Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் இராணுவம் தலையீடு: தடுத்து நிறுத்த TNA கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் இராணுவம் தலையீடு: தடுத்து நிறுத்த TNA கோரிக்கை

25 டிசம்பர் 2010

முல்லைத்தீவில் மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் இராணுவம் தலையீடு: தடுத்து நிறுத்த TNA கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலம் காலமாக ஆலயங்கள், கோவில்களின் பெயர்களில் முன்னர் இயங்கி வந்து இடப்பெயர்வின் போது செயலிழந்துள்ள மீனவர் சங்கங்களைப் புதுப்பிப்பதில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள இராணுவ தலையீட்டை நீக்கி பழைய பெயர்களில் இயங்கவும் பழைய உறுப்பினர்கள் பதவி வகிக்கவும் வசதி செய்யப்பட வேண்டும் என முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒழுங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமாகிய ரிசாட் பதியுதீன் தலைமையில் முல்லைத்தீவு கச்சேரியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய என்.சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், யுனைஸ் பாருக், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மீனவர்களின் இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தமக்குரிய கடற்தொழிலாளர் சங்கங்களை அமைத்து பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்துள்ளார்கள். மீனவர்களின் நலன்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் கட்டுக்கோப்பான முறையில் மீனவர்கள் தொழில் செய்வதற்குமாகவே இந்தச் சங்கங்கள் செயற்பட்டு வந்துள்ளன. இந்தச் சங்கங்களுக்குத் தமது பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களின் பெயர்களையே அவர்கள் சூட்டியிருந்தார்கள். இருப்பினும் இடப்பெயர்வின் காரணமாக இந்தச் சங்கங்கள் செயலிழந்திருந்தன.

இப்போது இவற்றைப் புதுப்பித்துச் செயற்படத் தொடங்கியதையடுத்து, இராணுவத்தினர் அந்தச் சங்கங்கள் பழைய பெயர்களில் இயங்கக் கூடாது என்றும், புதிய பெயர்களிலேயே இயங்க வேண்டும் என்றும், இவற்றில் பதவி வகித்த பழைய முக்கியஸ்தர்களைத் தெரிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால் பழைய நிர்வாகிகள் சார்பாகவும், அவர்களுக்கு எதிரானவர்களாகவும் மீனவர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதுடன் இந்தச் சங்கங்கள் சீராக இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. முன்னைய நிர்வாகிகள் விடுதலைப்புலிகளுக்குச் சார்பாக செயற்பட்டார்கள் எனக்கூறியே இராணுவத்தினர் இவ்வாறு அவர்களை பதவிகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்படக் கூடாது என தெரிவித்திருப்பதாக மீனவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டதன் பின்னர் சரணடைந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளவர்கள் சமூகத்தில் இணைந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். அவர்கள் அரசியலிலும் பங்கெடுத்து மக்களுக்குப் பணியாற்ற முன்வர வேண்டும் என அமைச்சர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் எனக் கூறி மீனவர் சங்கப் பிரதிநிதிகளை மீண்டும் பதவிகளுக்குத் தெரிவு செய்யக் கூடாது என தெரிவித்திருப்பது சரியானதாகத் தெரியவில்லை. எனவே, பொதுமக்கள் தாங்கள் திரும்பியவர்களைத் தமது சங்கங்களுக்குத் தெரிவு செய்யவும், தமக்கு விருப்பமான பெயர்களைத் தமது சங்கங்களுக்குச் சூட்டிச் செயற்படுவதற்கும் அனுமதிக்க வேண்டும். இதில் இராணுவத்தின் தலையீடு இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன் மக்கள் ஜனநாயக முறைப்படி செயற்படவும், தமக்குரியவர்களைத் தெரிவு செய்வதற்கும் வழி செய்யப்பட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

gtn

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு பெயரில் இயங்க வேண்டியது தானே!! ஏன் பழைய நிர்வாகிகள் தான் நிர்வகிக்க வேண்டும்? புதியவர்களை குறிப்பாக இளையவர்களை நிர்வகிக்க அனுமதிக்கலாம். எப்படியோ இந்த ராணுவத்துடன் தான் வாழ வேண்டும் என்பதால் தந்திரமாக செயற்பட்டேயாக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.