Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதில் எது உண்மை…? எது நாடகம்…?

Featured Replies

இந்தியா எங்கும் நிகழும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் மவோக்களின் போராட்டங்களையும் ஆதரிப்பதே தமிழர்கள் இனிச் செய்ய வேண்டிய அரசியல் நடவடிக்கை.திருமா வளவனைப் பயன் படுத்தி தன் மீது சீமானால் முன் வைக்கப்படிருக்கும் குற்றச் சாட்டுக்களில் இருந்து விலகி மக்களைத் திச திருப்பவே கருணானிதியின் பணத்தால் திரட்டிய கூட்டமே திருமாவினது இந்தக் கூட்டம்.தமிழர்களுக்கு கருணானிதி இழைத்த துரோகத்தை மூடி மறைக்கவே திருமா இன்று களம் இறக்கப்படுள்ளார்.இந்த கேடு கெட்ட அரசியல் நடிகர்களை அம்பலப்படுத்த வேண்டியது புலம் பெயர்ந்த தமிழரின் கடமை.

  • தொடங்கியவர்

ஒரு கூட்டமைப்பின் அங்கத்துவன் என்ற வகையில் இந்திய நாடாளுமன்ற எம் பி என்ற வகையில்.. தூதுக்குழு ஒன்றின் பிரதிநிதி என்ற வகையில் திருமாவளவன் சிறீலங்காவிற்கு போனது உண்மை. ராஜபக்சவை சந்தித்தது உண்மை.

திருமாவளவன்.. தேசிய தலைவரின் தந்தையின் இறந்த நிகழ்வுக்கும் சென்று வந்திருந்தார். சிவாஜிலிங்கத்தின் அழைப்பில் அது நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

திருமாவளவன்.. மட்டுமே தூதுக்குழுவில் இருந்து மகிந்தவின் நடவடிக்கைகள் தொடர்பில் சில உண்மைகளை வெளியிட்டவர். திமுக எம்பிக்கள் மகிந்தவிற்கு பொன்னாடை போர்த்தியதோடு சரி.

நாங்களும்.. ஜே ஆரோட கைகுலுக்கி இருக்கிறம்... பிரேமதாசவோட கைகுலுக்கி இருக்கிறம்... சந்திரிக்காவோட கைகுலுக்கி இருக்கிறம்..ரணில் கூட கைகுலுக்கி இருக்கிறம்.. சிறீலங்கா கெலிகளில் பறந்திருக்கிறம்.. கோட்டல்களில் தங்கி இருந்திருக்கிறம்.. அதற்காக அவை எல்லாம் நாடகம்.. துரோகம் என்று பார்க்க முடியுமா..???!

வசம்பு அண்ணன் அடிக்கடி சொல்வது போல.. புதிய நண்பர்களை தேடுவதிலும் பார்க்க உள்ள நண்பர்களை பாதுகாத்துக் கொள்ளவது மேல். யாரையும் ஓரளவுக்கு மேல் நம்பாமல் அளவோடு நம்பினால் ஏமாற்றங்களை தவிர்த்துக் கொண்டு நாம் செயற்பட முடியும் என்று நினைக்கிறேன்.

அந்த நாடகங்கள் தமிழன் நலன் கருதி நடத்தப்பட்டவை , இது யாரின் நலம் கருதி நடைபெற்றது ?

  • தொடங்கியவர்

திருமாவிற்கு ஒரு கடிதம்.. இன்னும் நம்பிக்கை இருக்கிறது..

திருமாவளவன் - இவரை பற்றி நான் இந்த காணொளியை

பார்க்கும் வரை ஒரு நல்ல மதிப்பு வைத்திருந்தேன். என்ன தான் இருந்தாலும், இலங்கை சென்று ராஜபக்ச - வை சந்தித்தாலும் அவர் ஒரு தமிழ் ஆர்வலர், ஈழ ஆதரவாளர், போராளி என்று தான் நினைத்திருந்தேன்.. தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், செம்மொழி மாநாட்டில் தமிழீழம் பற்றி பேசினார், ஊர் முழுக்க பிரபாகரன் படம் வைத்திருந்தார், முத்துக்குமார் பாசறை என்று தொடங்கினார் என்று நினைத்திருந்தேன்.. இவருக்காக நிறைய பேரிடம் வாதிட்டும் இருக்கிறேன்..

இவர் ராஜபக்ச விடம் சிரித்து பேசியதை கூட சபை நாகரீகம் என்று கருதி விட்டு விடலாம்.

ஆனால் இப்படி ஒரு அரசியல் அடி வருடியாக மாறி கருணாநிதிக்கும், சோனியாவிற்கும் வக்காலத்து வாங்குவார் என்று நினைக்கவில்லை. இந்த கானொளியில் சொல்கிறார் "கருணாநிதியால் எப்படி போரை நிறுத்த முடியும், அவர் ஒரு சாதாரண முதல்வர்". "சோனியாவால் எப்படி போரை நிறுத்தியிருக்க முடியும், இந்தியா வல்லரசு அல்ல, ஒபாமா நினைத்திருந்தால் மட்டுமே போரை நிறுத்தியிருக்க முடியும்". இப்படி சொல்லி பழியை ஒபாமா மேல் தூக்கி போட பார்க்கிறார்... என்ன திருமா அவர்களே, எல்லா அரசியல் வாதிகளும் இப்படிதானா?? மேடையில் ஒன்றும் மனசுக்குள் ஒன்றும் வைத்துக்கொண்டிருப்பீர்களா ?? உங்களையெல்லாம் நம்பி நாங்கள் சோரம் போனோம் பார்த்தீர்களா, நாங்கள் முட்டாள் தான், நீங்கள் இந்த கானொளியில் சொல்வது போல..

கருணாநிதி நினைத்திருந்தால் ஏன் நிறுத்தமுடியாது போரை?? சோனியா நினைத்திருந்தால் ஏன் நிறுத்தியிருக்க முடியாது போரை?? பின் எதற்காக கருணாநிதி உண்ணாவிரதமிருந்தார்?? அது மட்டுமா, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, போர் நின்று விட்டது என்று அறிக்கை கொடுத்தாரே, அது எப்படி?? பின் பத்திரிகையாளர் துருவி கேட்டதற்கு போர் நின்று விட்டது, மழை நின்று விட்டது, தூவானம் மட்டும் ஓயவில்லை என்று தனது புலமையை காட்டினாரே, அது எப்படி??

என்ன திருமா சிறுத்தைகள் எல்லார்த்தையும் கேனபயல்னு நினைச்சு பேசறிங்களா?

ஏன் நிறுத்தி இருக்க முடியாது போரை?? கருணாநிதி நினைத்திருந்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்காதா?? அணைத்து கட்சிகளின் ஆதரவுடன் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியாதா?? கலைஞர் தொலைகாட்சியிலும், சன் தொலைகாட்சியிலும் பத்து நிமிடம் காட்டி இருந்தால் போதுமே, அங்கே நடந்த கொடுமைகளை... தமிழகமே வீதிக்கு வந்து போராடி இருக்குமே.. எங்களின் முத்துக்குமார் உள்ளிட்ட பதினாறு பேரின் உயிர் மிச்சபட்டு போயிருக்குமே.. ஏன் அய்யா போர் பற்றிய செய்திகள் உங்கள் ஊடகங்களில் வரவில்லை??

சோனியா நினைத்திருந்தால் ஏன் நிறுத்தியிருக்க முடியாது போரை?? இந்தியா நினைத்திருந்தால் இரண்டு போர் விமானங்களை ஈழத்தின் மீது பறக்க விட்டிருக்க முடியாதா?? இலங்கையை மிரட்டியிருக்க முடியாதா?? இல்ல அது கூடாதா?? தமிழனின் உயிருக்கு மேலாக உங்கள் இலங்கை இறையாண்மை வந்துவிட்டதா?? பிறகு சோனியாவின் மாமியார் என்ன செய்தார்? கணவன் என்ன செய்தார்? இலங்கை அரசை மீறி உணவு பொட்டலங்களை சென்று போடவில்லையா? வரலாறு உங்களுக்கு தெரியும் திருமா..

இந்த பிராந்தியத்தில் இந்தியாவைவிட அமெரிக்கா பெரிய நாடாகிவிட்டதா?? அவர்கள் வந்து தான் போரை நிறுத்தவேண்டுமா? சரி அப்படியே வைத்துகொள்வோம்.. நீங்கள் அமெரிக்காவிடம் முறையிட்டீர்களா, தமிழர்களை காப்பற்ற சொல்லி?? இந்த கருணாநிதியும், சோனியாவும், இந்திய அரசாங்கமும் ஈழ தமிழர்களை நேரடியாக காப்பாற்ற வக்கில்லாதவர்கள் - உங்கள் வார்த்தைகளில்... சரி, நமக்கு தான் வக்கில்ல.. யாரிடம் சென்று அழுதீர்கள், அமெரிக்காவிடமா, ஐநாவிடமா, மனித உரிமை ஆணையத்திடமா ??

போரை நிறுத்தியிருக்க முடியாது இவர்களால் என்று சொல்வதன் மூலம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி, ஒட்டு மொத்த உணர்வாளர்களின் எதிர்ப்பையும், அவநம்பிக்கையையும் சம்பாதித்து இருக்கிறீர்கள் திருமா..

முத்துக்குமார் ஒரு கரும்புலி என்று முத்துகுமாரை பற்றிய ஆவணப்படத்தில் பேசினீர்கள்.. அவன் ஒரு மிகச்சிறந்த அறிவாளி என்றீர்கள்.. அவன் எழுதி வைத்த ஒவ்வொரு வரியும் தீர்க்கமான சிந்தனையுடன் எழுதியது என்றீர்கள்.. அவன் அப்படி ஒரு காரியத்தை உணர்ச்சி வசப்பட்டு செய்யவில்லை, அறிவுபூர்வமாக செய்தான் என்றீர்கள்.. அவன் வகுத்த பாதையில் இளைஞர்கள் அனைவரும் வீறு நடை போட்டு களப்பணி ஆற்றவேண்டும் என்றீர்கள்.. முத்துக்குமார் பெயரில் பாசறை அமைத்தீர்கள்.. முத்துக்குமார் பாட்டி மற்றும் சித்தப்பா அவர்களுக்கு உங்கள் கட்சி சாயம் பூசினீர்கள்.. எல்லாம் சரி..

முத்துக்குமார் இந்த போரை நடத்துவதே சோனியாவும், இந்திய அரசாங்கமும் என்று எழுதி இருந்தானே.. நீங்கள் சோனியா கையில் ஒன்றும் இல்லை என்கிறீர்களே..

இப்பொழுது எங்களுக்கு தெரியவேண்டும் யார் முட்டாள்?? முத்துக்குமாரா அல்லது இனப்போராளி திருமா அவர்களா??

அய்யா, உங்கள் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பாருங்கள் திருமா.. எத்தனை பொலிவுடன் இருந்த முகம் தெரியுமா அது.. இப்பொழுது பாருங்கள், அது பொலிவிழந்து ஒரு குற்ற உணர்ச்சியுடன் காணப்படும்.. அது ஏன் திருமா அவர்களே ???

ஒரு போராளியை புதிதாக உருவாக்குவது கடினமான காரியம்.. அவனுக்கு வரலாறு முழுக்க சொல்ல வேண்டும், அவன் உணர்வுக்கு புரியும் வகையில் நிகழ்வுகளை அவனுடன் சம்பந்தபடுத்தி புரியவைக்க வேண்டும்.. அதற்கு எல்லாம் நிறைய காலம் வேண்டும் அய்யா..

ஒரு தனி அறைக்குள் சென்று, யோசித்து பாருங்கள் நீங்கள் செய்ததை.. உங்களுக்கு அழுகை வந்தால் நிறைய அழுங்கள்.. பாவம் அனைத்தும் கரைய கரைய அழுங்கள்.. பிறகு பாவம் அனைத்தும் கரைந்த பின், கர்வம் அனைத்தும் களைந்த பின், ஒரு போராளியாக மீண்டும் வாருங்கள்.. நீங்கள் ஏற்கெனவே வரலாறு தெரிந்த, நம் உணர்வு புரிந்த போராளி.. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் இருபத்தி ஐந்து வருடம் ஈழ போராட்டத்தில் உங்கள் பங்கு இருக்கிறது என்று, அதை நாங்கள் மதிக்கிறோம்.. உங்களை ஆட்கொண்டிருக்கும் மாயையிலிருந்து விலகி ஒரு போராளியாக வாருங்கள்.. போராளிக்கு எந்த ஒரு வசதியும், கட்சி பந்தாக்களும், சொத்துக்களும், வாகனங்களும் வேண்டாம்...

கொள்கையும், இலக்கும் மட்டுமே வேண்டும்...

அப்படி நீங்கள் வந்தால் பிரபாகரனின் தம்பிகளில் ஒருவன், என்று தலையில் வைத்து கூத்தாட உங்கள் சாதியை தாண்டிய இனம், உலகளாவிய தமிழ் இனம் காத்திருக்கிறது.. அப்படி இல்லாவிடில், நீங்கள் புதை சேற்றில் சிக்கி, உங்களுக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் சொத்து சேர்த்து, பிறகு சிறுக சிறுக சிறுத்துப்போவீர்கள், புதை குழியில் அமிழ்ந்து அழிந்து போவீர்கள்...

ஆனால் எங்கள் போராட்டம் அழியாது.. உங்களை போன்றவர்களை தூக்கி போட்டுவிட்டு ஒரு புதிய படை களமிறங்கும்.. இறங்கும் படை வெறும் மேடைகளில் முழங்கும் படையாக இருக்காது.. செயல் வீரம் கொண்ட படையாக, கொண்ட கொள்கையில் நேர்மை உடைய இளைய படையாக, அறிவையும் உணர்வையும் குழைத்து வார்க்கப்பட்ட முத்துக்குமாரின் பிரதிகளாக உருவெடுக்கும்.. இந்த படையை வழி நடத்தும் தளபதிகளில் ஒருவராக இருக்கும் வாய்ப்பு, உங்களுக்கு இன்னும் சற்றே ஒட்டிகொண்டிருக்கிறது.. உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள்..

நீங்க இன்னும் புரியாத மாதிரி நடிச்சிங்கன்னா இரு கேள்விகள்:

போரை நிறுத்த தான் சோனியாவால் முடியவில்லை சரி.. இப்பொழுது போர் குற்ற விசாரணை என்று வரும்பொழுது, இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு எல்லா நாடுகளிடமும் சென்று, விசாரணை வேண்டாம், விசாரணை வேண்டாம் என்று ஒட்டு போட சொல்கிறதே, ஒட்டு போட வைக்கிறதே மக்கள் மன்றத்தில்.. அது ஏன் திருமா??

நம்முடைய ஈழம் அடைவதற்கான ஒரே வழி இப்பொழுது அங்கே நடந்தது ஒரு Genocide "இனப்படுகொலை" என்பதை உலகம் ஏற்றுகொள்ள செய்யவேண்டும்.. அதற்கு நாம் அதை நம் சட்டசபையில் முதலில் தீர்மானமாக நிறைவேற்றவேண்டும், பிறகு பாராளுமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் .. இது வரை ஏன் செய்யவில்லை நீங்களோ அல்லது கருணாநிதியோ, அல்லது உங்கள் அன்னை சோனியாவோ ??

மேடையில் சத்தமாக பேசினால் மட்டும் போதாது திருமா... இந்த தொழில்நுட்ப உலகிலே அனைத்தும் பதிவாகிகொண்டு இருக்கிறது.. கவனமா பேசுங்க தலைவா..

— செல்வராஜ் முருகையா

மூலம்: http://www.facebook.com/notes/selvaraj-murugaiyan/tirumavirku-oru-katitam-innum-nampikkai-irukkiratu/184983448193914

நன்றி மீனகம்

  • தொடங்கியவர்

இதையும் திருமாளன் பார்க்க வேண்டும், போர் உச்சகட்டத்தில் இருக்கும் போது இந்தியா இலங்கைக்கு ஆயுதம் அனுப்பும் காட்சி

விகிலீக்ஸினூடாக இதுவரை வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற்படை எடுக்க இருந்த நடவடிக்கையை இந்திய அரசே நிற்பாட்டியது.தமிழ் நாட்டில் எழுந்த மக்கள் போராட்டங்களை இந்திய அரசிற்காக நசுக்கியவர் கருணானிதி.கருணானிதி இவறைச் செய்யாமல் பேசாமல் இருந்திருந்தாலே போரை நிற்பாட்டி இருக்கலாம்.புலிகளை அழிக்கும் திட்டத்தின் பகுதியாகக் காரியம் நாடாத்தி விட்டு இன்று புலிகளின் படங்களைப் போட்டே அரசியல் செய்யும் கேடு கெட்ட கருணானிதியும் அவரின் தந்திரோபாயத்திற்க்கு ஏற்றவாறு செயற்படும் திருமாவையும் புலம் பெயர் தமிழர் தமிழ் நாட்டு மக்களிடம் அம்பலப் படுத்த வேண்டும்.இந்த அரசியல் வியாபாரிகளை நம்பாமல் உண்மையான அரசியல் செய்வோருக்கே நாம் எமது ஆதரவைக் கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.