Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறத்தமிழன் முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.சீமான்.

Featured Replies

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். ’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்“ கருணாநிதி அவர்களுக்கும், ’எவன் தடுத்தும் இனவெறியை இழக்கேன்’ என்ற சிங்களப் பேரினவாதிகளுக்கும், ’தமிழரை அழிப்பதன்றி வேறு வேலை எமக்கில்லை’ என்று அறைகூவி நம்மை அழித்த இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் அவன் உயிராயுதத்தால் ஒரு பாடம் புகட்டினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து 16 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும் முடிந்து போகவில்லை என்பது உண்மைதான்.தமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் மயிருக்குச் சமானம்.எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது ஆட்சி அதிகாரம். அதன் தொடர்ச்சியாகத் தினசரி கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது.முத்துக்குமாரின் லட்சியம் அனைத்தும் இன்றில்லையேல் என்றாவது அடைவது உறுதி.அதற்காக எத்தனை தடை வந்தாலும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கிறோம்.முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்து எமது பயணத்தைத் தொடருவோம்.

சீமான்

Edited by hari

  • ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த சென்னை இளைஞன் முத்துக்குமாரின் உருவச் சிலையை, அவரது சொந்த ஊரான திருச்செந்தூரில் திறந்து வைக்கவுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

  • சிங்கள இனவெறிப் போரை தடுத்து நிறுத்தக் கோரி உயிரிழந்த முத்துக்குமாரின் 2-ம் ஆண்டு நினைவுதினம் மற்றும் வெண்கல உருவ்ச்சிலை திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 29-ம் தேதி அவரது சொந்த ஊரான திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறுகிறது.

http://www.alaikal.com/news/?p=55693

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். ’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்“ கருணாநிதி அவர்களுக்கும், ’எவன் தடுத்தும் இனவெறியை இழக்கேன்’ என்ற சிங்களப் பேரினவாதிகளுக்கும், ’தமிழரை அழிப்பதன்றி வேறு வேலை எமக்கில்லை’ என்று அறைகூவி நம்மை அழித்த இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் அவன் உயிராயுதத்தால் ஒரு பாடம் புகட்டினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து 16 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும் முடிந்து போகவில்லை என்பது உண்மைதான்.தமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் மயிருக்குச் சமானம்.எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது ஆட்சி அதிகாரம். அதன் தொடர்ச்சியாகத் தினசரி கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது.முத்துக்குமாரின் லட்சியம் அனைத்தும் இன்றில்லையேல் என்றாவது அடைவது உறுதி.அதற்காக எத்தனை தடை வந்தாலும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கிறோம்.முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்து எமது பயணத்தைத் தொடருவோம்.

சீமான்

வெற்று வேட்டாய் சீறாமல்

ஊற்று பொங்கியெழ உன்னுடன்

ஈற்றில் இறுதி வரை யாரிருப்பார் என்பதனை

வெறும் கூற்றில் இலக்ககற்றி-

வெற்றி தீட்டுவாய் சீமானே!

ஆதங்கம் இங்கிழைய

ஆற்றல்கள் ஆங்கு பெருக

தங்குமிடம் சகதியாய்

ஈழத் தமிழன் எந்நாளும்.

எதிர் பார்ப்பாய் நாட்கள்

கருகுகின்றதே தவிர

தவசாக ஓர் நாள் விடியும் என்ற எதிர் பார்ப்பில்???

வினாக் குறியாய் எம் வாழ்வு

வினைத் திறன் அறுத்தவரால்

விதி நொந்து அழாமல்

விவேகமாக இலங்கிடு நீ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.