Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் தொடர்மழை! பெருமளவு மக்கள் பாதிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் தொடர்மழை! பெருமளவு மக்கள் பாதிப்பு!

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் கோவிலடி, சிப்பித்திடல், முள்ளியடி, கள்ளிமேடு, பத்தினிபுரம், பாலம்போட்டாறு, முள்ளிப்பொத்தானை, 96 வது மைல் கல், கல்மெடியாவ போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் 2 அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கின்றது. தம்பலகாமம் கிண்ணியா வீதி, கிண்ணியா வான் அல வீதி என்பன போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தில் 116,000 கன அடி நீர் சேர்ந்துள்ளதால் 10 வான்கதவுகளும் நேற்றுக் காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டன.

இதன் காரணத்தால் இப் பகுதிகள் மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. இங்கு 3000 க்கும் அதிகமான ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாலம்போட்டாறு பத்தினி அம்மன் ஆலயம் வெள்ளத்தால் அரைப்பகுதி மூழ்கியுள்ளது.

கந்தளாய், தம்பலகாமம், வான்அல, முள்ளிப்பொத் தானை பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 25 குடும்பங்களும், வெருகலில் 18 குடும்பங்களும், மூதூரில் 450 குடும்பங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளன.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவில் பள்ளத்தோட்டப் பிரதேசத்தில் 40 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், ஜமாலியா லவ் லேன் 75 வீட்டுத் திட்டத்தில் 25 வீடுகளுக்குள் மூன்றடி வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலுள்ள மக்கள் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைவிட நிலாவெளி, கோபாலபுரம், இறக்ககண்டி, புல்மோட்டை, பகுதிகளில் வெள்ளம் தோன்றியுள்ளது. புல்மோட்டை ஜின்னாபுரம் வீதி பாதிக்கப்பட்டுள்ளதால் அப் பகுதி மக்கள் அவசர தேவைகளுக்காக படகுகள் மூலமாக இடமாற்றப்பட்டனர்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலாளர் திருமதி ஜலதீபனும், இராணுவ சிவில் படை அதிகாரி கப்டன் கொகனவும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர்.

இடம்பெயர்ந்து பாடசாலையொன்றில் தங்கியிருந்த நிலையில், இயற்கை மரணமடைந்த பெண் ஒருவரின் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கு 10 மைல் தொலைவிலுள்ள மேட்டு நிலமொன்றுக்கு எடுத்துச் சென்றதாக குச்சவெளி பிரதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2011-01-11-1.jpg

2011-01-11-11.jpg

2011-01-11-7.jpg

மேலதிக படங்களுக்கு http://meenakam.com/

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் இடம்பெயர் தொகை 322,743ஆக அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 322,743 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடியுள்ளனர்.

185 நலன்புரி நிலையங்களில்; 28,376 குடும்பங்களை சேர்ந்த 105,747 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.  57,659 குடும்பங்களை சேர்ந்த 216,996 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

863 வீடுகள் முற்றாகவும் 2885 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/14701--322743-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.