொடர்பில் சிறிலங்காவில் பெருமையுடன் கதைக்கப்பட்டது.

ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த அழைப்பானது சர்வதேச ரீதியில் அரசாங்கத்தின் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இலண்டனில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சிங்கள மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வெறுமையாக இருக்கின்ற இருப்பிடங்களை நிரப்ப சிங்கள மக்கள் அழைக்கப்படுவது தான் நானறிந்த உண்மை.இந் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இலண்டன் விஜயம் பெருந்தொகைப் பணத்தையும், நேரத்தையுமே வீணடித்துள்ளது. இதனையே இங்குள்ள அனைவரும் தெரிவிக்கின்றனர்.

Oxford University பகுதி அளவில் மிகவும் சிறிய பிராந்தியம் என்பது மட்டுமல்லாமல், இப் பகுதியின் பொலிஸ் நிர்வாகமும் சிறிய கட்டமைப்பையே கொண்டுள்ளது.

இந் நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுமானால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இப் பொலிஸ் நிர்வாகத்தால் முடியாது. அதனால், ஏனைய பிரதேசங்களில் இருந்து மேலதிக பொலிஸார் செலவினைக் கருத்திற் கொண்டு அழைக்கப்படமாட்டார்கள்.

அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பில் போரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்யவில்லை.

அதனால், பல்லாயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போகின்றார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு பொலிஸார் ஒகஸ்போர்ட் ஒன்றியத்தின் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டது.

சனல் 4 உட்பட பிரித்தானிய ஊடகங்கள் மற்றும் சில சர்வதேச அமைப்புகளும் சிறிலங்காவின் குற்றச்செயல்கள் தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இப் பயணத்தை தெரிவு செய்திருக்கக்கூடாது.

இந் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டன் விஜயத்தை மேற்கொள்ளக்கூடாது என பலர் தெரிவித்திருந்த நிலையில், அதனை ஏற்றுக் கொள்ளாது விஜயம் செய்த அவர் கசப்பான அனுபங்களுடன் கொழும்பு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலண்டனுக்கு விஜயம் செய்தால் போர்க்குற்றங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தன.

ஆனால், 'நான் வருகிறேன், முடிந்தால் நீ பிடித்துப் பார்' எனச் சவால் விடும் தோரணையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னொரு 'மேர்வின் டி சில்வா' போன்றே செயற்பட்டுள்ளார்.

இது ஒரு நாட்டின் தலைவர் மேற்கொள்ளக்கூடிய துணிவானதொரு செயலாக ஒரு போதும் இருக்க முடியாது' என தயா ரணசிங்க எனும் ஊடகவியலாளர் தனது செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={79705A57-5A00-4051-A55D-06B51026A51B}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.