Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் நிலமும் பறிபோகின்றது - வடக்கு கிழக்கு சிங்களவர் அமைப்பு

Featured Replies

வியாழக்கிழமை, மார்ச் 31, 2011

இலங்கையின் கிழக்குப் பகுதியில் அரசாங்கம் நிலங்களைக் துண்டாடி வருவதாக வருவதாக வடக்கு, கிழக்கு சிங்களவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

யுத்தத்திற்குப் முன்னரான காலப்பகுதியில் எல்லைப் புறக்கிராமங்கள் என அழைக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களே தற்போது இவ்வகையான புதிய தீவிரவாதத்திற்கு முகங்கொடுத்து வருவதாக வடக்கு கிழக்கு சிங்களவர் சங்கத்தின் செயலாளர் ஆர்.எம்.ஏ.பண்டார தெரிவித்துள்ளதாக பீபீசியின் சிங்களச் சேவையான சந்தேசியாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்த காலமாக அவர்கள் மிகப் பெரிய பிரச்சினைகளையும் எண்ணற்ற சவால்களையும் சந்தித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் போதும்கூட அவர்கள் சுதந்திரமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் யுத்தத்திற்குப் பின்னர் அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் கூறி இந்த நிலங்களைக் துண்டாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது இந்த மக்களுடைய வீடுகளை படையினரும் பொலிஸாரும் தங்களுடைய பாதுகாப்பிடமாகவும் பங்கர்கள் அமைத்தும் பாவித்து வந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த மக்களுடைய நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

துறைமுக அதிகார சபைக்காகவும், தொல்பொருள் திணைக்களத்திற்காகவும், வனப்பாதுகாப்பிற்காகவுமே இவற்றைக் பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் இந்தக் கிராமங்களையும் சேர்த்து தமது எல்லையை வகுத்தார்கள். ஆனால் அப்போதும் இந்த மக்கள் தமது நிலத்தைப் பாதுகாத்துக் கொண்டார்கள். விவசாயத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் இப்போது போர் முடிந்து விட்டது. அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த மக்களுடைய நிலங்களைக் கையகப்படுத்தி இருக்கிறார்கள் என்று வடக்கு கிழக்கு சிங்களவர் சங்கத்தின் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் ஒரு இரகசிய உடன்படிக்கையின் கீழ் யுத்தத்தின் போது இலங்கைக்கு ஆதரவளித்தது என்று தெரிவித்த அவர் அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக திருகோணமலையிலுள்ள எண்ணெய்க்குதங்கள் இந்திய எண்ணெய்க் கம்பனி ஒன்றுக்குக் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு சம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்ததை அடுத்து அப்பகுதியைக் தன்வசப்படுத்திய அரசாங்கம் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்காக இந்தியாவுக்கு அதனை வழங்கியுள்ளது.

தற்போது புல்மோட்டையிலுள்ள இல்மனைற் தொழிற்சாலையையும் இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை இந்த நிலக் கையகப்படுத்தலை நிராகரிக்காத கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, இவை பலவந்தமாக அபகரிக்கப்படவில்லை. சட்டரீதியாகவே அவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

குலன்நுகே பகுதியிலிருந்து சில நிலப்பகுதிகளை அரசாங்கம் வனப்பாதுகாப்பு ஒதுக்கத்திற்காக கையகப்படுத்திய போதும் பின்னர் கிராமவாசிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து பயிர்ச்செய்கைக்காக அவை மீள வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து மாகாணசபையால் எதுவும் செய்யமுடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.