Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு – கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு

Monday, January 17, 2011, 5:03

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை சிறீலங்கா அரசு முற்றாக புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களில் பலர் உதவிகள் வழங்கப்படும் என சிறீலங்கா அரசு அளித்த வாக்குறுதிக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால் அரசு அவர்களை புறக்கணித்துள்ளது. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு 5,000 ரூபாய்கள் நிதி உதவியும், இலங்கை வங்கி ஊடாக 20,000 ரூபாய்கள் நிதி உதவியும் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

மேலும் விவசாயப்பொருட்கள், சமயல் பொருட்கள், சீமேந்து பைகள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இன்றுவரை அவை எவையும் வழங்கப்படவில்லை.

மீள்குடியமர்த்தப்பட்ட 43,182 குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிதி உதவியும், 64,327 குடும்பங்களுக்கு இலங்கை வங்கியின் நிதி உதவியும் வழங்கப்படவில்லை. 36,000 குடும்பங்களுக்கு உணவு அல்லாத உதவிப்பொருட்கள் வழங்கப்படவில்லை. 71,006 குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கப்படவில்லை.

இதனிடையே, அரசின் உதவிகள் அற்ற நிலையில் இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மக்களை தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் மீண்டும் இடம்பெயர வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.