Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுலையும் ஏமாற்றுவார் மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலையும் ஏமாற்றுவார் மஹிந்த

தமிழர்களின் விடயம் தொடர்பாக இலங்கை அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ராகுல்காந்தி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினர்.

தமிழர்களின் விடயம் தொடர்பாக இலங்கை அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ராகுல்காந்தி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினர். "கருத்துக்களைக் கூறுவது அவரது சுதந்திரம்\\\'\\\' என மஹிந்தர் அவதானத்துடன் பதிலளித் திருந்தார். இது நடந்து முடிந்த பின்னர் அனைத்துலக ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் பேசிய ஜனாதிபதி 13ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினை அடியொற்றியே தீர்வு முன்வைக்கப்படும் என்றிருக்கிறார். விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 13 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் பிளஸ் தொடர்பாக மஹிந்தர் பேசியிருப்பது இதுதான் முதல்முறை. போர் முடிவுக்கு வந்த கையோடு "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் ராம் ஜனாதிபதியைப் பேட்டி கண்டிருந்தார். அதில், 13ஆவது அரசமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மஹிந்த பேசியிருந்தாலும் தீர்வுக்கான அடிப்படையாகத் தான் அதனைத் பயன்படுத்த இருக்கிறார் என்று நேரடியாக அவர் கூறவில்லை. நவம்பர் 2010 அந்தப் பேட்டி வெளிவந்திருந்தது. அதில், 13ஆவது திருத்தம் பற்றி எதனையும் குறிப்பிடாத மஹிந்த, அதிகாரப் பகிர்வைவிட அபிவிருத்தி முயற்சிகளுக்கே உடனடி முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதற்கெல்லாம் முன்னர், இந்த நாட்டில் போர் நடைபெற்று வந்தபோது 13ஆவது அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பாகவே மஹிந்த வழமையாகப் பேசுவார். ஆனால் போர் முடிவுற்ற பின்னர், அவர் வழங்கிய பேட்டிகளில் 13ஆவது திருத்தம் பற்றிக் குறிப்பிட்டபோதும், "நான் அதனை நிறைவேற்றுவேன்\\\'\\\' என ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை. ராகுல் காந்தியின் கருத்துக்குப் பின்னரே, அதாவது போர் முடிவுக்கு வந்த பின்னரே மஹிந்தராஜபக்ஷவுக்கு 13ஆவது திருத்தம் தொடர்பில் நினைவுக்கு வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டதாக மஹிந்த கூறினார். முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு இந்தியா பல தடவை ஆலோசனை கூறியபோதும், அந்தத் திசையில் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காது காலத்தை இழுத்தடித்து வந்தார் அவர். திடீரென, முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு நியமித்தார். முதலாவது சுற்றுப் பேச்சு முடிவுற்ற பின்னர், இரண்டாவது சுற்றுப் பேச்சு நடந்துகொண்டிருப்பது புதிய முன்னேற்றமாகும். இந்தப் புதிய முன்னேற்றம் ராகுல் காந்தியின் அறிவிப்பினாலேயே சாத்தியமானது. ராகுல் காந்தி இந்த அறிவிப்பை மேற்கொண்டதுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்பதுதான் மிக முக்கியமானது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ராகுல் காந்தியினதும் காந்தி குடும்பத்தினதும் அக்கறை அதிகரித்துள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காந்தி குடும்பம் 13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாகக் காட்டும் ஆர்வத்தினை நன்கு உணர்ந்து கொண்டதால் மஹிந்தவும் தற்போது ஆர்வமிகுதியாக அதுபற்றிக் கதைக்கத் தொடங்கியிருக்கலாம். 13ஆவது திருத்தம் தொடர்பான காந்தி குடும்பத்தின் ஆர்வம் அதிகரித்திருப்பதற்குத் தமிழ்நாடு தேர்தல் நெருங்கி வருவதும் காரணம் என்பதை மஹிந்த நன்கு அறிவார். போரிலும் தேர்தலிலும் மஹிந்த அரசு வெற்றி பெறுவதற்கு இந்திய அரசு உதவியது என்பதையும் நினைவிற் கொள்வது நல்லது. போர் நடைபெற்ற காலப் பகுதியில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அழுத்தம் கொடுத்ததைப்போல இந்திய அரசும் மஹிந்த அரசு போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளு மாறு அழுத்தம் கொடுத்திருந்தால், மஹிந்தவினால் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

மறுபுறத்தில் காங்கிரஸ் அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இவ்வாறு செய்தமையினால் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை இழந்தது. தமிழ்நாடு தேர்தல் நெருங்கிவிட்டது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வெற்றி பெறவேண்டுமாயின், அதற்கு மஹிந்தவின் உதவியும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும். இலங்கைப் போரில் மஹிந்தவை வெற்றிபெறச் செய்ததன்மூலம் காந்தி குடும்பத்தின் காங்கிரஸ் அரசும் இலங்கையின் மாவீரர்களாக மஹிந்த குடும்பத்தினர் மாறுவதற்கு வழியமைத்திருக்கிறார்கள். தனது நன்றியைக் காட்டும் விதத்தில், தற்போது காந்தி குடும்பத்தை, குறிப்பாக ராகுல் காந்தியை தமிழ் நாட்டில் வீரனாகக் காட்டுவதற்காக ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். தான் போரில் பெற்ற வெற்றியின் நற்பெயரைப் பயன்படுத்தி ராஜபக்ஷ தனது மகன் நாமல் ராஜபக்ஷவை தனது ஆட்சியின் அடுத்த வாரிசாக வரித்துக்கொள்ள முடிந்தது.அவர் போரில் வெற்றி பெறுவதை இந்தியா தடுத்திருந்தால், இந்த நேரம் ராஜபக்ஷவின் குடும்பம் இல்லாமல் போயிருக்கும். எனவே, காந்தி குடும்பத்தின் இளவரசனான ராகுல் காந்தி, தமிழ் மக்கள் மத்தியில் தன்னை வீரனாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு மஹிந்த உதவ வேண்டும் என்பதே இப்போதுள்ள நியதி.இந்த நியதியின் அடிப்படையிலேயே மஹிந்த இப்போது 13ஆவது திருத்தம் குறித்துப் பேசுகிறார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடனும் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார். ஆனால், 13ஆவது திருத்தம் தொடர்பாக மஹிந்த மேற்கொண்ட அறிவிப்புக்கள் சிக்கலானவையாக உள்ளன. தான் 13ஆவது திருத்தத்தை வழங்க இருக்கிறார் என்று மஹிந்த கூறுகின்றபோதும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின்படி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதை அவர் எதிர்க்கிறார். 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசலாம் என்பதே மஹிந்தவின் நிலைப்பாடு. ஆனால் அதில் அவர் எவ்வளவு தூரம் இதயசுத்தியுடன் செயற்படுகிறார் என்பது கேள்விக்குரியதே. அதனால்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தானே பேச்சு நடத்துவதற்குப் பதிலாக, பொறுப்பை, ஓய்வூதியம் பெறும் நிலையிலிருக்கும் மூத்த அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் இந்த விடயத்தில்விக்கிரமநாயக்கவின் நேர்மை சந்தேகத்திற்குரியதே. போர் முடிவடையும்வரை, இந்தியாவை நடுவு நிலைமையில் வைத்திருக்க விரும்பிய மஹிந்த, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் கலந்து ரையாடல்களைக் காட்டி ஏமாற்றி வந்தார். அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவினர் ஆலோசனை வரைபைத் தயாரிப்பதற்குப் பல ஆண்டுகள் எடுத்தபோதும் அவை தற்போது மூலை யில் கிடந்து தூசி பிடிக்கின்றன. போர் முடிவடையும்வரை அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு வின் வரைபைக் காட்டி மன்மோகன் சிங்கை ஏமாற்றிய மஹிந்த, அவ்வாறே 13ஆவது திருத்த அம்சங்களைக் காட்டி ராகுல் காந்தியையும் ஏமாற்றி னாலும் ஆச்சரியப்படக்கூடியதல்ல.

கொழும்பில் இருந்து வெளியாகும் "டெய்லிமிரர்" ஆங்கிலப் பத்திரிகையில் அதன் பத்தி எழுத்தாளர் உப்புல் யோசப் பெர்னாண்டோ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது

(நன்றி புதினப் பலகை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.