Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காத் தேயிலையாக மாறும் இலங்கைத் தேயிலை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காத் தேயிலையாக மாறும் இலங்கைத் தேயிலை:

11 ஜனவரி 2011

பெயரில் இருக்கிறது மலையகத்தவரது வாழ்வு! ஜிரிஎன்னிற்காக சிவச்செல்வன் ரமணிதரன்

வடக்கு கிழக்கிலும் சிங்களத்தில் தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்ப்பாணத்தில் கல்வி அதிகாரி ஒருவரைப் பலி கொண்டிருக்கிறது. இப்போது அரசாங்கத்தின் அந்த நிலைப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் என்று குட்டைப் போட்டு உடைத்திருக்கிறார் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்.

தற்போது அரசாங்கம் அனைத்து உள்ராட்சி சபைகளையும் கலைத்திருக்கிறது தேர்தலை நடாத்துவதற்காக. வழமை போல தேர்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படும் சுற்று நிருபம் வடக்கு கிழக்கிற்கு இம்முறை சிங்களத்தில் தான் அனுப்பப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் சிங்கள மொழியிலான நிர்வாகத்தை அமுலாக்குவதை உள்நோக்கமாகக் கொண்டது என்று புலனாகிது என்கிறார் வடக்கின் தேர்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரி.

வடக்கு கிழக்கில் அரச அலுவலகங்களில் சிங்கள் மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. எனவே இந்த சுற்றுநிருபங்களை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது சிரமமான ஒரு வேலையாக இருக்கப் போகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் தேசிய கீதத்தில் அதன் ஆரம்ப வரிகiளான நமோ நமோ மாதாவை நீக்கி சிறிலங்கா மாதா என மாற்றினர் அன்றைய ஆட்சியாளர். விளைவாக அதனை எழுதிய ஆனந்த சமரக்கோன் தூக்க மாத்திரைகளைப் போட்டு தனதுயிரைப் போக்கிக் கொண்டார்.

நாட்டிற்கோ நாட்டின் தலைவர்களுக்கோ நமோவைக் கலைத்து விட்டு வந்த சிறி எந்த வரப்பிரசாதத்தையும் அள்ளிக் கொண்டு வரவில்லை. கடந்த முப்பதாண்டுகளுள் நாட்டில் இரத்த ஆறு தான் ஓடியது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் எதுவும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது சிலோன் என்று எஞ்சியுள்ள பெயரையும் முற்றாக சிறிலங்கா ஆக மாற்றுவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை எடுத்திருக்கிறது.

அதன்படி இனிமேல் அரச மற்றும் தனியார் அமைப்புக்கள் எதுவும் சிலோன் என்ற பெயரைப் பாவிப்பது தடை செய்யப்படுகிறது.

இந்த அமைச்சரவைத் தீர்மானத்தின்படி இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம், இலங்கைப் போக்குவரத்துச் சபை, இலங்கை புகையிரதத்திணைக்களம் (சிலோன் என்பதை தமிழில் இலங்கை என்றே குறிப்பிட்டு வருவது வழமை.) என்று இலங்கை என வரும் அனைத்து நிறுவனங்களும் இனிமேல் சிறிலங்கா எனச்சுட்டப்படும்.

அவ்வாறு சிறிலங்கா மின்சார சபை சிறிலங்கா பெற்றொலியம் எனச்சுட்டுவதால் பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது என்று சொல்லப்பட்ட போதும் 60 வருடங்கள் பழமையான இலங்கை வங்கி என்ற பெயரை மாற்றும் போது வங்கியின் அடையாளம் இழக்கப்படும் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ஆனால் இதெல்லாவற்றையும் விடப் பெரிய பாதிப்பு இலங்கையின் எற்றுமதி வருமானத்தில் இதனால் ஏற்படும் என்கின்றனர் வர்த்தகத் துறையினர்.

இலங்கையின் பிரதான ஏற்றுமதி வருமானங்களில் ஒன்றாக இருப்பதும் முன்னிலையில் இருப்பதுமான தேயிலை சர்வதேசச் சந்தையில் இலங்கைத் தேயிலை (சிலோன் ரீ) என்றே அழைக்கப்படுகிறது. அதனை சிறிலங்கா தேயிலை என மாற்றும் போது அதனுடைய அடையாளமும் வர்த்தகப் பெயரும் இழக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நூறு வருடங்களுக்கு முன்பதாக ஜேம்ஸ் ரெயிலர் முதன்முறையாக தேயிலையை மலைநாட்டில் பயிரிட்ட நாளிலிருந்து அது இலங்கைத் தேயிலை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக ஆகிய தேயிலை இலங்கைத் தேயிலை என்றே சர்வதேச சந்தையில் அழைக்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை தேயிலைச் சபையுடன் இணைந்து இலங்கை தேயிலை விற்பனை அபிவிருத்தி பிரிவு தேயிலை விற்பனையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட்டிருக்கிறது. குறிப்பாக மேற்குலகு, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய பிராந்தியங்களில் சிங்க இலட்சினையுடனும் சிலோன் ரீ என்ற பெயருடனும் இலங்கைத் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொகையில் ஏற்றுமதிக்காகப் கொள்வனவு செய்வோருக்கும் சுத்தமான இலங்கைத் தேயிலை – சிறிலங்காவில் பொதியிடப்பட்டது என்ற வியாபாரக் குறியுடன் அவை விற்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே விற்கப்பட்டு வந்தது.

கென்யா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையுடன் போட்டி போடுவதற்கு இலங்கைத் தேயிலை என்ற வியாபாரக் குறியீட்டு நாமம் அவசியமானது.

ஆனால் மூன்று தசாப்தங்களாக மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிட்டு கட்டி எழுப்பப்பட்ட இலங்கைத் தேயிலை என்ற பெயர் வெறும் அரசியல் காரணங்களுக்காக சிறிலங்கா தேயிலை என மாற்றப்படுவதால் இழக்கப்படும் அபாயம் நேரப் போகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மீளவும் சிறிலங்கா தேயிலை என்றபெயரைக் கட்டி எழுப்ப எத்தனை மில்லியன் டொலர்களைச் செலவழிக்க சிறிலங்கா தயாராகிறதோ தெரியவில்லை. ஆனால் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தேயிலைக் கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி போதிய கூலியைக் கொடுக்கவோ அல்லது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ மறுத்து வருகின்றன என்பது யதார்த்தம்.

இலாபகரமான நிலையில் இருக்கும் போதே இவ்வாறு நிலைமை இருக்கிறதென்றால் இந்த வியாபாரப் பெயர் இழப்பால் ஏற்படும் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் மீளவும் சிறிலங்கா தேயிலை என்ற பெயரைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் விளம்பரச் செலவு ஆகியன மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை எவ்வளவு தூரம் பாதிக்கப் போகின்றது என்பதனைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை.

ஆக தேசிய கீதத்தில் ஏற்படுத்தப்பட்ட சிறிலங்கா என்கிற மாற்றம் ஆனந்த சமரக்கோனின் உயிர் பிரிவுக்குக் காரணமாக அமைந்ததென்றால் தற்போது இலங்கைத் தேயிலையை சிறிலங்கா தேயிலையாக மாற்றுவதால் இலட்சக்கணக்கான மலையகத் தொழிலாளர் நிர்க்கதியாக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே கண் முன்னால் தெரிகின்றது. ஆனால் ஆட்சியிலுள்ளவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் எதுவித கவலையோ அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை.

நேற்றுமுன்தினம் துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியந்த விக்ரமரட்ண திருமலையில் ஒன்பதாயிரம் ஏக்கர் காணிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மார்ச்சிலிருந்து முதலீட்டாளர்கள் காணிகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். போர் நடைபெற்றதால் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அவற்றை வழங்க முடியாமல் போனதாகவும் தற்போது கடந்த மே 2009உடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதால் சர்வதேச முதலீட்டாளர்கள் தாராளமாக வந்து முதலிடலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டைக் கூறு போட்டு விற்பதற்கு போர் தடையாக இருந்திருக்கிறது. போர் முடிவடைந்தது அதற்கு வசதியாக இருக்கிறது. இடம் பெயர்ந்த மக்கள் தமது பிரதேசங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாமல் அவர்களுடைய நிலங்கள் சர்வதேச முதலீட்டாளர்களுக்காகத் தாரை வார்க்கப்படுகின்றன.

பாதிக்கப்படுகிறமக்களைத் தவிர யாருக்கும் இவற்றில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் 'இட்டு' உண்டு இருக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவு.

GTN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.