Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ச துட்டகைமுனுவின் நவீன அவதாரமாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச துட்டகைமுனுவின் நவீன அவதாரமாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் -

16 ஏப்ரல் 2011

ஐநாவின் அறிக்கையில் என்ன உள்ளடங்கியிருக்கிறது என்பது முக்கியமல்ல. அது இலங்கையின் எல்லா மக்களுக்கும் உலகில் உள்ள மக்களுக்கும் அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

2009 மே மாதம் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்ற இறுதி மோதலின் இறுதி வாரங்களில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்தார்.

பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக்குழுவுக்கு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தகவல்கள் வந்து குவிந்தன என்று தெரிய வருகிறது. அவற்றில் சில உண்மைகளைத் திரித்துக் கூற முற்பட்டன. இன்னும் சில ஐநாவின் நோக்கையே குழப்பத்துக்குள்ளாக்கக் கூடியவை.

ஐநாவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டால் கொழும்பில் என்ன நடக்கும்? ஏற்கெனவே ஐநா இலங்கைக்கு வழங்கிய பிரதியை வெளிவிவகார அமைச்சு குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டுள்ளது. இந்நிலையில் ஐநா எவ்வளவு தூரம் இலங்கைக்கு இது குறித்து கேள்வி கேட்க முடியும்? ஏற்கெனவே தேசியவாத உணர்வுகளால் உரமூட்டப்பட்டு பலமூட்டப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசு பான் கீ மூனின் இந்த முயற்சியுடன் விளையாட ஆரம்பிக்காதா?

இலங்கையின் போரின் முடிவிற்குப் பின்னர் அதன் அரசியல் சூழலில் பாரியளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்சவின் அணி அரசியலமைப்பின் 18வது திருத்தத்தோடு ஜனாதிபதியின் அதிகாரங்களை விஸ்தரித்ததோடு பெரும்பாலான நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

எதிர்வரும் வருடங்களில் ஜனாதிபதி ராஜபக்ச தனது அதிகார அடிப்படையை மேலும் மத்தியில் குவிப்பதற்கும் தனது பிடியை இறுக்குவதற்கும் மேலும் பல அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். எனவே மகிந்த ராஜபக்ச இலகுவில் தனது அதிகாரத்தை விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அது மட்டுமல்ல தற்போது ஜனாதிபதியாக உள்ள மகிந்த ராஜபக்ச முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், துறைமுக அமைச்சராகவும் இருந்த மகிந்த ராஜபக்ச அல்ல. சர்வாதிகார ஆட்சியாளர்களான லிபிய சீன ஈராக்கிய மியான்மியார் ஆட்சியாளர்களின் வழி காட்டலைப் பின்பற்றி மகிந்த ராஜபக்சவும் உண்மையான அதிகாரத்தின் சுவையை நன்கு ருசித்துள்ளார். இந்த நிலைமை நல்லாட்சி தொடர்பான விடயத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததோடு மகிந்த ராஜபக்ச துட்டகைமுனுவின் நவீன அவதாரமாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக துட்டகைமுனுவிடம் இருந்த நல்ல குணங்கள் எதுவும் ராஜபக்சவிடம் இல்லை. தன்னுடன் போரில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்ட தமிழ் மன்னான எல்லாளனைக் துட்டகைமுனு கௌரவித்தான்.

மகிந்தவின் ரட்சகரான முஹமட் கடாபி தன்னுடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. 40 வருடங்களாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ நான் எல்லாவற்றையும் செய்து வந்தேன். மக்களுக்கு வீடுகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்று எல்லாவற்றையும் கட்டிக் கொடுத்தேன். அவர்கள் பசி என்று சொன்ன போது அவர்களுக்கு உதவியளித்தேன். பாலைவனமாக இருந்த பென்காசியை பண்ணை நிலமாக்கினேன். என்னைக் கொல்ல முயன்ற றீகன், எனது வளர்ப்பு மகளைக் கொன்ற போதும், ஏழைக் குழந்தையைக் கொன்ற போதும் எனது ஆபிரிக்கச் சகோதரர்களுக்கு நிதியுதவி செய்தேன்.'

இதே பாணியைத் தான் இலங்கையில் மகிந்த ராஜபக்சவும் அவருடைய குழுவினரும் பின்பற்றி வருகின்றனர்.

ராஜபக்ச சொல்கிறார் தெற்காசியாவில் நீண்டகாலமாக இருந்த பயங்கரவாதப் பிரச்சனையை தாம் முடிவுக்குக் கொண்டு வந்து பயங்கரவாதமும் பயமும் இன்றி எவரும் நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம் என்று. இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாக என்றென்றைக்கும் மக்கள் தனக்கு விசுவாசமாக தான் தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருக்க ஆதரவளிக்க வேண்டும் என்று,

இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால் போரின் வெற்றியால் கிடைத்த எல்லா நன்மைகளும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இந்தப் போரை வெற்றிகரமாக நடாத்திய தளபதியை அவர் மறந்து விட்டுள்ளார். புலிகளுடைய வன்முறைக்கு எதிராகச் செயற்பட்டு வந்த தமிழர்களையும் அவர் கைவிட்டு விட்டார்.

அவருடைய வெற்றிக்காக உழைத்தவர்களுக்குத் துரோகம் செய்யும் வகையில் அவர் அவர்களைக் கைகழுவி விட்டுள்ளார்.

தற்போது வெளிவரும் அபிப்பிராயங்கள் குறித்தோ அல்லது விமர்சனங்கள் குறித்தோ அவர் இப்போது அக்கறைப்படுவதில்லை. அவர் இப்போது இரக்கமற்ற ஒருவர் போன்று செயற்படுகிறார். சின்னச்சின்ன விடயங்களிலிருந்தெல்லாம் தனக்கு பெயர் கிடைப்பதற்கான வழிவகைகளைக் கண்டு பிடிக்கிறார். அவர் இப்போது மகாவம்சத்தில் தனது பெயரை நிலை பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தன்னை ஒரு தேசிய வீரராக பொறிக்கும் முயறிச் அவருடையது. அவருடைய தேசிய வீரராகும் முயற்சி சில நிகழ்வுகளில் தமிழ் பேசுவதனோடு சரி.

சர்வதேச ரீதியில் அவருக்கு களங்கம் கற்பிக்க எடுக்கப்படும் முயற்சி உள்நாட்டில் அவரின் பலத்தை அதிகரிக்கச் செய்து விடும். இதன் காரணமாக அவர் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வார்.

விடயங்களைத் தனக்குச் சாதகமாகக் கையாள்வதிலும் மோசடித்தனம் செய்வதிலும் அவர் கைதேர்ந்தவர். அவர் தனது மோசடி அரசியலைத் தொடர்ந்து நடாத்துவார். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை அது செத்த பிணமாகவே கிடக்கிறது. இப்போது இந்தியாவில் ஊழலுக்கெதிராக அன்னா ஹசரேயும் ஏனைய தலைவர்களும் செய்வது போல இலங்கையில் செய்வதற்கு சிவில் இயக்கங்களோ அன்றி ஊடக அமைப்புக்களோ இங்கு பலமாக இல்லை.

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில் இலங்கையர்களாகிய நாங்கள் ஜனநாயகத்தை அனுபவித்து வருகிறோம். உண்மையில் இங்கிருப்பதனை ராஜபக்ச ஜனநாயகம் என்று வர்ணிக்கலாம். அதனை எவரும் இல்லை என்று சொல்ல முடியாது. இவையெல்லாம் லிபியத் தலைவர் சொன்னவற்றுக்கு ஒத்தவையாகவே உள்ளன.

மத்திய கிழக்கில் நடப்பன போன்று நடைபெறக் கூடியவாறு இங்கு கள யதார்த்தம் இல்லை. துரதிர்ஸ்டவசமாக பலமான ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கூட நம்மிடமில்லை. ஐவரி கோஸ்டைப் போன்று ஐநா தலையிட்டு ஜனாதிபதியை பதிவியிலிருந்து அகற்றியது போன்று அகற்ற இங்கு சூழல் இல்லை. இலங்கையில் எதிர்ப்பதற்கான உரிமையே கொல்லப்பட்டு விட்டது. இலங்கையின் தேசாபிமானம் ராஜபக்ச சொல்வதற்கு ஆம் என்று தலையாட்டுவதிலேயே தங்கி உள்ளது.

ஒரு கட்சி அரசின் ஜனநாயகத்தை மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதாக மகிந்த சொல்லப் போகிறார். இது ஒவ்வொருவருடைய கழுத்தை இறுக்கும் வரையிலும் எவரும் இதனை உணரப் போவதில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் ராஜபக்சவின் ஜனநாயகம் ஒவ்வொருவரின் மீதும் வாய் வைக்கும் வரையிலும் இதை எவரும் உணரப் போவதில்லை என்பது தான் இன்றைய யதார்த்தம்.

நன்றி: நிலாந்த இலங்கமுவ தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.