Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள். ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி!!

Featured Replies

ஊடகச் செய்தி 29/03/2011

பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்

ஒன்பது பேர் உண்ணாநிலைப் போராட்டம்! மூவர் தற்கொலை முயற்ச்சி!!

பிரித்தானியாவில் வதிவிட அனுமதி நிராகிரக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூவர் தற்கொலை செய்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Harmondsworth Immigration Removal Centre

Colnbrook by pass

West Drayton

UB7 OHB

இந்த முகாமில் பெருவாரியான இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாமுக்கு திரும்பி வராத நிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ள ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக பிரித்தானியா செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளர்.

மேலும் பலர் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பபடுகின்றவர்கள் Uk-Border Agency Airport அதிகாரிகளால் Sri lankan immigration அதிகாரிகளிடம் கையளிக்கபட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக அக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை வேறு முகாம்களுக்கு பிரித்து அனுப்ப அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சு திணைக்களம் இது குறித்த அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கைக் தமிழர்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் பிரித்தானியா குடிவரவு திணைக்கள கொள்கை நிலைப்பாட்டை மீள பரிசீலிக்குமாறு அவசர வேண்டுகோளை கோரியுள்ளது.

பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் லீ ஸ்கொட் மற்றும் கரத் உட்பட பல அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்து அகதிகளின் அவசர நிலைகுறித்து எடுத்துரைத்துள்ளனர்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரங்கள் :

நாகேந்திரராஜா சுதாகாரன்

மார்கண்டு லோகேஸ்வரன்

தனரட்ணம் தனறோசன்

ஜேபார்சன் தேவநேசன்

கதிரேசன் திவாகரன்

ஆனந்தன் ஜெயராஜா

மைக்கல் ஜெயறீகன்

பீத்துர்பிள்ளை மோசெஸ்

வினேத் கண்ணன்

தொடர்புகளுக்கு : 074 249 280 83 ஜெகன் - 074 054 285 00 றொசான் - 074 043 675 00 சுதா

மேலதிக விபரங்களுக்கு :

வாசுகி முருகதாஸ் ( உள்துறை அமைச்சு செயலர் - பிரித்தானியா )

0208 470 66 55

நாதம் ஊடக சேவை

தகவல் துறைஅமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

letter_uk.jpg

http://www.yarl.com/forum3/uploads/monthly_03_2011/uk_refugee.mp3

http://www.dailymotion.com/swf/video/xhvh95

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.