Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் உள்ள சட்டம் ஹிட்லரின் ஆட்சியிலேயே ஜேர்மனில் அமுல்ப்படுத்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் உள்ள சட்டம் ஹிட்லரின் ஆட்சியிலேயே ஜேர்மனில் அமுல்ப்படுத்தப்பட்டது

08 மார்ச் 2011

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் காவற்துறையினரும் படையினரும் வடக்கில் வாழும் அனைத்து தமிழ் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்து, மேற்கொண்டு வரும் புதுமையான பாதுகாப்பு நடைமுறை குறித்து நாம் இலங்கையர் அமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறு தொடர்ந்தும் பலவந்தமான சட்டங்களை அமுல்படுத்தி வருவது பாரிய தவறு என அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளதுடன், இதனை உடனடியாக நிறுத்துமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலமான கோரிக்கை விடுத்துள்ளது.

தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி பாதுகாப்பு படையினர் பலவந்தமாக வடபகுதிகளில் உள்ள குடும்பங்களிடம் 4 புகைப்படங்களை பெற்று வருகின்றனர். இந்த புகைப்படங்களில் கிராம சேவகர், காவற்துறை, பாதுகாப்பு படை ஆகிய தரப்பிடம் தலா ஒரு படம் வழங்கப்படுகிறது. அத்துடன் ஒரு படத்தை குடும்பங்களுக்கு வழங்குவதுடன் அதனை அவர்கள் வீட்டின் விராந்தாவில் மாட்டி வைக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

இதனைத் தவிர அந்த புகைப்படத்தில் இல்லாத எவரும் வீட்டில் தங்கி இருக்கக் கூடாது எனவும் புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பு பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக தாம்; இரண்டு விடயங்களை முன்வைக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான அநீதியான, பலவந்தமான சட்டங்களை அமுல்ப்படுத்துவது பாரிய தவறாகும். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ள சந்தர்ப்பத்தில், இப்படியான மக்களின் சுதந்திரத்திற்கு தடையேற்படுத்தும் வகையில் சர்வாதிகார சட்டங்களை அமுல்படுத்துவது பிரச்சினைக்குரியது.

அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று அனைவரும் சட்டத்திற்கு முன் சரிநிகர் சமன் என்ற நிலையில் தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். இதனை மீறி செயற்படுவதானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். முக்கியமாக இந்தச் சட்டத்தை வடபகுதி தமிழர்களுக்கு மாத்திரம் அமுல்படுத்துவதானால் இனவாத செயற்பாடே அன்றி வேறொன்றுமில்லை என்பது தெளிவானது.

இரண்டாவது விடயம் என்னவெனில் இந்த நடைமுறைகள் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கு பாரிய தடையாக அமைந்துள்ளது. அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை இனவாத அடிப்படையில் மீறுவது அனர்த்தமானது என்பதை நாம் 30 வருடங்கள் அனுபவித்து வந்துள்ளோம். இவ்வாறான பலவந்தமான சட்டங்களை இலங்கையை தவிர ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டன. ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் ஆட்சியில் அந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் இப்படியான சரிசமமற்ற மற்றும் அநீதியான சட்ட நடவடிக்கைகள் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் பாரிய தடையாக அமையும் எனவும் நாம் இலங்கையர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.