Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் தேசியகீதம் - ஒரு வரலாற்றுப் பார்வையும், தமிழில் தேசியகீதத்தின் தேவையும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் இலங்கையின் தேசியகீதத்தை தமிழில் பாடுவது தொடர்பாக விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. ஆனால் இது என்னவோ அந்நாட்டுத் தேசிய கீதத்தின் மீது

முதற்தடவையாக ஏற்பட்ட பிரச்சனை அல்ல. தற்போது பாடப்பெறும் தேசிய கீதமும் சுதந்திர இலங்கையில் முதலாவதாகப் பாடப்பெற்ற தேசியகீதம் அல்ல. இலங்கைத் தேசியகீதத்தின் வரலாற்றை உற்று நோக்கினால் அந்த உண்மை புரிவதுடன் இது தொடர்பான குழப்பங்களுக்கான தீர்வொன்றினை நோக்கிச் சிந்திக்கவும் முயலும் வகையில் இச் செய்திப்பார்வை அமைகிறது.

இலங்கை தேசியகீதத்தின் தோற்றமும் வரலாறும்

ஆங்கிலேயரின் 133 ஆண்டு ஆட்சிக்குப்பின் 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் பெற்ற போது இலங்கையின் இறையாண்மையை வலியுறுத்துமுகமாக தேசியகொடி மற்றும் தேசியகீதத்தையும் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஏற்கனவே இலங்கையில் பாடப்பட்ட தேசபக்திப்பாடல்களில் ஒன்றை தேசியகீதமாக அங்கீகரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தேசியகீதம் தொடர்பாக போட்டி நடாத்துவது எனவும் இதற்கான தெரிவுக் குழுவும் நியமிக்கப்பட்டது.

1940 இல் ஆனந்த சமரக்கோனால் எழுதப்பட்ட, ஏற்கனவே பரவலாக புழக்கத்தில் இருந்த நமோ நமோ மாதா என ஆரம்பிக்கும் சிங்களப்பாடலும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகும். பி.பி.இலங்கசிங்க, லயன்ஸ் எதிரிசிங்க ஆகியோரால் இயற்றப்பட்ட, சிறிலங்கா மாகா பல யச மஹிமா என ஆரம்பிக்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு 1948 மாசி 4 ஆம் திகதி சுதந்திரதினத்தன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. இதுவே சுதந்திர இலங்கையின் முதலாவது தேசிய கீதம் எனலாம்.

இப்பாடலை இயற்றிய இருவரும் தேசியகீத தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தமையால் இத்தெரிவு தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டன. இதனால் அடுத்து வந்த சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தது. 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர் .ஜெயவர்த்தனாவின் ஆலோசனைக்கு அமைய, ஆனந்த சமரக்கோன் இயற்றிய நமோ நமோ மாதா என ஆரம்பிக்கும் பாடலை தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது. 1951 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 22 ஆம் திகதி பாரளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றது.

இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோனினாலேயே அமைக்கப்பட்டது. இலங்கையின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக கொழும்பு மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவர்களால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் சேனநாயக்கா முதல் முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இத்தேசியம் கீதம் பாடப்பட்டது. http://bit.ly/eAJnkO

1951 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 22 ஆம் திகதி பாரளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றது.

கார்த்தினக் மாதத்திலதான் சிங்களவனும் செய்கின்றான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.