Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய அரசுடன் பல ஆண்டு காலமாக போராடும் தனி மனிதன்!

Featured Replies

கனடாவில் குடிவரவு சம்பந்தமான பிரச்சனைகள்

உலக நாடுகளில் குடிவரவு முறையை கையாண்டு வரும் நாடுகள் பெரியபிரித்தானியா அமெரிக்காஅவுஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் கனடாவும் ஒன்றாகும்.இதில் கனடாவுக்கு வருடாந்தம் குடிவரவு திட்டத்தினால் அனுமதி செய்யப்பட்ட தொகையானது 1980 ஆண்டிற்கு பின்னர் 250,000 தொடக்கம் 400,000 வரையாக அதிகரித்துள்ளது. இதன் பிரகாரம் ஓர் தனிநபர் கனடாவுக்கு குடிபுக வருவாராயின் பின்வரும் வகையில் ஒன்றிற்குள் அடங்கவேண்டும். தகமை வாய்ந்த வேலை அனுபவமுள்ளவர்கள் கணவன் அல்லது மனைவியை- வயது முதிர்ந்தோர் மற்றும் பெற்றோர்கட்கு பொறுப்பு ஏற்கும் வகை - கனடாவில் வியாபாரம் செய்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகை–மற்றது தமது நாட்டில்; உயிர் சேதம்; ஏற்படுத்தும் போர் மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டவகையில் துன்பங்களை அனுபவித்தவர்கள் - .மற்றும் மேற் படிப்பை தொடர கனடாவுக்கு வருபவர்களும் ஆகும்.

மேலே குறிப்பிட்ட வகைகள் 2003 ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்தது ஆனால் 2004 ஆண்டிலிருந்து மேலே குறிப்பிட்ட வகையுடன் பின்வரும் வகையையும் சேர்த்துள்ளனர். அவைகள் கனடிய மாகாணத்தால் தெரிவு செய்யப்பட்ட தொழில் வசதி வகை கனடாவில் அண்மையில் வேலை அனுபவம் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் கிய+பெக் மாகாணத்தால் தெரிவு செய்யப்பட்டு வேலை செய்வதோடு நிரந்தரமாக இங்கு கிய+பெக் மாகாணத்தில் வதிபவர்களாக இருக்கவேண்டும்.

இதன்பிரகாரம் மேலே குறிப்பிட்ட வகையானவர்கள் கனடாவுக்கு குடிபுக வரும் பொழுது காசாக கொண்டு வரவேண்டிய தொகையானது பின்வருமாறு: தகமை வாய்ந்த வேலை அனுபவம் உள்ளவர்கள் எண்ணிக்கை 150000 ஆகவும் கனடாவுக்கு வரும் பொழுது கொண்டு வரவேண்டிய குறைந்த அளவு தொகையாக 20,000 மற்றும் குடி வரவு சம்பந்தப்பட்ட விண்ணப்ப பத்திரங்கள் மற்றும் மருத்துவ பாசீலனை செய்து அனுமதி பெற செலுத்த வேண்டிய தொகையானது 6500.00. இவர்களை தவிர்ந்த மற்றும் கனடாவில் வியாபாரம் செய்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையால் வருபவர்கள் எண்ணிக்கை 10,000 ஆகவும் கனடாவுக்கு வரும் பொழுது கொண்டு வரவேண்டிய குறைந்த அளவு தொகையாக 500,000. இந்த விண்ணப்ப பத்திர தொகையானது ஒவ்வொருவரது குடும்ப அங்கத்தவர்கட்கு ஏற்ப வேறுபடலாம். 2009 ஆண்டு கனடா குடி வரவு புள்ளி விபரதில் பெற்ற தகவல்கள் 2009.சாதாரணமாக கணடாவுக்கு குடிபுக வருபவர்களை வெளி நாடுகளில் ஈர்க்கும் வகையில் செய்யும் விளம்பர பிரசாரம் கனடா குடிவரவு இலாகாகவால் வெளியிடபட்ட விண்ணப்ப படிவம் மற்றும் படிவத்தை யார் யார் விண்ணப்பம் செய்யலாம் என்பதுடன் இதற்கான நிபந்தனைகள்; அடங்கிய புத்தகமான குடிவரவு பத்திரம் பற்றிய சிறு புத்தகம் கனடா அரசாங்கத்தால் நியமனம் செய்த கனடா தூதுவர் அலுவலகங்களில் பொறலாம். மேலே குறிப்பிட்ட வகையில் அடங்குபவர்கட்கான முக்கியமான நிபந்தனைகள் விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழக பட்டாதரியாக இருப்பதடன்; கனடாவில் பேசக்கூடிய மொழியான ஆங்கிலம் பிரெஞ்சு திறமை உள்ளவர்களாகவும்இ தேர்ச்சி பெற்ற தகமையில் கூடிய கால வேலை அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். விண்ணப்பம் செய்பவர்கள் கனடாவில் தெரிவு செய்து இருக்கப் போகும் இடம் இவர்கட்கு உறவினர்கள் கனடாவில் வதிபவர்களாக இருந்தால் விண்ணப்பம் செய்பவரது வயது கனடாவுக்கு வருமுன்னர் வேலை செய்ய உறுதியான ஆவணங்கள் மற்றும் நேர்முக பரிட்சையில் விண்ணப்பதாரரின் அணுகுமுறை போன்றவற்றிற்காக புள்ளி விபரங்களை உபயோகித்து ஓர் குறிப்பிட்ட தொகையை விண்ணப்பம் செய்பவர் படிவங்களை விண்ணப்பித்து பெற்றால் மட்டும் தான் விண்ணப்பதாரர்கட்கு நிரந்தரமாக கனடாவில் வாழ அனுமதி வழங்கப்படும். விண்ணப்பங்கள் சிலவேளைகளில் நிராகரிக்கப்படவும் சாத்திய கூறுகள் உண்டு.

மேலே குறிப்பிட்ட விபரங்களின் படி ஓர் தகமை வாய்ந்த வேலை அனுபவம் உள்ளவர்கட்காக பாவனை செய்யும் புள்ளி விபரங்கள் பின்வருமாறு

காரண எண் 1 கல்வி தகமைகட்டு அதிகப்படியான புள்ளிகள் 25

காரண எண் 2 மொழி பேசும் தகமை அதிகப்படியான புள்ளிகள் 24

காரண எண் 3 தேர்ச்சி பெற்ற தகமை வேலை அனுபவம் அதிகப்படியான புள்ளிகள் 21

காரண எண் 4 விண்ணப்பதாரிகளது வயது அதிகப்படியான புள்ளிகள் 10

காரண எண் 5 கனடாவில் வேலை அனுமதி பெற்றவர்கள் அதிகப்படியான புள்ளிகள் 10

காரண எண் 6 நேர்முக பரிட்சை அதிகப்படியான புள்ளிகள் 10

மொத்த தொகை 2003 ஆண்டு 67 புள்ளியிலுpருந்து 80 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது இதனால் 2003-04 அதிகப்படியான புள்ளிகள் 100

தோவுக்கான புள்ளிகள் குடிவரவு தொகை குறைய பழைய புள்ளியான 67 புள்ளிகட்கு மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட தக்கது இதற்கு பல காரணங்களும் உண்டு. 67 புள்ளிகள்

சாதரணமாக எந்த ஓர் தனிநபராவது தமது கல்வி தராதரம் வேலை அனுபவம் பற்றிய சந்தேகங்களை வினாவ கனடா அரசாங்கத்தால் நியமனம் செய்த கனடா தூதுவர் அலுவலகங்கட்கு சென்றால் கடந்த 20 வருடமாக அவர்கட்கு கிடைத்த மறுமொழிகள் பின்வருமாறு அதாவது உலகத்தின் பல நாடுகளில்;; இருந்து வருபவர்கள் தமது நாட்டு கல்வி தகமைகள்இ தகமை மூலம் பெற்ற வேலை அனுபவங்கள் மற்றும் மொழி தேர்ச்சி எல்லாவற்றையும் கனடா அரசாங்கம் பரிசீலனை செய்வதுடன் கொடுக்கும் ஆவணங்கள் யாவற்றையும் நிரூபணம் செய்த பின்னர்தான் விண்ணப்பதாரர்களை நேர்முக பரீட்சைக்கு அழைக்கும் என கனடா குடிவரவு இலாகாவால் வெளியிடபட்ட கனடா குடிவரவு பத்திரம் மற்றும் பத்திரம் நிரப்புவது எப்படி என்ற புத்தகத்தில் கூறப்படுவதுடன் இவைகள் தான் மேலே கூறிய நபர் கட்கான தெரிவு முறையாகும்.

இவைகள் யாவும் இப்படியாக இருக்க வெளிநாட்டில் உள்ள கனடா அரசாங்கத்தால் நியமனம் செய்த கனடா தூதுவர் அலுவலகங்களில் உள்ளவர்களால் விண்ணப்பதாரர்கட்கு கொடுக்கப்படும் உறுதி மொழி என்னவென்றால் நீங்கள் உங்கள் நாட்டில் செய்த தொழிலை செய்யலாம் கனடாவுக்கு சென்றால் உங்களது வாழ்வு சொர்க்கலேகாமாவிடும் உங்களது பிள்ளைகளது எதிர்காலம் சுபீட்சமானது கனடாவில் உங்களைப் போன்ற படித்தவர்கட்கு வேலை உண்டு என பொய்யான வாhத்தையை கூறி ஆசை காட்டி குடி வரவு திட்டத்தினால் வரும் பணத்தைக் கொண்டு தமது நாட்டிலுள்ள படிக்காதவர்கட்கு வேலை திட்டத்தை உருவாக்கியதற்கான ஆதராங்களும் காணக்கூடியதாக உளது. ஆனாலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இதனை முற்றாக மறுக்க காரணம் ஓர் தனி நபரது குடிவரவு வகை வேறுபாடனாதாகும்.

உண்மையாக இவர்களது தகமைகள் கனடாவில் செல்லுபடியாகுமாக அல்லது இவர்கள் பெற்ற வேலை அநுபவம் கனடாவில் உள்ள தொழிலாளர்களால் ஏற்கப்படுமா என்பதும் இங்கு படித்த பட்டம் பெற்றவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருப்பது மற்றும் இங்கு வந்த பின்னர் ஆங்கில மொழியில் தமது நாட்டில் வேலை செய்தவர்கள் இங்கு வந்து திரும்ப தமது நாட்டில் படித்தது போல படித்து பட்டம் மற்றும் ஆங்கில பாi~ பயிலவேண்டும் என்பவற்றுடன் மாகாணத்துக்கு மாகாணம் தகமைகள் வேறானது போன்றனவற்றை கனடா அரசாங்கம் விண்ணப்பம் செய்யும் பொழுதோ அல்லது நேர்முக பரீட்சை நடந்த பின்னரோ வெளிப்படையாக கூறாது விட்டது என்பதற்கான பல விதமான ஆதாரங்கள் கனடா பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளி வந்தது உண்மையேயாகும்.

கனடாவுக்கு குடிபுக வருபவர்கள் தமது நிரந்தரமான தொழிலையும் வசதி வாய்ப்பு சமூகத்தில் பெற்ற வசதி வாய்புக்கள் அந்தஸ்துக்களை விட்டு தமது நாட்டை விட்டு இங்கு வரும் பொழுது பல எதிர்பார்ப்புகளுடன் வந்தவர்கள் வாழ்கையில் பலவிதமான துயரங்களையும் மற்றும் தமது இனஜனங்களுடன் பரிமாற்றம் செய்யமுடியாத நிலையில் தனித்து விரக்தியான முறையில் வாழுகின்னறனர் என்பதற்கான ஆதாரங்களை கடந்த 20 வருட காலங்களில் கனடாவின் பிரதான ஆங்கில பத்திரிகைகளில் மற்றும் 2001 ஆண்டுக்கு பின்னர் அதிவேகமாக வந்த குடிவரவு சம்பந்தப்பட்ட இணைய தளங்களில் நூற்றுக்கு மேலான உண்மை சம்பவங்கள் வெளிவந்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இப்படி வந்த பல மருத்துவ நிபுணர்கள் பொறியியலாளர்கள் கணக்கியல் நிபுணர்கள் தாதிமார்கள் போன்றவர்கள் தாம் படித்து பட்டம் பெற்ற துறைகளில் வேலை செய்யாது தமது தராதரத்தக்கு குறைவான மற்றும் தாம் கற்ற பாட நெறிக்கு வேறான துறைகளில் வேலை செய்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை 2001இ தொடக்கம் இன்றுவரை காணலாம்.

கனடா குடிவரவு சட்டதிட்டங்களில் பல விதமான பிரச்சனையையும் மற்றும் ஓட்டைகள் உள்ளது என்பதனை 2005 தொடக்கம் 2006 வரை கனடாவின் பிரபல்யமான முக்கிய தொலை காட்சிகளில் மாகாண குடிவரவு மந்திரிகள் குறையாக விமர்சனம் செய்ததற்கான ஆதாரங்களும் உண்டு. இவைகள் இப்படியாக இருந்த பொழுதும் முக்கியமாக கனடாவின் குடிவரவு புள்ளி விபரத்தை அடிப்படையாக கொண்ட திட்டம் பல பிரச்சனைகளை உருவாக்கியுள்ளதை தொடர்ந்து 2006 ஆண்டு தொடக்கம் கனடா குடிவரவு திட்டத்தினால் 2007 ஆண்டு வெளி நாட்டு கல்வித்தகமைகளை கனடாவில் அங்கீகாரம் செய்வதற்காக 320 கனடா குடிவரவு இலாகாவினால் பொது மக்களது 975 மில்லியன் டொலர் வரிப்பணத்தினை செலவு செய்து அமைக்கப்பட்ட அமைப்புகளினால்; 3 வருடங்களாகியும் எதுவிதமான மாற்றங்களோ அல்லது முதலீட்டுக்கு ஏற்ற பலனை காணாத பட்சத்தில் புதிய குடிவரவு மந்திரியான மாண்புமிகு ஜேசன்கெனி இது சம்பந்தப்பட்ட புதிய திட்டங்கட்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியம் மற்றும் நிதி உதவியை தற்காலிகமாக கால வரையறையின்றி நிறுத்தியுள்ளார்.

http://www.ctv.ca/CTVNews/WFive/20051119/w5_broken_promises_051119/

http://reports.fja.gc.ca/eng/2006/2006fca213/2006fca213.html

சங்கானை குமரன்

  • தொடங்கியவர்

இவரை கனடிய அரசுகள் பலவழிகளில் தண்டிக்க முனைந்துள்ளன.கடைசி கட்டத்தில் விடுதலைபுலியாகவும்சித்தரிக்க முனைந்தார்கள்.இதில் வெட்கக்கேடான விடயம் அரசின் நிதியுதவியில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் இவருக்கு ஒரு கால கட்டத்தில் கொலை அச்சுறுத்தல் விடக்கூட தயங்கவில்லை.இதில் மதகுருவும் அடங்குவர் இவைகளை பார்கும் போது தமிழ் அமைப்புக்கள் என்று கூறி அரச சலுகைகளை பெற்றுகொண்டு ஒருதர் இருவர் அல்ல பல இலட்சக்கணக்கானவர்களை ஏமாற்றிவிட்டார்கள்,இதில் தானை தலைவரும் அடங்குகிறார் என்னும்போது இவர்கள்மீது காறிதுப்புவதை தவிர வேறு ஒன்றுமே தெரியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.