Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது மக்கள் போராட்டக்காலம்

Featured Replies

வடக்கு – கிழக்கு ஆபிரிக்காவும் வடக்கு – கிழக்கு இலங்கையும்.. March 3, 2011

வட ஆபிரிக்காவில் தலைவர்கள் இல்லை கட்சிகள் இல்லை வெறும் மக்கள்தான் போராடுகிறார்கள், வெல்கிறார்கள்.. எப்படி..??

ஈழத் தமிழனுக்கு அநீதி நடந்தால் உலகம் பார்த்துக் கொண்டிருக்காது..!

பாராளுமன்றம் ஓர் உலக மேடை அதை நாம் புறக்கணிக்கக் கூடாது.. !

இந்த இரண்டு வாசகங்களும் பழைய கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் அவருடைய சகாக்களும் மேடைக்கு மேடை முழங்கிய பழைய வாசகங்கள். 1970 களில் தேர்தல் வெற்றிக்காக பாவித்த முழக்கங்கள்.

2009 மே 18ம் திகதிக்குப் பிறகு புலிகள் மட்டுமல்ல உலகம் பார்த்துக் கொண்டிருக்காது கொள்கையும் கூடவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

அப்படியானால் எகிப்திலும், லிபியாவிலும், ரூனிசியாவிலும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கவில்லையே என்ற கேள்வி நமது மனதில் இயல்பாக எழும்..

எகிப்திலும் 83 வருடங்களாக நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது, ஆனால் எகிப்திய மக்கள் சரியான தருணம் வந்தபோது சரியான திசையில் பாய்மரத்தை விரித்தபோது 18 நாட்களில் அந்த வெற்றியைப் பெற்றார்கள். உலகம் அவர்களைப் பார்த்தது.

உலகப் பொருளாதார மந்தம், விக்கிலீக்ஸ் அதிர்வு இரண்டையும் அவர்கள் சரியாக பயன்படுத்தி வெற்றிக்கனி பறித்தார்கள்.

இப்போது..

லிபியாவிற்கு எதிராக திரும்பியிய உலகம் ஏன் சிங்கள இனவாத அரசுக்கு எதிராக திரும்பவில்லை என்று அடுத்த கேள்வி எழும்.

கடந்த 40 வருடங்களாக தனது குடும்பத்தினரை வைத்து மாபெரும் சுரண்டலை செய்த கடாபியை உலகம் பார்த்துக் கொண்டிருந்து…

எகிப்தியரைப் பார்த்து லிபிய மக்களும் இந்த விசையை சரியாக பயன்படுத்தி வெற்றிக்கனி பறிக்கப் போகிறார்கள்…

ஆக..

தனது விசையை உணர்ந்து பயன்படுத்துவோருக்கு மட்டும் உலகம் உதவுகிறது. உங்களுக்கு தெரியாவிட்டால் அதை மற்றவரைப் பார்த்து பயன்படுத்துங்கள் என்றும் அது உற்சாகப்படுத்துகிறது. அப்படி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதவர்கள் செத்து சுண்ணாம்பானாலும் உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கும்..

காற்று எந்தப்பக்கமாக போகிறதோ அந்தப் பக்கமாக கூட்டிச் செல்ல வேண்டும் என்பது இதற்கான எளிய உதாரணம்.

2001 செப் 11 ற்குப் பிறகு உலகத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான அலைக்காற்று வீசியது. அப்போது சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்று வர்ணித்தது. அவர்களை பயங்கரவாதப் பட்டியலுக்குள் கொண்டுவர முயற்சித்து வெற்றியும் பெற்றது.

ஆகாயத்தில் போன பயங்கரவாத வேதாளத்தை சிறீலங்கா அரசு வன்னிக்குள் ஏணி வைத்து இறக்கியது. உலகக் காற்று ஒரு வேதாளம் போன்றது அதை திசை மாற்றிவிட்டால் நல்லதையும் தூக்கி வீசிவிட்டுப் போய்விடும்.

சிங்கள அரசு இனவாத அரசாக இருந்தாலும் அவர்களுக்கு வேதாளங்களை இறக்கும் கலை தெரிந்திருந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற குருட்டு வேதாளங்களை எல்லாம் தமிழருக்கு எதிராக இறக்குவதில் அவர்கள் வல்லவர்கள் என்று இப்போது மார்தட்டுகிறார்கள், பல தடவைகள் வெளிப்படையாகவும் சொல்லியுள்ளார்கள்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்து நாடுகளை உருவாக்கும் ஒப்பந்தங்கள் வரைவுபடுத்தப்பட்டபோதும் இதுபோல ஒரு புயல் வீசியது. தமிழ் தலைவர்களுக்கு தலப்பாகை கட்டி அந்தப் புயலை தமக்கு சாதகமாக்கி ஈழத் தமிழரை பொறிக்கிடங்கில் வீழ்த்தினார்கள் சிங்களத் தலைவர்கள்.

இவையெல்லாம் உலக சமுதாயம் என்கின்ற பெரும் காற்று வீசும்போது அதற்கு அமைவாக ஈழத் தமிழினம் சரியாகப் பாய் விரிக்காமல் விட்டதால் வந்த வினை என்றே கூற வேண்டும்.

இப்போது மூன்றாவது பெரிய உலகக் காற்று வீசுகிறது.. வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் வீசும் விடுதலைக்காற்று உலகத்தின் புதிய சூறாவளியாக அடித்துப் பிரளயம் பண்ணுகிறது.

உரிமை வேண்டுமென்று கோரும் மக்கள் தாமாக வீதிக்கு வந்தால் அதைப் பெறுவதற்குரிய உன்னத பருவம் இதுவாகும்..

இந்த நேரம் பார்த்து..

பட்டதெல்லாம் போதுமப்பா.. என்று மூச்சு விட்டபடி தமிழினம் பாய்மரத்தை இறுகக்கட்டி வைத்துவிட்டு அபிவிருத்திக்கு அத்திவாரம் கிண்டுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் உரையாற்றிய மகிந்த சமரசிங்கா தமிழர் கூட்டமைப்புடன் இரண்டு கட்ட பேச்சுக்களை வெற்றிகரமாக நடாத்திவிட்டோம் என்று உலக சமுதாயத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன..

அரசுடன் என்ன பேசுகிறோம் என்பதை வெளியிட முடியாது அது இரகசியம் என்று கூறுவதாக வீரகேசரி எழுதுகிறது.

அன்று..

புலிகள் அரசுடன் பேசியபோது இப்படித்தான் இரகசியம் என்றார்கள், இப்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

இன்று வீசும் உலகக் காற்று ஓய்ந்த பின்னர் புலிகளின் பேச்சுக்களைப் போலவே கூட்டமைப்பும் ஒன்றும் பேசவில்லை என்ற அரசின் செய்திக்குறிப்பு வெளியாகலாம்.

மேலும்…

உலகம் பார்த்துக் கொண்டிருக்காது… என்பதற்கு இன்னொரு கருத்தும் இருக்கிறது..

மாறிவரும் உலகத்திற்கு அமைவாக நாமும் மாறாவிட்டால் எம்மில் மாற்றம் வரும் என்று உலகம் அதே இடத்தில் பார்த்துக் கொண்டிருக்காது என்பதே அடுத்த கருத்தாகும்.

கூட்டமைப்பையோ மற்றவரையோ குறைகூறி பயன் இல்லை நமக்கு எங்கே போனது மதி … ?

எகிப்திலும், ரூனிசியாவிலும், லிபியாவிலும் யார் போராடுகிறார்கள் ?

கட்சிகள் இல்லை..

தலைவர்கள் இல்லை…

வெறும் மக்களே போராடுகிறார்கள்…

ஈழத் தமிழ் மக்களும் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

http://www.alaikal.com/news/?p=59317

  • தொடங்கியவர்

இன்று புலம்பெயர் சமூகமும் தாயக மக்களும் இணைந்து பொங்குதமிழ் போன்ற ஒரு எழுச்சி நிகழ்வை நடாத்தும் சாத்தியம் உள்ளதா? அதன் மூலம் இன்றைய உலக மாற்றத்தில் எமது நியாமான போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை தேடலாமா? இல்லை வேறு வழிகள் உள்ளனவா?

தாயகத்தில் இவ்வாறான மக்கள் போராட்டத்திற்கு சாத்தியங்கள் உள்ளதா? இதற்கு தமிழ் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் உதவி செய்யும் நிலைமை உள்ளதா? பல்கலைக்கழக மாணவ சமுதாயத்தால் முன்னெடுக்க முடியுமா?

சிங்கள அரசும், துணைக்குழுக்களும், போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவமும் என்ன செய்யும்? தமிழர்கள் கொலை செய்யப்படுவார்களா?

இல்லை முதல் நகர்வை புலம்பெயர் சமூகம் முன்னெடுக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம்பெயர் சமூகமும் தாயக மக்களும் இணைந்து பொங்குதமிழ் போன்ற ஒரு எழுச்சி நிகழ்வை நடாத்தும் சாத்தியம் உள்ளதா? அதன் மூலம் இன்றைய உலக மாற்றத்தில் எமது நியாமான போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை தேடலாமா? இல்லை வேறு வழிகள் உள்ளனவா?

தாயகத்தில் இவ்வாறான மக்கள் போராட்டத்திற்கு சாத்தியங்கள் உள்ளதா? இதற்கு தமிழ் அரசியல் கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் உதவி செய்யும் நிலைமை உள்ளதா? பல்கலைக்கழக மாணவ சமுதாயத்தால் முன்னெடுக்க முடியுமா?

சிங்கள அரசும், துணைக்குழுக்களும், போர்க்குற்றங்கள் புரிந்த இராணுவமும் என்ன செய்யும்? தமிழர்கள் கொலை செய்யப்படுவார்களா?

இல்லை முதல் நகர்வை புலம்பெயர் சமூகம் முன்னெடுக்க வேண்டுமா?

முதலில் அடைக்கலம் வேறு அண்டார்டிக்கா வேறு என்ற தெளிவான புரிதல் வேண்டும் தோழர் அகூதா.. இந்த மேற்கத்திய நாடுகள் ஈழ தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்பது தவறு.. கிந்தியாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு சிங்களத்தின் துணையோடு அனைவரையும் பயமுறுத்தி அச்சுறுத்தி கொன்றொழித்து இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளார்கள்.. இவர்கள் வாயில் பெபிகால் போட்டு ஒட்ட பட்டுள்ளது இதை திறக்க ஒரே வழி ... களப்பணி... அந்த அந்த நாட்டு குடி உரிமை பெற்றவர்கள் களத்தில் இறங்க வேண்டும் மயிலே மயிலே என்றால் இறகு போடாது..

இதான் களப்பணி...

2007021713860101.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.