Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்பாளர்கள் தெரிவில் உள்கட்சி மோதல்; தேர்தலில் இருந்து விலகினார் அங்கஜன்

Featured Replies

யாழ். மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல்களில் வேட்பாளர் தெரிவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பிரதம அமைப்பாளர் இ.அங்கஜன் தேர்தலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்துள்ளார்.

88_angajan.jpg

உள்ளூராட்சிச்சபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கான காரணத்தை விளக்கி அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

குடாநாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிசபை தேர்தல்களில் நாம் போட்டியி டுவதில்லை எனத் தீர்மானித் துள்ளது குறித்து எனதும் என்னைச் சார்ந்தவர்களினதும் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவது இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது எனக் கருதுகின்றேன்.

என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டு நொந்துபோய் இருக்கின்ற தமிழ்மக்களுக்கு அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் ஆகியவையே தற்போதைய தருணத்தில் முக்கியமானவை என்று கருதுகின்றேன்.

குறிப்பாக இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி என்பவற்றில் அரசியல்வாதிகள் அக்கறை கொண்டு செயற்படவேண்டிய தேவை இருப்பதாக நான் நம்புகின்றேன்.என்னுடைய இந்த நம்பிக்கைக்கு முன்னுரிமை அளித்து, ஜனாதிபதி அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் இவற்றுக்கான பல்வேறு முயற்சிகளையும் வேலைத் திட்டங்களையும் செய்து வருகின்றேன். இந்தப் பணியில் குறிப்பிட்டத்தக்களவுக்கு சாதித்துக் காட்டுவதே என்னுடைய தற்போதைய பிரதான நோக்கமாகும். ஆதலால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முக்கியமானதாக நாம் கருதவில்லை.

வெறுமனே அதிகாரத்தையும் பதவியையும் பெற்றுக் கொள்வதற்காகப் போட்டியிடுவதற்கான பிரயத்தனங்களை விடுத்து, இளைஞர், யுவதிகளினது வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய பணிகளில் தொடர்ந்தும் ஜனாதிபதி அவர்களின் நேரடி வழகாட்டலின் கீழ் ஈடுபடுவதே சாலச் சிறந்தது என்று நம்புகின்றேன். இதனை கருத்திற்கொண்டு நானும் என்னைச் சார்ந்தவர்களும் நடைபெறவிருக்கும் யாழ்மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைக ளின் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.

என்னுடைய நிலைப்பாடு, நான் தேர்தல் மீது நம்பிக்கை அற்றவன் என்றோ அல்லது தேர்தல் மூலமான அதிகாரங்கள் மூலம் மக்களுக்குச் சேவையாற்ற முடியாது என்று நம்புபவன் என்றோ அர்த்தம் அல்ல. அரசியலின் ஊடாக மக்களுக்கு குறிப்பிட்டத்தக்களவு சேவையாற்றிக் காட்டியதன் பின்னர் மக்களிடம் தேர்தலுக்காக வாக்கு கேட்பதே சிறந்த அரசியல் என்று நம்புகின்றேன். மக்கள் இதனைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புரிந்து கொண்டேன்.எதிர்வரும் தேர்தல் குறித்து என்னுடைய நிலைப்பாட்டை எனது குடாநாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புவதுடன் தொடர்ந்தும் எனது அரசியல் பணிகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன் என்றுள்ளது.

யாழிலிருந்து

சங்கு

THX

http://www.newjaffna.com/

Edited by புறோக்கர்

குடாநாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிசபை தேர்தல்களில் நாம் போட்டியி டுவதில்லை எனத் தீர்மானித் துள்ளது குறித்து எனதும் என்னைச் சார்ந்தவர்களினதும் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவது இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது எனக் கருதுகின்றேன்

உங்களுக்கையும் கோஸ்ரியா....?? ஒற்றுமைக்கு உங்களிட்டை வகுப்பை எடுக்க சொல்லி சொல்லுகினமே இங்கை....??

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.