Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

prey-The Hunted and the Hunter

Featured Replies

Michael Crichton.

Sci-fi நாவல்கள் படிக்கும் வாசகர்கள் நிச்சயமாக கடந்து செல்லும் ஒரு பெயர்.இவர் பெயர் உலகம் முழுக்க பிரபலம். இவர் யார் என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம்.உங்களில் Spielberg இயக்கிய Jurassic Park பார்க்காதவரோ அல்லது கேள்விப்படாதவரோ இல்லை என்றே கூறலாம்.அந்த படத்தை நாவலாக எழுதியவர் தான் இந்த Crichton.

இவர் புத்தங்களை மிக எளிதில் படித்து விட முடியாது.அதற்கே ஒரு தனி அறிவும்,புரிந்து கொள்ளக் கூடிய திறனும் வேண்டும்.இவர் எழுதியது ஏறக்குறைய அனைத்துமே technical thrillers.இவரது formula ஒன்றே. “நல்ல முயற்சிக்காக செய்யப்படும் ஒரு ஆராய்ச்சி,எப்படி கெட்டவர்களின் தலையீடால் அல்லது அஜாக்கிரதையால் பேரழிவு ஏற்படுத்துகிறது “ என்பதே அது.Jurassic Park கதை கூட இவ்வகையிலானதே.ஆனால்,அவ்வப்போது வேறு பல அருமையான கதைக்கலன்களையும் உபயோகப்படுத்தி இருக்கார்.

படிப்பினால் டாக்டர் ஆன இவர்,தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு எழுத்தாளர் ஆனார்.Crichton எழுதிய பல புத்தகங்கள் trend setters.பல படங்கள்,டிவி சீரியல்கள் எல்லாம் இவர் எழுத்தில் வெளி வந்து இருக்கிறது.

Andromeda Strain – Technological thriller. இவருடைய முதல் மிகப் பெரிய ஹிட்.

பூமியை சுற்றி வர அனுப்பப்படும் ஒரு satellite,திரும்பி வரும் போது,பூமியில் இல்லாத ஒரு வைரசோடு திரும்பி வருகிறது.இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் உறைந்து இறந்து போகிறார்கள்.எப்படி இதைத் தடுத்தார்கள்? என்பதே கதை.கவனிக்கவும்,இது எழுதப்பட்டது 1969 இல்.அதாவது சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைத்த வருடம்.இந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமா?

அதற்குப் பிறகு, The Terminal Man,The Great Train Robbery,Eaters of the Dead,Sphere,Timeline,Rising Sun,Congo,Disclosure,Jurassic Park,Lost World,Prey,Airframe என்று இவர் எழுதிய ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் trend setters.

இவருக்கு எப்பயுமே ஒரு குணம்.ஒரு ஸ்டைல்ல ஒரு முறை தான் எழுதுவாரு.Lost World மட்டும் ஒரு விதிவிலக்கு.வைரஸ மையமா கொண்ட Andromeda Strain, Mind Control பற்றியான Terminal Man எழுதின இதே மனுஷன் தான் சரித்திர சம்பவமான Eaters of the dead பத்தியும் எழுதினார்.பின்ன,வரலாற்றில் இடம் பெற்ற ஒரு மிகப் பெரிய ரயில் கொள்ளயை பற்றி The Great Train Robbery எழுதினார்.

விஷயம் என்னன்னா,இவரு எழுதுறது முக்காவாசி techno thriller ஆக இருந்தாலும்,ஹிட் ஆச்சுங்றதுக்காக இவர் ஒரு முறை எடுத்தாண்ட கதைக் கலனை இன்னொரு முறை உபயகோப்படுத்த மாட்டார்.ஏற்கனவே சொன்ன மாதிரி,Lost World ஒரு விதிவிலக்கு.அதுவும் பல வாசகர்களின் வேண்டுகோளுக்காக எழுதப்பட்டது.மிகச் சிக்கலான விசயங்களைக் கூட மிகச் சுலபமாக விவரிக்கும் இவருடைய பாங்கு,இவருடைய தனித் திறன்.உதாரணம்,Jurassic Park ல சொல்லப்படுற Chaos Theory.அவ்வளவு சிக்கலான ஒரு விசயத்த பாமரனுக்கும் புரியுற மாதிரி விளக்கி இருப்பார்னு சொல்லுறாங்க(நானு இன்னும் Jurassic Park படிக்கலை.இவர் புக் எல்லாத்தையும் ஒவ்வொண்ணா படிச்சுகிட்டு இருக்கேன்.அதை கடைசியா படிக்கலாம்னு இருக்கேன்.போஸ்ட் உண்டு. :) ).இவரோட ரசிகர்களில் நானும் ஒருவன்.

சரி,இப்ப எதுக்கு இவ்வளவு நேரம் இவரைப் பற்றி பார்த்தோம்?இந்த முறை நாம பார்க்கப் போறது இவர் 2002 இல் எழுதிய Prey அப்டிங்குற கதைய.Jurassic Park இல் ராட்சத dinosaur களை வைத்து மிரட்டிய அதே மனுஷன்,இந்தக் கதையில nano robots வச்சு மிரட்டி இருக்கார்.கதைய பார்க்குறதுக்கு முந்தி Nano Technology பத்தி கொஞ்சம் பார்த்துடலாம்.

சரி,Nano னா என்ன?ஒரு Nanometer னா one billionth, or 10−9, of a meter.நாம இப்ப யூஸ் பண்ணிக்கிட்டு இருக்குறது Micro metre scale(10−6 m).நானோ வோட கான்செப்ட் என்னன்னா,நானோ ஸ்கேல்ல நானோ ரோபோட்ஸ உருவாக்கி அதை வைத்து ஒரு பொருளை,atom லெவெல்ல இருந்து உருவாக்கிறது.அதாவது இந்த நானோ ரோபோட், ஒவ்வொரு atom ஆ சேர்த்து சேர்த்து,நீங்க விரும்புற பொருளை உருவாக்கணும்.அது தான் கான்செப்ட்.

அதாவது ஒரு இரும்பை எடுத்து,அதை கடைந்து அதில் இருந்து ஒரு ஆணியை உருவாக்குவது இப்ப நாம செய்யுறது.ஆனா,நானோ ரோபோட் இருந்தா,அந்த இரும்பைக் கடையும் போது மிச்சமான துகள்களை வைத்து,அந்த துகள்களை சேர்த்து சேர்த்து,ஒரு ஆணியை உருவாக்கலாம்.யோசிச்சுப் பாருங்க.

இது மட்டும் நடந்துருச்சுன்னா,இன்னைக்கு நீங்க உபயோகப்படுத்துற ஒவ்வொரு பொருளும்,நூறு அல்லது ஆயிரம் மடங்கு சிறுசு ஆயிடும்.இப்ப நீங்க யூஸ் பண்ற கம்ப்யூட்டர் செல் போன் அளவுக்கு சுருங்கிடும்.இல்ல,அதை விடக் கூட சுருங்கலாம்.

சரி,இப்ப கதைய பார்ப்போம்.(படங்களில் கருப்பாக தெரிவது ரோபோ குழு.)

Xymos என்று அழைக்கப்படும் ஒரு nanorobotics கம்பெனி,நெவேடா பாலைவனத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ஒரு உற்பத்தி நிலையத்தில் நானோ ரோபோக்களை தயாரிப்பதில் வெற்றி அடைகிறது.பொதுவாக இந்த நானோ ரோபோக்களை தயாரிக்க நினைத்தால்,அதற்கு ஒரு மிக முக்கியமான பிரச்சனை இருக்கிறது.இத்தகைய மிகச் சிறிய ரோபோக்களை உருவாக்க,அதே அளவில் உள்ள,nano assemblers எனப்படும்,ரோபோக்களை உருவாக்கும் கருவிகளை உருவாக்க வேண்டும்.இது முட்டை முதலா,கோழி முதலா மாதிரியான பிரச்சனை.

ஆனால்,இதற்கு xymos ஒரு தீர்வு கண்டுபிடிக்கிறார்கள்.அதாவது,இந்த ரோபோக்களை உருவாக்க genetically engineered பாக்டீரியாவாய் உபயோகப் படுத்துகிறார்கள்.ஆக,இந்த நானோ ரோபோட்,மூன்று முக்கிய தொழில்நுட்பங்களின் சங்கமத்தில் உருவாகிறது.

Genetical Engeneering,

Nano Technology,

Computer Programming.

இந்த ரோபோக்களுக்கு தனியான அறிவு கிடையாது.இவை ஒரு குழுவைப் போல் தான் செயல் ஆற்றும்.ஒரு தேனிக்கூட்டத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.அவற்றிற்கு தனியாக எந்த ஒரு பெரிய புத்திசாலித்தனம் கிடையாது.ஆனால்,குழுவாக செயல்படும் போது வேலைகளை பகிர்ந்து கொண்டு,பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.அது போல தான் இந்த ரோபோக்களும்.இந்த ரோபோக்களின் வேலை,ஒரு கேமராவாய் போல செயல்படுவது.காற்று கூட புக முடியாத இடத்தில் கூட இவை நுழைந்து,படம் பிடிக்க முடியும்.ஒரு பென்சில் முனைஅளவே உள்ள ஒரு ரோபோ குழுவே இதற்கு போதுமானது.

யோசித்து பாருங்கள்,satellite monitoring ஐ விட மிக உயர்ந்த தொழிநுட்பம்.இவற்றின் பங்களிப்பு அளப்பரியது.முக்கியமாக ஆர்மியில்.எதிரிகளின் பதுங்கு தளத்தை அறிந்து கொள்ள எளிதாக உபயோகப்படுத்தலாம்.எல்லாம் சின்னச் சின்ன ரோபோக்கள் என்பதால் அந்த குழுவை சுட்டாலும்,குண்டு அந்த நானோ குழுவை சிதைக்க முடியாது.(Crichton உடைய கற்பனைத் திறன் புரிகிறதா இப்போது?)மேலும்,இவற்றை ஒரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி,அவற்றை வைத்து முன் எப்போதும் இல்லாத அளவு துல்லியமாக அனைத்தையும் பார்க்கலாம்.

இந்த ரோபோக்களுக்கு தனியாக பவர் தேவையில்லை.Solar cells மூலமாக,தங்களுக்கு வேண்டிய மின்சாரத்தை தாங்களே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் நிறைந்தவை இவை.இவற்றை கட்டுப்படுத்த ரேடியோ அலைவரிசை போதும்.இரவில் மட்டும் இவற்றால் இயங்க முடியாது என்பதை தவிர்த்து,வேறு பிரச்சனை இல்லை.

இவ்வளவு தனித்துவம் வாய்ந்த ரோபோக்களால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.இந்த ரோபோக்களில் ஒரு குழு மட்டும்,ரேடியோ அலைவரிசையின் கட்டுப்பாட்டை மீறி,பாலைவனத்திற்கு தப்பி விடுகிறது.அவை தன்னாலேயே செயல்பட ஆரம்பிக்கிறது.குழு அறிவு கொண்ட அவற்றின் குறிக்கோள்,மறுபடியும் அந்த உற்பத்தி நிலையத்திற்குள் செல்ல நினைப்பதே.ஆனால்,அவற்றை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளே விடுவது பேரழிவைத் தரும்.

Xymos கம்பெனி இந்த பிரச்சனைக்கு காரணம்,computer programing ஆகத்தான் இருக்க வேண்டும் ன்று கருதி,அதை எழுதிய குழுவின் தலைவரான Jack Forman ஐ வரவழைக்கிறது.இவருடைய மனைவி Julia,Xymos இல் Vice President ஆக இருப்பது மேலும் உதவும் என்று முடிவெடுக்கப்படுகிறது.

ஆனால்,ஜாக் நெவேடா வந்த பின்னர் தான் தெரிகிறது,இந்த ரோபோக்களால் தனியாக இயங்க மட்டும் அல்ல,தாங்களாகவே நானோ ரோபோக்களை உற்பத்தி செய்து கொள்ளவும் முடியும் என்பது.அதற்க்கு அவை உபயோகப்படுத்துவது எல்லா mammals இடமும் இருக்கும் ஒரு சில enzyme களை.

இந்த enzyme களை,அவை அந்த உயிரினங்களை கொன்ற பின்னர் அவற்றின் உடலில் இருந்து எடுக்கின்றன.நாட்கள் செல்லச் செல்ல,இவற்றின் கொலை வெறி அதிகம் ஆகிறது.அதைப் போலவே அவற்றின் எண்ணிக்கையும்...

உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை,மனிதனும் ஒரு mammal என்று.சிறிது காலத்தில் இவை சிறு பிராணிகளை விட்டுவிடுகிறது.அவை வேறு ஒரு பெரிய பிராணியை வேட்டையாட ஆரம்பிக்கிறது.இங்கே வேட்டைக்காரன் – அந்த ரோபோக்கள்.

வேட்டையாடப்படுவது – மனிதன்....

ஜாக்கால் இதை சரி செய்ய முடிந்ததா?இவற்றின் கோரத் தாண்டவத்திற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை என்ன?அறிந்து கொள்ள நாவலை படியுங்கள்.

Crichton எழுதிய நாவல்களில் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.ஆனால்,இதில் விறுவிறுப்பு மிக மிக அதிகம்.ஜாக் நெவடாவில் வந்து இறங்கும் போது சூடு பிடிக்கும் கதை,அந்த சூடு குறையாமலே கடைசி வரை செல்கிறது.இந்த நாவலை ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது உங்களுக்கு.

அதிலும்,இந்த ரோபோக்கள் கொன்ற ஒரு முயலை forensic ஆராய்ச்சி செய்ய வெளியே வரும் ஜாக் குழுவை ரோபோக்கள் வேட்டையாடும் பகுதி பரபரப்பின் உச்சம்.அவர்கள் அங்கே நிற்கும் கார்களில் சென்று ஒளிந்து கொண்டு,முழுக்க பூட்டிக் கொண்டு பதறுவதும்,நானோ ரோபோக்கள் சிறு சிறு இடைவெளிகளின் மூலம் உள்ளே நுழைந்து,ஒன்று சேர்ந்து அவர்களை கொல்லப் பார்ப்பதும்,திகிலின் உச்சம்.

இவற்றை அழிக்க ஜாக் மற்றும் சிலர் இவை இரவில் தங்கும் ஒரு மறைவிடத்துக்கு செல்லும் போதும் ஏற்படும் சண்டையும் பரபரப்பானதே...

இந்தக் கதையை படமாக எடுக்க நினைத்தால் எந்த ஒரு மாற்றமும் பண்ணாமல் அப்படியே படமாக எடுத்து விடலாம்.விறுவிறுப்புக்கு பஞ்சமே கிடையாது.ஆனால்,இது படமாக வருமா என்பது தெரியவில்லை.ஏனென்றால் இது கொஞ்சம் complicated ஆன கதை.இதை Crichton தெளிவாக சொல்லிய அளவுக்கு வேறு யாரும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே!அதிலும் இவர் உயிரோடு இருந்திருந்தாலாவது Spielberg இவர் துணை கொண்டு எடுத்து இருக்கலாம்(Jurassic Park மாதிரி).ஆனால்,இவர் சில மாதங்களுக்கு முன்னரே இறந்தார்.ஆகையால்,படம் வருவது சந்தேகமே.:)

THANZ: ILLUMINATI BLOGSPOT.COM

  • 1 month later...
  • தொடங்கியவர்

நானோ டெக்னாலஜி பற்றிய மேலதிக விளக்கம் தேவை எனில் இங்கு செல்லுங்கள்....:)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81252&pid=637418&st=0&#entry637418

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.