Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த செல்வமதியின் நிலை (போரின் அழியா வடுக்கள்- கணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த செல்வமதியின் நிலை (போரின் அழியா வடுக்கள்- கணொளி இணைப்பு)

Posted by uknews On April 26th, 2011 at 3:53 am /

வன்னி யுத்தத்தில் சிக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்தார்கள். அகோரமாக இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களிலும் பலர் இறந்து போனார்கள். பெரும் எண்ணிக்கையானவர்கள் ஷெல் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உடலில் ஷெல் துண்டுகளுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இத்தகையவர்களில் 32 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாராகிய சிவனேஸ்வரன் செல்வமதியும் ஒருவர். அவரது தந்தையாரின் பெயர் கணபதிப்பிள்ளை.

இரண்டு தடவைகள் ஷெல் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்த இவரது உடலிலும் தலையிலும் ஷெல் துண்டுகள் பாய்ந்திருந்தன. இந்த இரும்புத் துண்டுகளோடு பெரும் அவஸ்தைப் பட்டார் செல்வமதி. இதன் காரணமாக அவரது தலையில் இருந்த ஷெல் துண்டை வைத்தியர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். அப்போது அவரது கண்களுக்குச் செல்லும் நரம்புகள் வெட்டுப்பட்டதனால் பார்வையை முற்றாக இழந்துள்ளார். அத்துடன் நிதானம் இழந்தவராகவும் மாறியிருக்கின்றார். இதனால் தனது தேவைகள் எதனையும் தானே நிறைவேற்றிக்கொள்ள முடியாதவராக மாறியிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிச் சண்டைகளின்போது இவரது கணவன் காணாமல் போனார். அவருக்கு என்ன நடந்தது எங்கு இருக்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மாமியாருடன் வாழ்ந்து வந்த அவர் இப்போது சகோதரிகளின் பராமரிப்பில் இருக்கின்ளார். அவரது பெண்குழந்தை நெடுங்கேணியில் மாமியாருடன் வசிக்கின்றார்.

முன்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த இவர் தற்போது எந்த உதவியும் இல்லாதவராக அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். மருத்துவ செலவுக்கும் மருத்துவத்திற்காகச் செல்வதற்குப் பிரயாணச் செலவுக்கும் வழியின்றி அவரைப் பராமரித்து வரும் சகோதரிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு எமது தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுமக்கள், முன்னாள் போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவும் தார்மீக கடமை தாயக மற்றும் புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகளின் பொறுப்பு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வவுனியா கற்பகபுரத்தில் வைத்து இவரைப் பராமரித்து வருகின்ற அவரது சகோதரி கணபதிப்பிள்ளை மதிவதனியின் கைத்தொலைபேசி இலக்கம்: 0094774842039.

http://www.saritham.com/?p=18078

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.