Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ள ஜாதிக ஹெல உறுமய!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவுள்ள ஜாதிக ஹெல உறுமய!

புதன், 05 ஜனவரி 2011 11:55

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக ஜாதிக ஹெலஉறுமய இன்று சாட்சியமளிக்கவுள்ளது.

லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று மாலை மூன்று மணிக்கு ஜாதிக ஹெலஉறுமயவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இரண்டு பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தமிழ் சி.என்.என்.க்கு தெரிவித்தார்.

ஜாதிக்க ஹெலஉறுமயவின் பிரதம செயலாளர் பாட்டலே சம்பிக்க ரனவக்கவும், அக்கட்சியின் சட்ட ஆலோசகர் உதயகம்மன்பில ஆகியோர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இன்றைய தினம் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சிமளிப்பதற்காக வரவிருந்ததாக தெரிவித்த அவர், பல்வேறு காரணங்களின் நிமித்தமாக அவர் இன்று சமூகமளிக்க மாட்டார் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், 8ஆம் 9ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளது.

8ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் நாள் முழுவதும் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், 9ஆம் திகதி மடு பிரதேசத்திற்கு விஜயம் செய்து காலை 9.30 முதல் சாட்சியங்களைப் ஆணைக்குழு பெற்றுக் கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்திற்கு ஆணைக்குழு விஜயம் செய்யவுள்ளது. அங்கு எந்த இடத்தில் சாட்சியங்களைப் பெறுவது தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் தமிழ் சி.என்.என்.க்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அனுராதபுரம் மாவட்டத்திற்கு நல்லிணக்க ஆணைக்குழு விஜயம் செய்யவுள்ளது. அங்கு கெப்பற்றிகொல்லாவைப் போன்ற இடங்களில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் எமக்கு கூறினார்.

tamilcnn.com

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.