Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்கித் தேநீர் குடிக்க முடியாத சீனியும் தலைக்கு வைக்க முடியாத எண்ணெயுமே நிவாரணம்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அல்லலுற்ற மக்கள் முகாம்களிலிருந்து வீடு திரும்பி ஒருவாரம் கடந்த நிலையிலும் அரச நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.

உலக உணவுத் திட்டத்தின் கீழ்

ஒருநேரத் தேநீர் நக்கிக் குடிக்க முடியாதளவு 20 கிராம் சீனியும்

தலைக்கு வைக்கப் போதாத அளவு 20 கிராம் தேங்காய் எண்ணெயும்

60 கிராம் பருப்பும்

250 கிராம் அரிசியும்

ஒரு நாளைக்கு ஒருவருக்கு வழங்கப்படுவதாகவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாகப் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளும் அரச நிவாரணம் என்று கூறிப் பிரதேச செயலாளர்களினால் வழங்கப்படுவதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

குருமன்வெளி 12 சக்தி சிக்கன சேமிப்பு கடனுதவி சங்க வருடாந்த பரிசளிப்பு விழா குருமண்வெளியில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.வீடு சேதமடைந்த மக்கள் இருக்க இல்லிடமின்றி கஷ்ரப்படுகின்றனர். உலருணவு நிவாரணம் வழங்கப்படுமென அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்ட போதிலும் முகாம்களில் இருந்த மக்கள் வீடுகளுக்குத் திரும்பி சுமார் ஒருவாரம் கடந்த நிலையிலும் இதுவரை உலக உணவுத் திட்டத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்ற நிவாரணங்களை விட எதுவும் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிவாரணங்களை பிரதேச செயலாளர்கள் அரச நிவாரணம் எனத் தெரிவிக்கின்றனர். நக்கி தேநீர் குடிக்க முடியாத சீனியும் தலைக்கு வைக்க போதாத தேங்காய் எண்ணெயும் நிவாரணமாக வழங்கப்படுகின்றது. இரண்டும் அரச நிவாரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றபோதும் அளவிலும் பொருளிலும் வேறுபாடு காணப்படுகின்றன.

வீடு திருத்துவதற்கு 45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அதற்கான பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.இந்த மக்கள் இருப்பிடமின்றி அல்லலுற்று வருகின்றனர். இதேபோன்று அனைத்துவிவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன. பல விவசாயிகள் தற்கொலைக்குச் செல்லும் அளவிற்கு வந்துள்ளனர்.

இந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.உலருணவு நிவாரணத்தைப்போன்றுதான் இந்த நஷ்டஈடும் அமையுமோ என்ற கேள்வியே எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=6001:2011-01-25-05-15-56&catid=51:local&Itemid=85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.