Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பேரினவாதத்திற்கு பறிபோகும் தென்னமரவாடி தமிழ்க்கிராமம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாதத்திற்கு பறிபோகும் தென்னமரவாடி தமிழ்க்கிராமம்!

Friday, April 22, 2011, 3:29

திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ள தென்னமரவடி என்ற பழந்தமிழ் கிராமத்தில் உள்ள காணிகள் சிங்கள ஊர்காவல் படையினருக்கு தலா 3 ஏக்கர் வீதம் இராணுவத்தினரால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தத்தினால் இக்கிராமத்தில் உள்ள அனைத்து தமிழ் குடும்பங்களும் இடம்பெயர்ந்து விட்டன. இன்னும் அக்குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. அங்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. இப்போது கிராமம் பற்றைக்காடாகக் காட்சியளிக்கின்றது.

பற்றைக்காடாகக் காட்சியளிக்கும் காணிகளே இப்போது சிங்கள ஊர்காவல் படையினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலவரத்தைப் பயன்படுத்தி உள்ளுர் சிவில் அதிகாரிகளுக்குத் தெரியாது அங்கு நிலை கொண்டுள்ள இராணுவ அதிகாரிகள் தங்களுடைய கொழும்புத் தலைமைப்பீடத்தின் உத்தரவின் மீது ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்களுக்கு தலா 3 ஏக்கர் வீதம் காணகளைப் பங்கீடு செய்து வருகின்றனர்.

அவ்வாறு காணிகளைப் பெற்ற ஊர்காவல் படையினர் அவற்றை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தினக்கதிரின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தமிழ்க் குடும்பங்கள் பரம்பரையாக குடியிருந்த காணிகளே இவ்வாறு பிரிக்கப்பட்டு சிங்கள ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்து இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ்ப்பாணம் மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் குழு ஒன்று கடந்த வாரம் தென்னமரவாடி கிராமத்திற்கு சென்றது.

ஆனால் அங்கு நிலை கொண்டுள்ள படையினர் இக்குழுவினரை கிராமத்தின் உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்கவில்லை. கொழும்பு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற்று வரும்படி கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

கிழக்கு மாகாணத்தின் வடக்கெல்லையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரிலிருந்து வடக்கே 73 கிலோ மீற்றர் தூரத்தில் தென்னமரவடி கிராமம் அமைந்துள்ளது. வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் எல்லையாக இக்கிராமமே உள்ளது. கிராமத்தில் தென்னமரவடிப்பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. ஆலயத்திற்கு கிழக்கு திசையில் கடற்கரையோரமாக மலை ஒன்றில் சிவன் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளமாக சிதைந்த உருவங்களும் இடிபாடுகளும் காணப்பட்டன.

சைவ தமிழ்ப்பிரதேசமான தென்னமரவடி என்ற கிராமம் பண்டைக்காலத்தில் தென்னன்-மரபு-அடி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும் பின்னர் அது திரிந்து தென்னமரவடி ஆக அழைக்கப்பட்டு வரலாயிற்று என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

tamilthai.com

இப்படியான ஆக்கிரமிப்புக்களை ஆதாரபூர்வமாக சனல்4 க்கும் ஜ நாடு சபைக்கு அனுப்பிவையுங்கள், இதுவும் ஒருவகையான இன அழிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.