Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக உணவு திட்டம் வடக்கில் மூடப்படும் நிலை

Featured Replies

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்டுவரும் உலர் உணவு நிவாரணம் முற்றாக நிறுத்தப்படலாமென அஞ்சப்படுகின்றது. இதனையடுத்து வட பகுதி மக்கள் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இவ்வுலர் உணவு நிவாரணத்தை நம்பியே யாழ்.குடாநாட்டிலும் வன்னியிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் உலர் உணவு நிவாரணம் முற்றாக நிறுத்தப்பட்டால் அக்குடும்பங்கள் நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டிவரலாமெனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

இதனிடையே பாடசாலை மாணவர்களுக்கென வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம் தடைப்படும் நிலையை எய்தியுள்ளது. முதலாவது தவணைக்கான ஐம்பது சதவீத, உலர் உணவுப் பொருட்களே பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதலாம் தவணைக்கான கால எல்லை முடிவுறும் நிலையிலும் இரண்டாம் கட்ட உலர் உணவுப் பொருட்கள் இதுவரை வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் பெரும்பாலான பாடசாலைகள் மாணவர்களுக்கான சமைத்த மதிய உணவை இடைநிறுத்திவிட்டன.

உலக உணவுத் திட்ட அதிகாரிகள், மதிய உணவுத் திட்டம் தொடருமா? என்பது பற்றி திருப்திகரமான பதிலெதனையும் வழங்க மறுத்து வருவதாக பாடசாலை அதிபர்கள் தரப்பில் கூறப்படுகிறது. உலக உணவுத் திட்டம் யாழ்ப்பாணத்து களஞ்சியங்கள் வெறிச் சோடிப்போய் உள்ளன.

ஆனாலும் முதலாம் தவணைக்கான மீதிப் பொருட்களை அடுத்துவரும் ஒரு சில தினங்களுக்குள் விநியோகம் செய்யப் போவதாக தெவித்துள்ளனர். எனினும் அடுத்து வரும் மாதங்களுக்குள் பாடசாலைகளுக்கான மதிய உணவுத் திட்டம் நின்று போகலாமென்றே அஞ்சப்படுகின்றது.

இதனிடையே உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளது பணியாளர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக உலக உணவுத் திட்டத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. அதன் அலுவலகங்களும் மூடப்பட்டு வருகின்றன. மிகக் குறைவான பணியாளர்களுடன் அலுவலக ஒருங்கிணைப்பு பணிகளை மட்டும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவி நடவடிக்கைகளுக்கான சர்வதேச உதவிகள், தடைப்பட்டமையே நிவாரண இடைநிறுத்தத்திற்கு காரணமென கூறப்படுகின்றது.

http://www.eelanatham.net/story/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.