Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகையாளர் டி.சிவராம் படுகொலை வழக்கு மீண்டும் மேல் நீதிமன்றில் விசாரணை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையாளர் டி.சிவராம் படுகொலை வழக்கு மீண்டும் மேல் நீதிமன்றில் விசாரணை:

[Tuesday, 2011-03-08 02:20:01]

தராகி என்று பலராலும் அறியப்பட்ட சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் டி.சிவராம் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஜுன் மாதம் 28 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெறும் என சாட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2005 ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சிவராமின் வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாக மாவட்ட நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து சிங்கள யூரர்கள் முன்னிலையில் விசாரணையை நடத்துவதென கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சிவராம் படுகொலையின் முக்கிய கொலையாளியாக புளொட் இயக்கத்தை சேர்ந்த பீற்றர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சிறிஸ்கந்தராசா என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

புளொட் இயக்கத்தை சேர்ந்த பீற்றர் என்பவரே இக்கொலையை புரிந்தவர்களில் முக்கியமான நபர் என்றும் இவரிடமிருந்து சிவராம் பயன்படுத்திய தொலைபேசி சிம் அட்டையும் தொலைபேசியும் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கடந்த 5வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்திருந்ததுடன் தடயப்பொருட்களாக சிம் அட்டைமற்றும் தொலைபேசி என்பனவற்றை சமர்பித்திருந்தனர். இவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த போது இந்த தடயப்பொருள்களும் விசாரணை அறிக்கைகளும் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து இவ்வழக்கை கிடப்பில் போட்ட மாவட்ட நீதிமன்றம் தற்போது இவ்வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தியுள்ளது. இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் யூன்மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளர் இவ்வழக்கின் சாட்சிகளுக்கு அறிவித்துள்ளார். ஆனால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட புளொட் இயக்கத்தை சேர்ந்த பீற்றர் என்பவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

seithy.com

சிங்கள பயங்கரவாதிகளின் ஆதரவுடன், இந்திய பயங்கரவாதிகளின் பின்னணியுடன் சிவராமின் கொலைக்கு உதவிய தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஜனாயகவாதியாக உலாவருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.