Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற ஆவணங்களில் காணாமல் போனோர் குறித்த பட்டியலும் இணையும் சாத்தியம் -இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்குற்ற ஆவணங்களில் காணாமல் போனோர் குறித்த பட்டியலும் இணையும் சாத்தியம் -இதயச்சந்திரன்

கடந்த புதன்கிழமையன்று, விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றிய ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் படுகொலை குறித்த செய்தி ஆய்வு ஒன்றினை பிரித்தானிய “சனல்4′ தொலைக்காட்சி ஒளிபரப்பியது. போர்க்குற்ற மேகங்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ள இவ்வேளையில் புதிது புதிதாக வெளிவரும் காணொளி ஆதாரங்கள், ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர் அமைத் துள்ள போர்க் குற்ற விசாரணைக்கான ஆலோசனைக் குழுவிற்கு அழுத்தங்களைக் கொடுக்குமென எதிர்பார்க்கலாம்.

இக்காணொளி குறித்த செய்தி ஆய்வினை மேற்கொண்ட, “சனல் 4′ தொலைக்காட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோநாதன் மில்லர் (Jonathan Miller) பிரித்தானிய பிரபல சட்டத்தரணி ஜுலியன் நோல்ஸ் கியூசி (Julian Knowles QC) இதில் காண்பிக்கப்பட்ட படுகொலைச் சம்பவங்கள், போர்க் குற்றம் தொடர்பான முக்கிய ஆவணமாகக் கருத முடியுமா என்று வினவியதற்கு, அதனை அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டார்.

மேற்படி மோதலில் கொல்லப்பட்டவர்களின் கைகள் கட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் இதனையொரு போர்க் குற்றமாகக் கருத வேண்டுமென்பதே அவரின் வாதமாக அமைகிறது. 27 வயதான இசைப் பிரியாவின் படுகொலையில் நந்திக் கடலின் வடக்குப் புறமாக நகர்ந்த 53 ஆவது படையணி ஈடுபட்டிருக்கலாமென “சனல் 4′ தொலைக்காட்சியின் வெளிநிலைத் தொடர்பாளர் ஜோநாதன் மில்லர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கெனவே இத் தொலைக்காட்சி, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட காணொளி பொய்யானதென அரச தரப்பினர் கூறினாலும், ஐ.நா. சபையைச் சேர்ந்த பிலிப் அல்ஸ்ரன் இக்காணொளி நம்பகத்தன்மை வாய்ந்ததென பல பகுப்பாய்வாளர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

போர்க் குற்ற விசாரணை தொடர்பான விவகாரங்கள் சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில், காணாமல் போகடிக்கப்பட்ட மக்கள் குறித்த மாநாடொன்று கடந்த வியாழக்கிழமையன்று (9.12.2010) இல் லண்டனில் ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் போகடிக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேசக் குழுவின் (6th Internatio nal Committee Against Disappearances) இம்மாநாடு 9 12 திகதி வரை குர்தீஸ்

சமூக மையத்தில் நடைபெறுகிறது.

காணாமல் போகடிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள், தமது நேரடியான வாக்கு மூலங்களை இம்மாநாட்டில் தெரிவிப்பதோடு, “யுத்தமும் காணாமல் போகடிக்கப்படுதலும்’, “தேசிய இயக்கங்களும் காணாமல் போதலும்’, “மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டமும் காணாமல் போகடிக்கப்படுதலும்’ என்கிற தலைப்புகளில் பல கலந்துரையாடல்களும் கருத்துரைப்புக்களும் நிகழ்ந்து வருகின்றன.

மாநாட்டின் இறுதி நிகழ்வாக, இன்று ஞாயிறு மாலை, ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றினையும் இந்த மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை பிரித்தானிய தமிழர் பேரவை, ஆர்மேனிய சமூகம், மனித உரிமைப் பரப்புரைக்கான பிலிப்பைன்ஸ் அமைப்பு, கொலம்பிய கருத்தாரவுக் குழுமம், பிரித்தானியா வாழ் எத்தியோப்பிய சமூகம், மக்கள் போராட்டத்திற்கான சர்வதேச அமைப்பு, காணாமல் போகடிக்கப்பட்ட பலுச் (Baluch) மக்களிற்கான அனைத்துலகக் குரல் (IVBMP) குர்தீஷ் சமூக மையம், குர்தீஷ் சம்மேளனம், அரசியல் கைதிகளின் கருத்தாரவுக் குழுமம், சிலி நாட்டு அரசியல் கைதிகளுக்கான அமைப்பு மற்றும் தென்னாசிய கருத்தாரவுக் குழுமம் போன்ற பல அனைத்துலக அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

இவை தவிர இந்தியாவிலிருந்து மணிப்பூர் முற்போக்கு இளைஞர் முன்னணி, இந்திய சோசலிஷ ஒன்றிய மையம் மற்றும் சமாதானம் ஜனநாயகத்திற்கான கருத்தாரவுக் குழுமமும் இம் மாநாட்டில் கலந்து கொள்கின்றன.

இந்த நீண்ட பட்டியலில் லெயிலா காலிட் (Leila Khalaid) இணைந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கையில் இயங்கும் மக்கள் கண்காணிப்புக் குழு (Civil Monitoring Commission) வெளியிட்ட காணாமல் போகடிக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியலும் விநியோகிக்கப்படவிருப்பதாக லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

போர்க் காலத்தில் இலங்கையில் காணாமல் போனோரின் விவரங்களும் அவை தொடர்பாக சர்வதேச மனித உரிமைச் சங்கங்கள் கையாண்ட விதங்களும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படலாமென தெரிய வருகிறது. அதேவேளை, அனைத்துலக போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுக்கா விட்டால் அதனை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாதென மங்கள சமரவீர கூறும் செய்தி, இலங்கை எதிர்கொள்ளும் இராஜதந்திர நெருக்கடிகளையும் அதனால் ஏற்படப் போகும் மோசமான பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டுவதõக அமைகிறது.

ஜனாதிபதியின் லண்டன் பயணமும் அங்கு ஏற்பட்ட சம்பவங்களும் இலங்கை அரசியலில் பல அதிர்வுகளை இன்னமும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது உண்மை. குற்றங்களைப் பற்றிப் பேசினால், அவை புலிகளின் வேலையாக இருக்குமென்று வியாக்கியானம் செய்யும் ஆட்சியாளர்கள், எதிர்த் தரப்பு சிங்கள அரசியல்வாதிகளையும் தேசத் துரோகம் என்கிற எல்லைக்குள் நிறுத்த முற்படுவது வேடிக்கையாக

விருக்கிறது.

பத்திரிகை நேர்காணலொன்றில் “தான் எந்தச் சந்தர்ப்பத்திலும் “போர் குற்றம்’, “புலம் பெயர்’ போன்ற சொற் பதங்களைப் பயன்படுத்தவில்லையென ஐ. தே. கட்சியின் பிரதித் தலைவர் கரு. ஜயசூரிய, மகா வம்சத்தின் மீது சத்தியம் செய்தாலும் தலையங்கத்தில் பயன்படுத்தப்பட்ட இச் சொற்களை வைத்து, அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றில் கொண்டு வர அரச தரப்பினர் அவசரப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவற்றோடு, ஜயலத் ஜயவர்த்தனா மீது நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட நகக் கீறல் தாக்குதலும், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னா மீது லண்டன் நிகழ்வில் உரையாற்றி நாடு திரும்பும் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கும்பöலான்றினால் மேற்கொள்ள முனை ந்த தாக்குதலும் சில செய்திகளை வெளிப்படுத்துவதை அவதானிக்கலாம்.

இவைதவிர, பிரிவினையைத் தூண்டியது, அரசிற்கு எதிராகச் செயற்பட்டது, நாட்டு இறைமைக்கு ஆபத்தை உருவாக்கியது, புலம் பெயர் நாடுகளில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிராக தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தது போன்ற பல போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து, ஐ. தே. க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனாவிற்கெதிரான பிரேரணை ஒன்றினை, ஆளும் தரப்பு 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

எதிர்க்கட்சியினர் மீதான ஆட்சியாளர்களின் அழுத்தங்கள் அதிகரிக்கும் இவ் வேளையில் வத்திக்கான் திருச்சபையில் “காடினல்’ ஆக கௌரவமளிக்கப்பட்ட மெல்கம் ரஞ்சித் அடிகளாரும், ஜனாதிபதிக்கு ஆதரவாக, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆற்றிய உரையானது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

வெளிநாட்டில் இலங்கை அரசின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதை தான் கண்டிப்பதாகவும் இதனூடாக தமிழர்கள் எதனையும் பெற முடியாதெனவும் இத்தகைய போராட்டங்கள் தமிழ் மக்களை மீண்டும் அழிவிற்கே இட்டுச் செல்லுமென அரசியல் பேசியுள்ளார் குருவானவர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், தமிழ் இறைமையை ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்கிற தேசிய இனப்பிரச்சினையெல்லாம், அடிகளாருக்கு ஏற்புடையதாக அமையவில்லை போல் தெரிகிறது. உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவிருக்கும் இமானுவல் அடிகளாரை மனதில் இருத்தி, கத்தோலிக்க குருமார் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, நாட்டைப் பிரிக்கும் சதி முயற்சிக்கு துணை போவதாக வருத்தமடையும் ரஞ்சித் மெல்கம் அடிகளாருக்கு உரிமை கோருவது, கத்தோலிக்க மதக் கோட்பாடுகளுக்கு முரணானது போல் தெரிகிறது.

தற்போது “இந்தியக் கள அறிக்கை’ (The Ground Report India) என்கிற இணையத்தளத்தில், வி. எஸ். சுப்பிரமணியம் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் “இந்தியாவின் போரை இலங்கை நடத்தியதா?’ என்கிற தொனியில் எழுதப்பட்ட ஆய்வானது, இலங்கை இந்திய இராஜதந்திர மட்டத்தில் புதிய சிக்கலொன்றை தோற்றுவித்துள்ளதை அவதானிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை, காங்கிரஸ் தலைவி சோனியாவின் உயர்மட்ட முகவர்களான சிவசங்கர் மேனனும், எம். கே. நாராயணனும் இணைந்து வழி நடத்தியதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆட்சியாளர் மீது புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள் முன் வைக்கும் போர்க் குற்றச்சாட்டுக்கள் இந்தியாவை நோக்கியும் திரும்பக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாலேயே ஸ்ரீலங்காவையும் காப்பாற்ற இந்திய மத்திய அரசு முற்படுவதாகக் கட்டுரையாளர் சந்தேகிக்கின்றார்.

ஏற்öகனவே இந்தியாவின் இரட்டை வேடத்தையிட்டு அதிருப்தியடைந்துள்ள தமிழ் மக்கள் இக்கட்டுரை வெளிப்படுத்தும் புதிய பார்வையினால் மேலும் இந்தியா மீது விசனமடையக் கூடிய நிலையை நோக்கித் தள்ளப்படுவார்கள்.

அதேவேளை, நீண்ட கடிதம் எழுதுவதில் வல்லவரான கலைஞர் கருணாநிதிக்கே கடிதம் எழுதும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவின் நடவடிக்கைகளை, எவரும் பெரிதுபடுத்தியதாகத் தெரியவில்லை.

இந்தியா இல்லாமல் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாதென அடம் பிடிப்போரின் கனவுக் கருத்துருவத்தில் இனிப் பாரிய விரிசல்கள் உருவாகும் வாய்ப்புக்களே அதிகம்.

இருப்பினும் அடுக்கடுக்காக வெளிவரும் போர்க்குற்ற ஆதாரங்களை எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படும் இலங்கை அரசை, இந்தியாவினாலும் காப்பாற்ற முடியாமல் போகலாம்.

- இதயச்சந்திரன்

நன்றி: வீரகேசரி

http://meenakam.com/2010/12/12/16009.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.