Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐவரிக் கோஸ்ட்ட் - தமிழீழம் :ஐ. நாவின் ரட்டை வேடம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:(ஐவரிக் கோஸ்ட்ட் - தமிழீழம் :ஐ. நாவின் ரட்டை வேடம் !

கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்க நாடான ஐவரிக் கோஸ்ட்டில் கடந்த வருடத் தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதிபருக்கும், சர்வாதிகாரத் தனமாக இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையிலான போர் வலுத்து வருகிறது. ஐ. நா வினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தலில் வென்ற தலைவருக்கு விசுவாசமான படைகள் நாட்டின் முழுப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சர்வாதிகாரியின் மாளிகையையும் சுற்றி வளைத்துள்ளனர்.

ஐ.நா மற்றுப் பிரான்ஸுப் படைகளின் உதவியுடன் போரில் வெற்றியீட்டி வரும் எதிர்கட்சிப் படைகள் தமது இறுதி இலக்கான சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

சர்வாதிகாரியின் நெருங்கிய இராணுவ மற்றும் போலீஸ் படைப்பிரிவுகளின் தளபதிகள் தற்போது யுத்தத்தை நிறுத்தி, ஐ.நா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றியம் போன்றவற்றின் முன்னால் தமது ஆயுதங்களைக் கைய்யளிக்கத் தயாராக இருப்பதாகவும், தமது தலைவர் மற்றும் அவரது குடும்பம், மூத்த தளபதிகள் போன்றோரின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு ஐ. நா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் அமைப்பின் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருப்பதோடு, அவ்வமைப்புக்களும் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த சரணடைதல் நடவடிக்கைக்குக் குறுக்காக எந்தவொரு அயல் நாடோ அல்லது ஐ.நா வோ குறுக்காக நிற்கவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

ஆனால், 2009 மே இல், ஒரு முற்றான இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டு வன்னிக்குள் ஊடுருவி ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஒரு இனவழிப்பு ராணுவத்தை எதிர்த்து போராடி வந்த ஒரு விடுதலை அமைப்பை சரணடைதல் நாடகாமாடி இறுதியில் அந்த இனவழிப்பு ராணுவத்திடமே போராளிகளை சரணடையைச் செய்ததன் மூலம் முற்றான அழித்தொழிப்பு ஒன்றிற்கு இதே ஐ. நா வும், இந்தியா என்கிற அயல் நாடும் தள்ளி விட்டன என்றால் அது மிகையாகாது.

ஐவரிக் கோஸ்ட்டில் ஒரு சர்வாதிகாரியை பாதுகாக்க ஐ. நா சரணடைதலை தானே முன்னின்று நடத்த விரும்புகிறது. ஆனால் ஈழத்தில் ஒரு சர்வாதிகாரியின் இனவழிப்புக்குள் இருந்து மக்களைக் காப்பற்ற விரும்பாத ஐ. நா இறுதியில் அந்தச் சர்வாதிகாரியிடமே அந்த மக்களை கைய்யளித்து விட்டிருக்கிறது.

ஐவரி கோஸ்ட்டில் இதுவரை சரணடைதல் ஆரம்பிக்கப்படவில்லையாயினும் கூட அதுபற்றிய செய்திகள் பரவலாக உலகெங்குமுள்ள ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் 2009 வன்னியில், ஐ.நா மற்றும் இந்திய அரசால் நடத்தப்பட்ட சாட்சிகளற்ற இனவழிப்பென்பது இறுதிவரையிலும் சர்வதேசத்தின் கண்களிலிருந்து முற்றாக மறைக்கப்பட்டதுடன், இறுதியில் சரணடைதல் நாடகம் கூட எவருக்கும் தெரியாமல் அரங்கேற்றப்பட்டது.

போலி மேற்குலக சனநாயகங்களினாலும், இந்தியா போன்ற பயங்கரவாத நாடுகளாலூம் கட்டுபடுத்தப்படும் ஐ. நா போன்ற அமைப்புகளின் ரெட்டை வேடம் ஈழத்திலும் ஐவரிக் கோஸ்ட்டிலும் தெளிவாகத் தெரிகிறது.

எமக்கு ஆதரவாக ஒரு நாட்டை, ஒரு நண்பனை உருவாக்குவதில் நாம் உழைக்க வேண்டும்

- இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த படுகொலைகளை பற்றி விசாரிக்க முன்வந்துள்ளது

- யாராவது ஒரு நாடு இதைப்பற்றி கூறும் இடத்தில் தாம் விசாரணையை ஆரம்பிக்க முடியும் என கூறியுள்ளது

- இல்லையேல் தாமாக விசாரணையை ஆரம்பிக்கலாம், அதற்கு ஆதாரங்களை சேர்க்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.