Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிபோகும் திருகோணமலை சுடுகாடு பறிகொடுத்து நிற்கும் கோபாலபுரம் தமிழர்கள!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறிபோகும் திருகோணமலை சுடுகாடு பறிகொடுத்து நிற்கும் கோபாலபுரம் தமிழர்கள!

Monday, January 17, 2011, 9:03

திருகோணமலை நிலாவெளி வீதியின் 10 ஆம் மைலில் அமைந்திருக்கும் விவசாயக் கிராமம்தான் கோபாலபுரம் கிராமமாகும். இக்கிராமம் ஆனது நுற்றாண்டுக்கும் அதிகமான வரலாற்றை கொண்டதாகும். முற்றிலும் தமிழ்பேசும் விவசாயிகளான இக்கிராமமக்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே சுடுகாடாக பயன்படத்திவரும் நிலப்பிரதேசம் தற்போது கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கோபாலபுரம் கடற்படை முகாம் தலைமை அதிகாரியால் கோபாலபுரம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் கோபாலபுரம் மக்களுடன் சந்திப்பொன்றை நடத்திய கடற்படை முகாம் தலைமை அதிகாரி இதுவரைகாலமும கோபாலபுரம் மக்கள் சுடுகாடாக பயன்படுத்திவரும் நிலப்பரப்பு இன்னுமும் 3 மாத காலத்துக்கு மட்டுமே சுடுகாடாக பயன்படுத்த இடமளிக்கப்படும் எனவும் இம் 3 மாதகால இடைவெளிக்குள சுடுகாட்டுக்கான மாற்று இடம் ஒன்றை தனியார் நிலசொந்தகார் இடம் பெற்றுக்கொள்ளும்படடியும் அவ்வாறாக பெற்றுக்கொள்ளும் நிலத்துக்குரிய விலையை கடற்படையினர் செலுத்தத்தயாராக உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளார்

அதேவேளை கடற்படை முகாம் விஸ்தரிப்புக்கு தேவைப்படின் மக்கள் குடியிருப்பு நிலங்களையும் கையகப்படத்த தாம் தயங்கபோவதில்லை என்பதனையும் தெரிவித்துள்ளார் . அதாவது சுடுகாடு மட்டமல்ல கோபாலபுரம் கிராமத்தின் எதிர்காலமே கேள்விக்குள்ளான ஒன்றானதாகவே தெரிகிறது.

சுனாமி அனர்த்தத்தை அடுத்து கோபாலபுரம் கடற்கரைப்பகுதியை அண்டி வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதி மக்களின் குடியிருப்புகளை பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்திய அரசு அம் மக்களுக்கு கும்பிறுப்பிட்டி கிராமத்தை அண்டியபகுதியில் ஒவ்வொருவருக்கும தலா 10 பேர் நிலத்தை மாற்று குடியிருப்பாக வழங்கியுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் குடியிரப்பு நிலம் தவிர்ந்த எஞ்சிய நிலத்தில் விவசாயத்தை ஜுவனோபாயததிற்கான தொழிலாகக் கொண்டு தமது வாழ்நாளை தடங்கள் இன்றி ஓட்டி வந்த இம்மக்கள் கடந்த 30 வருடகால யுத்த நெருக்கடிகளையும் பலதரப்பட்ட இழப்புகளையும் சகித்துக்கொண்டு சொந்தமண்ணை விட்டுவெளியேறாமல் உழைத்து வாழ்ந்த மக்களாகும் இன்று இம்மக்களின் வாழ்விடமும் வாழ்வாதாரமும 10 போச்சஸ் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளது.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.