Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள்

Featured Replies

ஊடகச் செய்தி

29 மார்ச் 2011

மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள்

மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக அறியமுடிகின்றது.

சட்டபூர்வமாக மலேசியாவில் தங்குவதற்கு அனுமதியற்ற நிலையில், வேலைவாய்ப்பு -கல்வி - மருத்துவம் ஆகிய அடிப்படை விடயங்களை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.

இதேவேளை, சட்டபூர்வ வதிவிட அனுமதி பத்திரம் அற்ற நிலையில் உள்ளுர் கண்காணிப்பு காவலாளிகளால், அகதிகள் கைது செய்யப்பட்டு, இரகசியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அச்ச நிலையும் தோன்றியுள்ளது.

இதுகுறித்து, ஏற்கனவே யுஎன்சீஆர் ஐநா நிறுவனம் உட்பட பல உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், சமீபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அகதிகளைச் சந்தித்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர்.

ஐநாவின் அகதிகளுக்கான சாசனத்தில் கையொப்பமிடாத நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் இருக்கின்ற நிலையில், இவ்வாறு அகதிகளாக தஞ்சமடைகின்றவர்களுக்கு மலேசியா வதிவிட அனுமதி வழங்க மறுக்கபடுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு யுஎன்சீஆர் ஐநா நிறுவனமே இவர்களுக்கான அகதிப் பதிவட்டையை வழங்கி வருகின்றது.

இருப்பினும் இந்த அட்டை சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் வேலைவாய்ப்பு கல்வி மருத்துவம் உட்பட பல அடிப்படை விடயங்களை எட்ட முடியாத நிலையில் Sri Lankan Tamil Refugees Organization Malaysiaஇத் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வருகின்றது.

யூஎன்சீஆர் ஐநா நிறுவனத்தால் மாதந்தம் அகதிகளுக்கு வழங்கப்படுகின்ற 93 அமெரிக்க டொலர்கள் வாழ்வாதாரத்துக்கு போதாத நிலையில் அகதிகளுக்கான உணவுத்தேவைகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்து வருகின்றது.

தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்கா அரசின் உக்கிரயுத்த காலத்தில் இருந்து இதுவரை 5000க்கும் மேற்பட்ட அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நாதம் ஊடக சேவை

தகவல்துறை அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.yarl.com/forum3/uploads/monthly_03_2011/kl_refugee.mp3

IMG_1479.JPG

IMG_1478.JPG

IMG_1471.JPG

IMG_1474.JPG

IMG_1465.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.