Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் 'தீர்வுப் பொதி': அரசைத் திருப்திப்படுத்தவா?

Featured Replies

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான தமது யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கப்போகின்றது. இம்மாத இறுதியில் அரசுடன் இடம்பெறும் பேச்சுக்களின் போது கூட்டமைப்பின் யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். கூட்டமைப்பின் யோசனைகள் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமா அல்லது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு திட்டமாக அமைந்திருக்குமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர்கள் மாறிமாறி தெரிவித்துவரும் கருத்துக்களும், எச்சரிக்கைவிடும் பாணியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் அறிவிப்பும்தான் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. இவை இரண்டுக்கும் இடையேயுள்ள இந்தியா வெறுமனே பார்வையாளராக இருக்கப்போகின்றதா அல்லது கூட்டமைப்புக்கு மேலதிக பலத்தைக் கொடுப்பதற்கான நகர்வுகளை முன்னெடுக்குமா என்ற கேள்யும் எழுப்பப்படுகின்றது.

போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் இடம்பெயர்ந்த மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகாணப்படாது அவர்களுடைய அவலங்கள் தொடர, அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வின்பால் தமது கவனத்தைச் செலுத்தியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் உண்மையில் முழுமையான விருப்பத்துடன் நடத்தவில்லை. தமிழர் தரப்புடன் பேச்சுக்களை நடத்துவதோ, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதோ அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் உள்ள ஒரு விடயமல்ல. இதற்கான ஆணையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் பெற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால்தான் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் வேண்டா வெறுப்புடன் முன்னெடுக்கன்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பித்த போதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெளிவாகக் கூறியிருந்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தொன்றுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, "மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணையை நீங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்" எனச் சுட்டிக்காட்டினார். இதில் 'மக்கள்' என ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டது சிங்கள மக்களைத்தான் என்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான்.

சிங்களக் கடும்போக்காளர்களின் ஆதரவுடன் கடந்த ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும், ஏப்ரலில் பொதுத் தேர்தலையும் சந்தித்து பெரும் வெற்றியைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார். மேலும் சில உள்ளுராட்சிமன்ங்களுக்கான தேர்தல்கள் மே மாதத்தில் நடைபெறவிருக்கின்றன. இந்த நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களில் அவரது இறுக்கம் தளரும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.

சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான நெருக்கடிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துமாறு இந்தியா மறைமுகமாகக் கொடுத்துவரும் நெருக்கடிகள் என்பனதான் இந்தப் பேச்சுக்களுக்கு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தன. போரினால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதிலும், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதிலும் தாம் பற்றுறுதியுடன் செயற்படுவதாகக் காட்டிக்கொண்டால், போர்க் குற்றங்கள் தொடர்பிலான அழுத்தங்கள் சற்றுக் குறையும் எனவும் மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது.

இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாவது கட்டமாக உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பது. இரண்டாவது இனநெருக்கடிக்கான நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வைக்காண்பது. பேச்சுக்களில் காணப்படும் இழுபறி நிலை அரசாங்கத்தின் வேண்டா வெறுப்பான போக்கை வெளிப்படுத்தப்போதுமானது. இதனைவிட கடந்த 3 கட்டப் பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டபோதிலும், அது கூட வெளியிடப்படவில்லை.

இந்திய அரசின் ஆதரவுடன் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50,000 வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டபோதிலும், ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா போட்ட அத்திபாரம் அப்படியே இருக்கின்றது. அந்த அத்திபாரத்துக்கு மேலாக ஒரு கல்கூட வைக்கப்படாததது இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை, இந்திய அரசுகள் எந்தளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.

எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலையே தாம் இனிமேல் கையாளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தத்துவம்பேசி தமது அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்துகொண்டுள்ள பின்னரும் எதுவும் நடைபெறவில்லை. மகிந்தவின் மாற்றான்தாய் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. பதிலாக சிங்கள மக்கள் தமக்கு வழங்கியுள்ள 'ஆணை' பற்றியே அவர் இப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றார்.

இந்தப் பின்னணியில்தான் அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது அறிவித்திருக்கின்றது. கடந்த வாரம் இலங்கையின் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் தீர்வு யோசனைகளைச் சமர்ப்பிக்காமலிருப்பதுதான் பேச்சுக்களுக்குத் தடையாக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அரசாங்கம் அரசியல் தீர்வு யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால், கூட்டமைப்பின் மீது இதற்கான குற்றச்சாட்டை ஜனாதிபதி போட்டிருந்தார்.

கூட்டமைப்பு தன்னுடைய தீர்வு யோசனைகளைச் தயாரித்து சமர்ப்பிப்பதற்குத் தயாராகிக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்து, கூட்டமைப்புக்கான அழுத்தங்களை மேலும் அதிகரித்திருக்கின்றது. பொலிஸ், காணி அதிகாரங்களை உள்ளடக்கியதான மாகாண சபைத் திட்டம் ஒன்றையே தாம் தயாரித்திருப்பதாக கூட்டமைப்பு தெரிவிக்க, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும், புலிகள் கேட்டதை இனி யாரும் கேட்க முடியாது எனவும் ஜனாதிபதி கடும் தொனியில் பதிலளித்திருக்கின்றார்.

கூட்டமைப்பின் 'பொதி' எவ்வாறான உள்ளடக்கத்தைக் கொண்டதாக இருக்கப்போகின்றது என்பது தொடர்பான ஆர்வத்தை இது அதிகரித்திருக்கின்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்த்துக்கும் அதிகமாகச் செல்லுமாறு இந்தியா தமக்கு ஆலோசனை வழங்கியதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருப்பது ஜனாதிபதியை எந்தவகையிலும் கட்டுப்படுத்தப்போவதில்லை. இந்தியாவும் இவ்விடயத்தில் கூட்டமைப்புக்கு சில அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அப்பால் எதனையும் செய்யப்போவதில்லை என்பதும் உண்மை.

ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் இந்தியத் தலைவர்களுடனான பேச்சுக்களின் போது 13 வது திருத்தத்துக்கும் அதிகமாகச் செல்வதற்கு தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துவந்தாலும், யதார்த்த நிலை அவ்வாறதாக இல்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் முக்கிய அம்சங்களான வடக்கு - கிழக்கு இணைப்பு இப்போது இல்லை. மாகாண சபைகளுக்கு பிரதானமாக இருக்க வேண்டிய பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை. கிழக்கு மாகாண சபை எவ்வித அதிகாரங்களும் இல்லாத ஒன்றாகத்தான் இருக்கின்றது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத மாகாண சபையைப் பெற்றுக்கொள்வது என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்றது.

அரசுடன் "இணக்க" அரசியலுக்கும் போயிருக்கும் கூட்டமைப்பு பல இடங்களில் விட்டுக்கொடுப்புக்களை செய்துகொண்டிருக்கின்றது. கூட்டமைப்புத் தரப்பிலிருந்து வெளிவரும் தகவல்களின்படி ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட 'மாகாண சபை' என்பதைத்தான் பேச்சுக்களுக்கான அடிப்படையாக அது ஏற்றிருக்கின்றது. மாகாண சபை என்பது மக்களால் நிராகரிக்கப்பட்டது என்பதுடன், இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவருவதற்குத் தவறிய ஒரு திட்டமுமாகும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் முடிவுகள் சமஷ்டிக்குத் தமிழர்கள் வழங்கிய அங்கீகாரம் என கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

அப்படியானால் சமஷ்டியை கைவிட்டுவிட்டு எதற்காக இவர்கள் மாகாண சபைகளுக்கு இறங்கிவருகின்றார்கள் என்ற கேள்வியும் தமிழ் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. சமஷ்டியில் ஆரம்பித்தால்தான் மாகாண சபையில் கொண்டுவந்து முடிக்கலாம் எனக் குறிப்பிடும் தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தற்போதுள்ள மாகாண சபையில் தொடங்கினால் அது மாவட்ட சபையில்தான் வந்துமுடியும் எனவும் எச்சரிக்கின்றார்.

கூட்டமைப்பின் தற்போதைய இணக்க அரசியல் என்பது தமிழர்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை நாடிச் செல்லாமல், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதை இலக்காகக் கொண்டதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது!

- கொழும்பிலிருந்து

பூராயத்துக்காக சத்தியன்

http://pooraayam.com/mukiaya/1461-2011-04-04-03-43-59.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.