Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தான் யாரையும் கடத்தவில்லையாம் கருணாவின் பொய்யுரை

Featured Replies

திங்கட்கிழமை, மார்ச் 28, 2011

திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் வைத்து 2008ஆம் ஆண்டு தமது பிள்ளையை கருணாகுழுவினர் கடத்திச்சென்றதாக அம்பாறையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவில் ஒரு தாயார் தெரிவித்ததா வெளியான செய்தி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பிரதியமைச்சரும் ஒட்டுக்குழு அதிபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரனால் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அம்பாறையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவில் தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பில் கூறுகயில்

நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியது முதல் ஆயுத கலாசாரத்தில் நம்பிக்கையிழந்து எமது மக்களின் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு அரசியலில் பிரவேசித்து எமது மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன்.

குறித்த காலப்பகுதியில் தனது முகாம் எதுவும் அப்பகுதியில் இயங்கவில்லை. அத்துடன் சீலன் என்பவரோ அல்லது ஜூட் என்பவர்கள் எமது கட்சியில் இல்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் உப தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் அக்கட்சியின் உறுப்பினராகவே செயற்பட்டுவருகின்றறேன்.

அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடாக இப்பகுதியில் இயங்கிவந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்துடன் பாரதி என்பவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. அவர்களை நான் இயக்கியதும் இல்லை, அவர்களுடன் எந்த தொடர்பினையும் பேணியதும் கிடையாது.

இந்த நிலையில் குறித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் இவ்வாறான கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பில் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் இந்த சம்பவத்துக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

விடுதலைப்புலிகளுடனான போர் இலங்கையில் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளை புனர்வாழ்வு முகாமில் இருந்து எனது தனிப்பட்ட செல்வாக்கைக் கொண்டு மீட்டு அவர்களை இந்த நாட்டின் சுதந்திர நீரோட்டத்தில் இணைத்துள்ளதை இம்மாவட்ட மக்கள் அறிவார்கள்.

அத்துடன் தற்போதும் வாடிக்கொண்டிருக்கும் வடகிழக்கு இளைஞர்களை மீட்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்படும் வரை அவர்களுக்கு தேவையானவற்றை மேற்கொள்வதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றேன்.

இவ்வாறான நிலையில் கடத்தவோ அல்லது ஒருவரை துன்புறுத்தவோ வேண்டிய தேவை எனக்கில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முரளிதரனால் கடத்தப்பட்ட பிள்ளைகள் முரளிதரன் குழுவில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.