Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தமிழக அரசு வலியுறுத்துமாம்! - நிதியமைச்சர் அன்பழகன் உரை

Featured Replies

ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தமிழக அரசு வலியுறுத்துமாம்! - நிதியமைச்சர் அன்பழகன் உரை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-06 08:43:06| யாழ்ப்பாணம்]

images (5)ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுவ தோடு, அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுகாண தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனத் தமிழக நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் 2011-2012 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அன் பழகன் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தனது உரையில் கூறியதாவது,

இலங்கைத் தமிழர் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கு 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 30 கோடி ரூபாயுக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம், மூவலூர் ராமாமிருதம் அம் மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முதலான பல்வேறு திட்டங்க ளும் இந்த முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு விரிவுபடுத் தப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருத்திற் கொண்டு 40 கோடி ரூபாயுக்கான நிவாரணப் பொருட்களை இந்த அரசு வழங்கி யது. மத்திய அரசும் இலங்கை தமி ழர் நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக் மீனவர்கள் இனியும் கொல் லப்படும் நிலை ஏற்படாமல் இருக்க இறுதி முடிபினை மத்திய அரசு எடுத் தே தீரவேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தி வருகின்றோம்.கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து வேட்டை யாடும் நிலையினைக் கண்டு, தமி ழக அரசின் சார்பில் பலமுறை கடிதங் கள் வாயிலாகவும், நேரடியாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

மத்திய அரசும் நமது வேதனை யிலே பங்குகொண்டு இலங்கை அர சாங்கத்திற்கு எடுத்துக் கூறியபோ திலும் இலங்கைக் கடற்படையினர் அது குறித்து எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்தும் மனிதாபிமானமற்ற செயலிலே ஈடுபட்டு நமது மீனவர்க ளைக் கொன்று வருவதை நிறுத்திய பாடில்லை என அவர் தனதுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

வலம்புரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.