Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவந்தமாக இலங்கைக் கடலுக்கு அனுப்பப்பட்ட றோலர்களின் உரிமையாளர் பாலு

Featured Replies

பருத்தித்துறை மற்றும் மாதகல் பகுதியில் அண்மையில் 136 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தின் பின்னணியில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும் இந்திய மத்திய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியுமான தி.மு.க. பின்னணியில் இருப்பதாக மாதகலைச் சேர்ந்த பங்குத் தந்தை ஒருவர் கூறியுள்ளார்.மீனவ சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றி வரும் வண.பிதா ஆனந்தகுமாரே இந்த விடயம் குறித்து எக்ஸ் பிரஸ் செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

உதாரணமாக கடந்த திங்கட்கிழமை 50 றோலர்கள் மாதகல் கடல் பகுதியில் காணப்பட்டன என்று குறிப்பிட்டுள்ள அந்த மத குரு தமிழக மீனவர்களை கடத்தி வந்த விடயத்தில் யாழ்ப்பாண மீனவர்கள் சட்டத்தை தமது கரங்களில் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"பலவந்தமாகவே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக அந்த மீனவர்கள் தனக்குத் தெரிவித்ததாக வண.பிதா தெரிவித்திருக்கிறார். இந்த மீனவர்கள் விடயத்தில் அரசியல் ரீதியான தூண்டுதல்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த விடயத்தில் இலங்கைக் கடற்படை தூண்டியதா அல்லது உதவி வழங்கியதா என்பது பற்றி கேட்டபோது, இலங்கைக் கடற்படை இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லையெனவும் தி.மு.க. இதன் பின்னணியில் இருந்ததாகவும் அத்துடன், யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் மதகுரு ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக் கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரமானது இந்தியாவில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவே பொறுப்பேற்க வேண்டுமென பிடிபட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர். ட்றோலர்களின் உரிமையாளர்களால் அழிவையேற்படுத்தும் றோலர்களை இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவி ஈடுபடுத்துமாறு தாங்கள் பலவந்தப்படுத்தப்பட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த ட்றோலர் படகுகள் யாவும் தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவையென அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று வண.பிதா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

நாங்கள் பிடிக்கும் மீன் அளவின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதிகளவு மீன்களைப் பிடிக்கவில்லையாயினும் றோலர்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஊதியங்களை வழங்குவதாகவும் பிடிபட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர். அநேகமான மீன்பிடி றோலர்கள் தி.மு.க. தலைவர் ரி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என மீனவர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதாக வண.பிதா ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்தியக் கடல் பகுதியில் மீன்கள் குறைவாக இருப்பதால் தாங்கள் இலங்கைப் பகுதிக்கு வந்ததாகவும் அவ்வாறு செய்யுமாறு றோலர்களின் உரிமையாளர்கள் தங்களை வலியுறுத்தியதாகவும் அந்த மீனவர்களை மேற்கோள் காட்டி வண.பிதா ஆனந்தகுமார் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அந்த மீனவர்களால் பாலு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு சுமத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. பழிவாங்கப்படுவார்கள் என்ற அச்சத்தினால் அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லையென அவர் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்டுவதற்கு யார் என்ற நிலையிலேயே தமிழக மீனவர்கள் இருப்பதாகவும் வண.பிதா ஆனந்தகுமார் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=8127:2011-02-24-00-34-20&catid=34:hotn-news&Itemid=99

சோனியா-கருணா-டக்லஸ் சதியில் பாலுவின் படகு.

பிரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியு இந்தியன் எச்ப்ரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது.சமீபத்தில் தமினாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றியா செய்தி அது. ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது. தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்துவந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.

ஆனால் அதற்குபிறகு, ஈழ மீனவர்களை வைத்து இந்திய தூதரக வாயிலில் போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் செய்பவர்கள் என்று புரிய வேண்டி வந்தது. இதற்காகவே அங்கு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தா செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.அப்படியானால் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் உள்ள எருபாடுகளை பயன்படுத்தி டக்லஸ் நுழைந்துவிட்டார் என்றும், அதுவே அவர் ராஜபக்சேவிற்கு செய்யும் விசுவாச வேலை என்றும் ம்ட்டுமே எண்ண வேண்டியிருந்தது .இப்போது அதையும் தாண்டி கதை செல்கிறது. அதாவது அங்கே யாழ் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க இழுவளைகளுடன் கூடிய படகுகளை அனுப்பியது அந்த படகுகளின் முதலாளி தி.மு.க.எம்.பி. டி.ஆர்.பாலு என்று தெரிய வந்துள்ளது.இது பயங்கர அதிர்ச்சி செய்தியாகும்.. ஏன் என்றால் தற்செயலாகவோ, அல்லது இயற்கையில் இருக்கின்ற முரண்பட்டு காரணமாகவோ எழுந்த ஒரு தகராறை சிங்கள அரசும், அவர்களின் அடிவருடி அமைச்சரான டக்ளசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் உள்ள பகையாக ஆக பார்க்கிறார்கள் என்பதே நமது புரிதலாக இருந்த நேரத்தில், அந்த நாடகத்தில் தி.மு.க.தலைமையின் விசவாச எம்/பி உள்ளே நுழைந்து குட்டையை குழப்பியுள்ளார் என்பது பெரும் அத்ர்ச்சிதானே?

இந்த நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று இப்போது தெரிந்துவிட்டது. அதுமாத்திரம் இன்றி இந்த நாடகத்தில் இந்திய அரசும், தமிழக அரசியல்வாதிகளும் ஈடுபட்டிருப்பதும் இப்போது வெளியே வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை கவலைப்படாமல் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இப்போது மட்டும் ஏன் தெருவுக்கு வந்து போராட தன் மகள் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை இறக்கிவிட்டார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போது அதற்கும் பதில் கிடைத்திவுட்டது. அவரே எழுதி, அவரே நடித்த நாடகத்தில் கதாபாத்திரங்களாக பாலுவும், கனிமொழியும், நடித்திருக்கிறார்கள் என்பதும், அந்த தீவிலிருந்து அந்த நாடகத்தில் நடித்தவர் டக்லஸ் என்ற இலங்கை அமைச்சர் எனபதும் புரிந்துவிட்டது.

ராஜபக்சே என்ற அரச தஹ்ளைவரின் பதவியை காப்பாற்ற டக்லஸ் என்ற அவரது நண்பரும், கருணாநிதி என்ற இன்னொரு நண்பரும் ஏற்பாடு செய்த நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. என்னதான் ராஜபக்சேவிடம் பல வெகுமதிகளை பெற்றாலும், டக்ளசும், கருணாநிதியும் அப்படி தங்களை இழந்து அல்லது தாங்கள் அமபலப்பட்டு நண்பே ராஜபக்செவிர்க்காக இத்தகைய இழி செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இருவருமே அரசியலில் பழத்தை தின்று கோட்டையை போட்டவர்கள்.தங்களுக்கு லாபம் இல்லாமல், தங்காளின் நலன் முதன்மையாக இல்லாமல் இந்த இருவருமே எந்த தொழிலிலும், அல்லது நாடகத்திலும் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கும் போது டக்ளசுக்கு இதில் எண்ண பலன்? அவர் மீது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள பிடி வாரண்டு ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதியின் தயவு வேண்டும். அதற்காக அவர் கருணாவின் எந்த நாடகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்பது புரிகிறது.

அப்படியானால் தமிழக முதல்வர்தான் நாடகத்தின் கதை-வசன கர்த்தாவா? எதற்க்காக அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் கருணா என்ற முதல்வர் விளையாட வேண்டும்? சமீபத்தில் தமிழக கரையோரம் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், அதை ஒட்டி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் கூடிவருவதும் முதல்வர் கருணாவிற்கு தெரியவந்தது. அதற்கு எண்ண வழி என்று டில்லியை அவர் கேட்டால் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு போல, கடலிலே எல்லையை கடக்க கூடாது என்று மட்டுமே கூறிவருகின்றனர். கடலிலே எல்லை கிடையாது என்பதும், குறிப்பாக மீன்வர்களுக்கு கடலில் மீன் பிடிக்க எல்லை கிடையாது என்பதும் பகிரங்கமாக மீனவர்கள் மைப்புகளால் முன்வைக்கப்படுவதும் அந்த உண்மை தெரிந்தால் இந்திய அரசின் வாதம் அம்பலமாகும் என்பதால் அந்த உண்மையை உடைக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில உலவுத்த்ரைகள் எண்ணின.

அதற்கு அவர்கள் இருநாட்டு மீனவர்கள் மத்த்டியில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்த திட்டமிட்டனர்.ஆனால் அவர்களுக்கு அத்ரிச்சி தரும் விதத்தில் இருநாட்டு மீனவர்களும் இணைந்து கடலில் இருநாட்டு மீனவரும் இருநாட்டு எல்லைகளிலும் மீன் பிடிக்க உரிமை உண்டு என்று அறிவித்தனர். இன்றுவரை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களுக்குள் சமாதானமாக போய்விட்டால் இரு நாட்டு அரசுகளுக்கும் தலைமை ஆதிக்கம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த வேறுபாடுகளை பயன்படுத்த அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தமான இழுவளையுடன் யாழ் கரைக்கு வரவேண்டாம் எனபதையே மீற ஒரு திட்டம் போடப்பட்டது. அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலுவின் படகுகள் முதலாளியின் கட்டளையுடன் பயன்படுத்தப்பட்டன என்பதே இப்போது வடக்கு இலங்கையின் பாதிரியார் வெளியிட்டிருக்கும் தகவல். டி.ஆர்.பாலு என்பவர் சிறிய கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடித்து அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்துவருபவர். அந்த மனிதரின் படகுகள் சில நாகப்பட்டினம் பகுதியில் இந்த வேளையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகி உள்ளது.

அதனால்தான் தி.மு.க.தலைமை திடீரென அந்த பிரச்சனையில், பதினாலு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் மக்களை வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்துவந்து, இலங்கை எத்ரிப்பு என்பதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பதும் இப்போது தெரிந்துவிட்டது.

POSTED BY MANIBLOG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.