Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாராட்சி கிழக்கில் சிங்கள ராணுவ புலனாய்வுப் பிரிவால் படுகொலை செய்யப்பட்டவர் ஒரு மணல் வியாபாரியாம் - தமிழோசை சொல்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாராட்சி கிழக்கில் சிங்கள ராணுவ புலனாய்வுப் பிரிவால் படுகொலை செய்யப்பட்டவர் ஒரு மணல் வியாபாரியாம் - தமிழோசை சொல்கிறது

தனது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் மணற்கொள்ளையை படங்களினூடாக இணையத்தில் பதிவுசெய்த கேதீஸ்வரன் எனும் சமூகப் பற்று மிக்க ஒருவரை ராணுவ புலநாய்வுப் பிரிவும், ஈ.பீ.டீ.பீ சமூக விரோதிகளும் சேர்ந்து படுகொலை செய்தது நினைவிருக்கலாம். அப்படுகொலையை நியாயப்படுத்து விதத்தில் இந்திய ரோவின் பிள்ளையான தமிழோசை, அந்த இளைஞரை ஒரு மணல் வியாபாரி என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆக மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகம் வெளியிட்டிருக்கிறது.

யாழ் குடாவில் வன்முறைகள்

யாழ் நகர்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களினால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு தினங்களுக்குள், இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். மற்றுமொரு இளைஞனும் பெண் ஒருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.

வடமராட்சி கிழக்கில் குடத்தனை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த ஆயுதபாணிகள் 28 வயதுடைய தவராசா கேதீஸ்வரன் என்பவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பகுதி நேர அஞ்சல் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர் மணல் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடமராட்சி அல்வாய் என்ற இடத்தில் வீட்டோடு கடைவைத்து வியாபாரம் செய்து வந்த 48 வயதுடைய விதவைப் பெண்மணியான புஸ்பாதேவி யோகநாதன் என்பவர் இதே நாளன்று மாலை 6 மணியளவில் ஆயுதபாணிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆறு பிள்ளைகளின் தாயராகிய இவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, இவரைத் தேடிவந்ததாகத் தெரிவிக்கப்படும் 6 பேர் கொண்ட ஆயுதந்தாங்கிய குழுவினரே வான் ஒன்றில் இவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயுதங்களுடன் வீட்டில் புகுந்தவர்களைக் கண்டதும், கடத்தப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் அச்சத்தினால் சத்தமிட்டு அழுது கெஞ்சிய போதிலும் அவர்களை அச்சுறுத்திவிட்டு ஆயுத முனையில் அந்தப் பெண்ணை ஆயுதபாணிகள் கடத்திச்சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டிருக்கின்றார்கள்.

வியாழனன்று காலை உரும்பிராய் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது சண்முகநாதன் விக்னேஸ்வரன் என்ற 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வான் ஒன்றில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், கல்வி நிறுவனம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிசாரிடம் சரணடைந்திருந்த இவர் தெல்லிப்பழையில் செயற்பட்டுவந்த புனர்வாழ்வு நிலையத்தில் சேர்க்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு நால்வர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக

பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

யாழ் குடாநாட்டில் தொடரும் வன்முறைகள், கடத்தல்கள், கொள்ளைகள், கொலைகள் என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

... குடத்தனையில் கொலையும், அல்வாய் கடத்தலும் "யாழ் மன்னன்" குத்தியின் கைவிளையாட்டாம்!!!

... *மகேஸ்வரி நிதியம்" எனும் பெயரில் மண் டிராக்டர் ஒன்றுக்கு குத்தி கும்பல் 10000 ரூபா கப்பம் அறவிட்டதாம். அதுவும் அள்ளப்படும் மண் முழுக்க குடத்தனை, அம்பன் குடத்தனை, ஆழியவளை போன்ற வடமரட்சி கிழக்கு பகுதிகளில்தானாம்! அங்குள்ள மக்கள் இம்மண் கொள்ளைக்கு சிறிது சிறிதாக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியவேளை, அதை அடக்க ... இந்த இல் அப்பகுதியின் அழிவை படம் எடுத்து FACEBOOK இல் போட்டவரை, படுகொலை செய்திருக்கிறது, இந்த ஈபிடிபி ஒட்டுக்கும்பல்!!

... கடந்த காலங்கள் போல் அத்தியடிக்குத்தி அன்ட் கும்பல் சிறிது சிறிதாக அதிரடித்தாக்குதல்களை ஆரம்பிக்கின்றார்கள் போலுள்ளது!! பாவம் அங்குள்ள மக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.