Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகத்தின் பேரில் கைதான மனநோயாளி குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றிய 8 வருட சிறைவாசம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்தின் பேரில் கைதான மனநோயாளி குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றிய 8 வருட சிறைவாசம்:-

29 மார்ச் 2011

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநேயாளியான தமிழ்ப் பொதுமகன் ஒருவர் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி சாவகச்சேரியைச் சேர்நதவர் 50 வயதுடைய ஜெயராஜா என்ற இவர் 2002 ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் சாவகச்சேரி காவற்துறையினர் இவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது அவரை யாழ் சிறையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பின்னர் இவர் தவணைகளின் போது நீதின்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டு சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உள்ளார். அதன் பின் இவர் மீது சட்ட மாஅதிபர் திணைக்களம் எந்தவொரு வழக்கினையும் தாக்கல் செய்திருக்கவில்லை.

குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படாத நிலையில் கடந்த 8 வருடங்களாக இவர் யாழ் சிறைச்சாலையில் மனநோயாளியாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் மனநோயாளி என்பது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து சம்பவத்தினை விசாரணை செய்த சாவகச்சேரி நீதவான் எம் ஆனந்தராஜா குறித்த மனநோயாளியை நீதிமன்றில் இன்று பாரப்படுத்த உத்தரவிட்டார்.

குறித்த நபர் தொடர்பாக மருத்துவ அறிக்கையை பரிசீலித்த நீதவான் அவரை உடனடியாக விடுவிக்கவும் அவரது மனநோய்க்காக உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக அங்கொடை மனநோயாளர் சிகிச்சை மையத்தில் அவர் தொடர்பான மருத்துவ அறிக்கையை பெறவும் அவர் காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்களற்ற சாதாரண ஒரு மனநோயாளி கூட 8 வருடங்கள் யாழ் சிறைச்சாலையில் தங்கியிருந்துள்ளமை இன்றே அம்பலமாகியுள்ளது. நீதிமன்றின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.

gtn

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் நடைபெற்று இருந்தால் இந்த மன நோயாளி 8 வருடம் சிறை இருந்ததற்காக பல மில்லியன் பணத்தினை அவுஸ்திரெலியா அரசு இவருக்கு நஸ்ட ஈடாக வழங்கியிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.