Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம் ஆவணப்படம்

Featured Replies

மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் தொடக்க காலம் தொட்டே ஈழ விடுதலைக்காகவும் அம்மக்களின் துயரம் குறித்தும் பொதுக்கூட்டங்களிலும்,கட்டுரைகள்,நூல்கள் வாயிலாகவும் குரல் கொடுத்து வருகிறார்.தாய்த் தமிழகத்தில் எண்ணற்ற முறையில் எல்லா வழிகளிலும் போராட்டங்கள் நடத்திச் சிறைப்பட்டும் இருக்கிறார்.உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும்,ஐ.நா மன்றம்,மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் வாதிட்டும் தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது 'ஈழத்தில் இனக்கொலை- இதயத்தில் இரத்தம்' என்கிற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டுள்ளார்.இதில் தொடக்கம் முதல் ஈழத்தின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் அவர் முள்ளிவாய்க்கால் துயரங்களையும் தமிழர்கள் படும் துன்பங்களையும் காணொளி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதனையும்,சிங்களவர்களே அம்மண்ணில் வந்தேறிகள் என்பதனையும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.ஒவ்வொரு தமிழரும்,மனிதநேய உணர்வாளரும் காண வேண்டிய ஆவணம்.இதைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பரப்பவேண்டியது கடமையாகும்.

அந்த ஆவணப்படத்தின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது

http://www.youtube.com/watch?v=TcwtpRaW27s&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=Jy1nqy_uX6E&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=f76NuWzfPUM&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=mUNNFpqB8oM&feature=player_embedded

thanz:- facebook

தமிழர்களுக்கு தெரிந்த வரலாறு, ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை

"ஞாயிற்றுக்கிழமைன்னா கூட கொஞ்சம் நேரம் தூங்கவாங்கன்னு பேரு. இன்றைக்கும் காலையில சீக்கிரம் எந்திரிக்கனுமா? ஏன் தான் இப்படி இருக்கீகளோ?"

இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் வீட்டில் கேட்கும் சுப்ரபாதம். ஆனால் இன்றைய காலைப்பொழுதில் நம்ம காட்டுப்பயபுள்ள தெகா இந்த காணொளியை அனுப்பி உரையாட மற்ற வேலைகள் மறந்து ஒரு மணி நேரம் உள்ளத்தில் உள்ள அத்தனை உணர்ச்சிகளையும் பதம் பார்க்க வைத்து விட்டது. மகேந்திரன் எட்டப்பராசனுக்கு நன்றி..

"வைகோ ஈழம் குறித்து ஒரு ஆவணப் படம் இயக்கியுள்ளார். அது வருகின்ற தேர்தலுக்கு வெளியே வரும். ஆளுங்கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும்" போன்ற செய்திகளை நான் தினசரிகளில் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்த விசயமாகும். மனதிற்குள் வியப்பாக் இருந்து. ஒருவேளை பிரபாகரனை சந்திக்க வைகோ சென்றாரே? என் வாழ்நாளில் முக்கிய தருணங்கள் என்று சந்தோஷப்பட்ட நிகழ்வாக இருக்குமோ என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஓரளவுக்கு சொல்லக்கூடிய அளவில் ஒரு காரியத்தை வைகோ செய்துள்ளார். ஈழத்தின் தொடக்கம் முதல் சம காலம் வரைக்கும் உள்ள விசயங்களை இந்த ஐந்து காணொளி மூலமாக விளக்கியுள்ளார். ஒவ்வொன்றும் ஏறக்குறைய 14 நிமிடங்கள் ஓடுகின்றது.

இடையில் இயக்குநர் பாரதிராஜா கூட ஈழம் குறித்து ஒரு படம் எடுப்பேன் என்று சொல்லி செய்திகளில் இடம் பிடித்துவிட்டு மறந்து போனார். மணிரத்னம் எப்போதும் போல அவர் பாணியில் சொல்லி விட்டு ஈழத்தைப் பற்றி மனதில் இருந்த கொஞ்ச விசயங்களையும் மறந்தும் போகும் அளவிற்கு திரைப்பட புரிந்துணர்வை உருவாக்கி அவரும் நகர்ந்துவிட்டார். இடையில் ஈழம் சார்ந்து வந்த பல படங்கள் சென்சாரில் மூச்சு வாங்க ஒவ்வொருவரும் யோசிக்க இன்று தமிழ்நாட்டில் படித்த தமிழர்களின் இளைஞர்களின் எண்ணங்களில் கூட ஈழ அவலங்கள் ஒரு செய்தியாகவே உள்ளது.

சென்ற தேர்தலில் "மக்கள் தொலைக்காட்சி" ஈழத்தை ஒரு ஆயுதமாகவே எடுத்து விடாது போராடிப் பார்த்தார்கள். இப்போது சீமான.

பினாயில் கூட இலவசமாக கிடைத்து விடாதா? என்று ஏக்கம் நிறைந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இது போன்ற விசயங்கள் முக்கியமல்ல. இந்த காணொளியை நிச்சயம் தேர்தல் சமயத்தில் அனுமதிப்பது என்பது எதிர்பார்கக முடியாத ஒன்று. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இதைப் பாருங்கள்.

உண்மையிலேயே பிரபாகரனுக்கு ஒரு ஆன்டன் பாலசிங்கம் அமைந்தது போல வைகோவும் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆளுமைதான். நெடுமாறன் அய்யா கூட தனது பணியை இந்தியாவிற்குள் நிறுத்திக் கொண்டார். சர்வதேச சமூகத்திடம் ஈழ மக்களுக்காக வைகோ முன்னெடுத்துச் சென்ற பல விசயங்களை இதன் மூலம் தான் என்னால் உணர முடிந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் இவரைப் போன்றவர்கள் சென்று இருக்க வேண்டிய தூரம் இதுவல்ல. வருத்தமாக உள்ளது. வாழ்ந்து கெட்டவனின் அவல வாழ்க்கையைப் போல இவரின் இன்றைய அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. .

ஈழத்தைப் பற்றி முழுமையாக புரிய வேண்டுமென்றால் நிச்சயம் 100 மணி நேரம் ஓடக்கூடியதாய் இருந்தாலும் அது பாதி அளவுக்குக்கூட இருக்காது. காரணம் ஒவ்வொரு விசயத்திற்குப் பின்னாலும் உள்ள ஓராயிரம் அரசியல் மர்மங்கள் நிறைந்த விசயங்களை ஒரு குறுந்தகடுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதா என்ன?

ஈழ வரலாறு குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள், தலையணை அளவு உள்ள புத்தகங்களை படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த காணொளி உதவியாய் இருக்கும். மூன்றாவது காணொளியில் சமகாலத்தில் நடந்த போர் அவலங்களை காணும் போது நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில் தானா? என்றொரு இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இதில் வைகோ ஒரு இடத்தில் சொல்லும் வாசகம் குறிப்பிட்டத்தக்கது.

" நான் முறையாக வரலாறு படித்தவன். உலகில் எவராலும் மறுக்க முடியாத மாவீரன் பிரபாகரன். எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், ஆதரவும் இல்லாமல் சர்வதேச இக்கட்டுக்களைத்தாண்டியும் தன் போராட்டத்தை முறைப்படி கொண்டு வந்து பல போர்த்தந்திரங்களை உருவாக்கி சர்வதேச சமூகத்திற்கு ஆச்சரியமளித்தவர்"

" இந்தியா பாகிஸ்தான் பகைநாடு. இருவரின் பங்களிப்பும் இறுதிக்கட்ட யுத்தத்தில் இருந்தது. இஸ்ரேல் ஈரான் நட்பு நாடல்ல. ஆனால் ஒருவர் விமானங்கள் கொடுக்க மற்றொருவர் குண்டுகள் அழிக்க அழிந்தது தமிழ் சமூகம். ரஷ்யா சீனா எதிரெதிர் முனைகள். ஆனால் இந்த துருவங்கள் மறக்க முடியாத அவலத்தை செய்து முடிக்க ஒன்று சேர்ந்தார்கள்.."

ஆனால் இந்த போர்க்குற்றவாளி ராஜபக்ஷேயை இன்று வெற்றித்திருமகன் என்ற உதாரண வரிசையில் இந்திய அரசாங்கம் உடுமலைப்பேட்டையில் உள்ள சைனிக் பள்ளிக்கூடம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அப்ப தமிழ்நாட்டு அரசாங்கம்?

இயல்பாகவே அதிக உணர்ச்சியில் குரல் உயரும் வைகோவுக்கு இந்த காணொளியில் பல இடங்களில் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுக்கின்றது.

இராமேஸ்வரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தொலைவில் இருக்கும் ஈழம் இன்று வரைக்கும் என்ன சாபத்தை பெற்று இருக்குதோ? கடற்கரையில் இருக்கும் "சாமி"க்கும் அருள் கொடுக்க நேரமில்லை. தமிழ்நாட்டில் இந்தியாவில் இருக்கும் "ஆமாம்சாமி"களுக்கும் இன்று வரைக்கும் மனமும் மாறுவதாகத் தெரியவில்லை..

இதில் வைகோ சொல்லாத விசயங்கள் பல உண்டு. மறைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும்.

http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_23.html

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ! துனிச்சல் எங்கிருந்து வருகிறது!

எப்பொழுதுமே வைகோ குறித்து கடுமையான விமர்ச்சணங்களை வெளியிடுபவர்கள் வைக்கும் சொத்தையான வாதம் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துவிட்டார்.....தன்னை ஒருவருடத்திற்கும் மேலாக சிறையில் அடைத்தவருடன் கூட்டனி எப்படி கூட்டனி சேரலாம்....? அவரது கட்சி காணாமல் போய்விட்டது..! என்பதுதான்..

வைகோ மீது வேறு வகையான குற்றசாட்டுகளை வைக்க முடியாத கையாலாகத கருங்காலிகள் எழுப்பும் குற்றசாட்டுகளுக்கு ஒரே பதில்தான்...

ஜெயலலிதாவுடன் கூட்டனி வைத்ததால்,ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது நிலைபாட்டினை வை.கோ மாற்றிகொள்ளவில்லை....மாறாக ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா அவர்கள் கொண்டிருந்த கருத்தை மாற்றி ஈழத்தமிழர்க்கு தனி நாடு அமைய அ.இ.அ.தி.மு.க பாடுபடும் என தேர்தல் பிரச்சாரத்திலேயே முழங்க வைத்தவர் வை.கோ!

இதற்கு மேல் வை.கோ வின் ஜெயலலிதா அவர்களுடனான கூட்டனி குறித்து விமர்சிக்க எவருக்கும் அருகதை இல்லை என்றே தோன்றுகிறது!

வை.கோ அவர்கள் அரசியலும் அதன் பால் விளையும் பதவிகளும் முக்கியம் என்று நினைத்திருந்தால்,அரசியல் சித்துவிளையாட்டுகளை வேறு யாரை காட்டிலும் புத்தி சாதுர்யத்துடனும்,திறமையுடனும் நடத்தி வெற்றி பெற்றிருக்க முடியும்.

இரண்டாம் முறையாக 4 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்று,மத்திய அமைச்சரையில் இடம் கிடைத்தபோதே,மத்திய அரசில் அங்கம் வகிப்பது ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில் இடர்பாட்டினை ஏற்படுத்துகிறது. எனவே பதவி வேண்டாம்! என கூறியவர் வைகோ.

ஈழத்தமிழர் விவகாரத்தினை தங்களின் அரசியல் லாபத்திற்காக கையிலெடுத்து ஆர்பரித்த சுயநலவாதிகள்,யாரை குற்றம் சுமத்தினார்களோ அவர்களுடனேயே கூட்டனி சேர்ந்து தனக்கு அல்லது வாரிசுகளுக்கு பதவியை பெறுவதற்கு நடத்திய கபட நாடகங்களை கண்ணெதிரே கண்டபோதும்,அவர்களை விமர்சிக்க தைரியமில்லாத கோழைகள் வைகோவை மட்டும் விமர்சிப்பது ஏன்?

ஏனெனில்,சுயநல அரசியல் கூட்டத்தினை விமர்சித்தால் வீட்டுக்கு ஆட்டோ தேடிவரும் என்பது இந்த முதுகெழும்பற்ற விமர்ச்சகர்களுக்கு தெரியும்...ஆனால் ம.தி.மு.க வும் அதன் தலைமையையும் மட்டும் விமர்சிப்பது கோழைகளுக்கு கைவந்த கலை.இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது இந்த துணிச்சல்?...

ஏனெனில் ஜனநாயக இயக்கங்களிலேயே அரசியல் நாகரீகத்தினை கடைபிடிக்கும் ஒரே இயக்கம் ம.தி.மு.க வும்,அதன் தலைமையும் மட்டும்தான் என்பது இந்த விமர்ச்சகர்களுக்கு தெரியும்...

அதாவது என்ன விமர்ச்சனம் செய்தாலும்,அதற்கு பதிலாக தங்களது வாதத்தைதான் முன் வைப்பார்கள் ம.தி.மு.க வினரும் அதன் தலைவர் வைகோவும்.நாலாவது,அஞ்சாவது வட்டம்,குட்டம் எல்லாம்,ஒன்றிய கவுன்சிலரின் கைத்தடிகளுடன் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்க மாட்டார்கள் என்பது தெரிந்தே, இந்த தைரியசாலிகள் துனிச்சலாக வைகோவினை மட்டும் சொத்தை வாதங்களை வித்தாக்கி விமர்ச்சிக்கிறார்கள் என்பது தெளிவு!

வைகோ நாகரீகமாக,உண்மையான ஜனநாயக ரீதியிலான,அடாவடி அரசியலில் நம்பிக்கையற்ற,பதவிக்காகவும்,பணத்திற்காகவும் கொள்கைகளை அடகுவைக்காத ஒரு இயக்கத்தினையும்,அதன் தொண்டர்களையும் உருவாக்கி உள்ளார்....

இவர்களுக்கெல்லாம் ஒன்று மறந்து போய்விட்டது!..வைகோ பிரபலமானதே தமிழர்களுக்காகவும்,தமிழ்நாட்டிற்காகவும், பாராளுமன்றத்திலும்,சர்வதேச மன்றத்திலும் அவர் எடுத்து வைத்த வாதங்களும்,ஆற்றிய உரைகளும்தான்...

வட இந்தியாவில்,ஆளும் காங்கிரஸ் முதல் பாரதிய ஜனதா வரை,காஷ்மீரின் பரூக் அப்துல்லா முதல் பஞ்சாப்,அரியான,உ.பி. பீகார்,மத்திய பிரதேசம்,மகராஷ்டிட்ரம் என எல்லா மாநிலங்களிலும்,அத்தனை அரசியல் தலைவர்களிடத்திலும் அரசியல் தாண்டிய ஆழமான நட்பு வட்டாரம் வை.கோ விற்கு உண்டு...அதனை அரசியல் செல்வாக்காக வெளிபடுத்த அவர் விரும்பியதுமில்லை...

ஆனால் இந்த நட்பு வட்டங்களை கூட,தொலை தூரத்தில் வெளிநாடு வாழ் இந்திய தமிழர்களில் துயர் துடைப்பதற்காக மட்டுமே பல முறை பயன்படுத்தியுள்ளார்.இந்த செய்திகள் தமிழ்நாட்டில் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் ஆளும்வர்க்கத்தால் இருட்டடிப்பு செய்த வரலாறும் உண்டு...

இதற்கு சிறந்த உதாரனம் அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய புயல் காலத்தில் அமெரிக்க தீவு பகுதியில் சிக்கிய தமிழ் குடும்பங்கள் குறித்த தகவல் அறிந்த வை.கோ...அவர்களை மீட்க பிரதமர் மன்மோகன்சிங்கிடம்(அப்போது கூட்டனிகட்சி)பேசி,அவை அமெரிக்க முதுநிலை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு,தமிழ்குடும்பங்கள் தாயகம் மீள செய்த செய்தி எத்துணைபேருக்கு தெரியும்...

தமிழினை,தமிழனை பயன்படுத்தி கட்சி வளர்க்க வேண்டும்.கட்சியை பயன்படுத்தி குடும்பத்தினை வளம்பெற செய்யவேண்டும்,,,என்பதே இன்றையா கட்சி தலைமைகளின் அறிவிக்கபடாத கொள்கையாக இருக்கும்போது...

குடும்ப சொத்தினை விற்றாவது கட்சி நடத்த வேண்டும்,கட்சியினை பயன்படுத்தி தமிழனை தலைநிமிர செய்யவேண்டும் என்று நினைக்கும் வை.கோ...உங்களை போன்ற முதுகெழும்பற்ற விமர்ச்சகர்களுக்கு விளையாட்டு பொருளாய் இருக்கலாம்...

ஆனால் அவரது தியாகமும்,தமிழர்களுக்கான சமரசமற்ற போராட்ட உணர்வும்,முகவரியற்று போன ஈழதமிழர்களின் வேதனைகளை போக்க நடத்தும் பிரச்சாரமும்... உன்மையான உணர்வுள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் வை.கோ வினை ஒரு வரலாற்று நாயகனாகத்தான் சித்தரித்து வருகிறது என்பது மறுப்பதற்கில்லை...

இதோ பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்தித்த வை.கோ வின் கோரிக்கைகளும்,வாதங்களும்.....இது கூட உங்கள் மனசாட்சியை உலுக்காதா?..!

அப்புறம் முக்கியமான விஷயம்....மறக்காம உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்....முரன்பட்ட கருத்துகளுக்கு பதிலய் கருத்துகளையே முன்வைப்போம்....! ஆனால் விமர்ச்சனங்கள் எவ்வளவு ஆக்ரோஷமானதாக இருந்தாலும் நாகரீகமான முறையில் முன்வைப்பீர்கள் என்கிற நம்பிக்கையி பகுதி மட்டறுத்தலுக்கு உள்ளாக்கபடவில்லை..ஏனெனில் கருத்து சுதந்திரத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு!.

http://kodaimalai.blogspot.com/2011/01/blog-post_22.html?utm_source=BP_recent

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.