Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் ஆபிரிக்காவில் சிங்கள மொழியில் சொற்பொழிவு - இலங்கைக்கு பாரிய தலைக்குனிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவில் சிங்கள மொழியில் சொற்பொழிவு - இலங்கைக்கு பாரிய தலைக்குனிவு

திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 18:34

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் இலங்கைகக்கு பாரிய தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தன கூறுகிறார்.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் இலங்கை உயர்கல்வி அமைச்சரின் ஏற்பாட்டில் அங்கு சென்ற 180 பேர் அடங்கிய குழுவில் இருந்து பேசிய ஒருவர் சிங்களத்தில் உரையாற்றியதன் மூலம் 139 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருந்த மண்டபத்தில் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியாத ஒரு தலைகுனிவு இடம்பெற்றுள்ளதாக உதுல் பிரேமரத்ன குறிப்பிட்டார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் கல்விகற்பிப்பதற்கான நடைமுறையினை மேற்கொண்டுவரும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தான் தெரிவு செய்து அனுப்பிய 180 பேர் கொண்ட குழு ஆங்கிலத்தில் பேச முடியாமை சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் இலங்கைக்கு ஓர் அவமானம் எனவும் வர்ணித்துள்ளார்.

கொழும்பு நிப்போன் ஓட்டலில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனது தென்னாப்பரிக்க பயணம் குறித்து அவர் இந்த செய்திளாளர் மாநாட்டில் தெளிவுபடுத்துகையில் குறிப்பிட்டதாவது :- கடந்த 13ம் திகதி தொடாக்கம் 21ம் திகதி வரையில் சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ள நானும் சென்றேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்ட 180 பேர் வந்திருந்தனர். இவர்களில் 11 பேர் மாத்திரமே பல்கலைக்கழக மாணவர்களாவர், அவர்களைத் தவிர 24 பேர் நாடாளுமன்ற, மாகாணசபை, மற்றும் மாநகரசபை உறுப்பினர்களாவர், இவர்களைத் தவிர ஏனையவர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களாவர்.

இப்படி தனக்கும் தனக்கு வேண்டப்படவர்களின் உறவினர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதனால், திறமையுள்ள வாய்ப்புக்காக ஏங்கும் பலருக்கான சந்தர்ப்பம் கைநழுவிப் போகின்றன. கடந்த 14ம் திகதி நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான் ஆங்கிலத்தில் உறையாற்றிக்கொண்டிருக்கும் வேலையில் உயர்கல்வி அமைச்சினால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எனது உரையை குழப்பும் வகையில் கூச்சலிட்டு அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்.

நான் அன்று இலங்கையில் கல்வி தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டமூலம் முன்வைக்கப்படுவுள்ளது என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்தையே ஆங்கிலத்தில் குறிப்பிட்டேன். இதனை இங்கிருந்து சென்ற குறித்த நபர்கள் குழப்பி என்னை பேசவிடாது தடுத்தனர். அதுமாத்திரமின்றி இதற்கு பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அவர்களின் பிரதிநிதி ஒருவர் பேசுகையில் சிங்களத்தில் பேசி அவமானப்படுத்திவிட்டார்.

139 நாடுகளைச் சேர்ந்த சுமார் 15000 இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் பேசிய சிங்கள உரை இலங்கையைச் சோந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் புரிந்திருக்காது. அப்படிப்பார்த்தால் அவர் இங்கிருக்கும் அமைச்சருக்காகவும், அவர்களின் உறவினர்களுக்காகவுமே அங்கு கதைத்துள்ளார் போலும். சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் ஆங்கிலத்தில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தும் திறனற்றவர்களையே உயர்கல்வி அமைசை;சு சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டிற்கு அனுப்பியுள்ளது.

tamilcnn.com

சர்வதேச அளவில் சிங்களம் ஒரு தலை சிறந்தநாடாக மகிந்த சிந்தனையின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுகின்றது. சிங்கள கடற்படையிடம் இன்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயிற்சி பெற முன்வந்துள்ளன. பலர் சிங்களத்தின் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் அடுத்தகட்டமே உலகம் சிங்கள மொழியை கற்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் ஒரே மொழி, ஒரே மதம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்பது கிட்லரின் கொள்கையல்லவா, அதன் முன்னேற்பாடாகவே இதை கருத முடியும்.

Edited by வல்வை லிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.