Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைக் காண்காணிப்பாளர்களுக்கு உதவும் செய்மதித் தொழில்நுட்பம்

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 10:03 GMT ] [ தி.வண்ணமதி ]

சிறிலங்காவினது போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க்குற்றங்களுக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எவையென விபரித்து ஐ.நாவினது வல்லுநர்கள் குழு அறிக்கையொன்றை வெளியிடவிருக்கிறது. வல்லுநர்கள் குழு போரின் இறுதிநாட்களில் எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களையும் ஆராய்ந்திருந்தது.

மே 2009ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தறுவாயில் இருந்த வேளையில் ஆய்வாளர் லாஸ் புறூம்லீ கிடைக்கப்பெற்ற செய்மதிப் படங்களை ஆராய்ந்திருந்தார்.

உயர் விஞ்ஞானத்திற்கான அமெரிக்க நிறுவனத்திற்காக அவர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார். மனித உரிமைக் கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை ஆகியன பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பாக அதிக கரிசனையினைக் கொண்டிருந்தமையினால் இந்த நிறுவனத்தினை நாடியிருந்தன.

இரண்டு தடவைகளாக செய்மதிப் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. மே ஆறாம்நாள் கடுமையான மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டபோதும் மே 10ம் நாள் மோதல்கள் உச்சக்கட்டத்தினைத் தொட்டிருந்தபோதும் இந்த செய்மதிப் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயம் என சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்திய பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்பதற்கு எறிகணைகள் வீழ்ந்து வெடித்த தடயங்கள் ஆதாரம் என்கிறார் புறூம்லீ.

"ஆட்லறி எறிகணைகள் மற்றும் மோட்டார்கள் நிலைப்படுத்தப்பட்டிருந்த இடங்களையும் அவற்றிலிருந்து புறப்பட்ட எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருக்கும் இடங்களையும் நாங்கள் அடையாளப்படுத்தியிருக்கிறோம். இந்த எறிகணை செலுத்திகளிலிருந்து புறப்பட்ட எறிகணைகள்தான் பாதுகாப்பு வலயப் பகுதியில் வீழ்ந்து வெடித்திருக்கின்றன. சிறிலங்கா இராணுவத்தின மோட்டார் நிலைகளே அவை" என்கிறார் அவர்.

அதிக குழம்பம் தருகின்ற மேலுமதிக ஒளிப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் புறூம்லீ கூறுகிறார். "மே 06ம் நாள் எடுக்கப்பட்ட செய்மதிப்படத்தில் உள்ளதை விட மே 10ம் நாள் எடுக்கப்பட்ட செய்மதிப்படத்தில் அதிகளவிலான மனிதப் புதைகுழிகளை அவதானிக்க முடிகிறது" என்கிறார் அவர்.

இரண்டாவது செய்மதிப் படத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களையும் காணமுடியவில்லை. தங்களுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தினைக் கருத்திற்கொண்டு மக்களே இந்த கூடாரங்களைப் பிரித்து எறிந்திருக்கலாம் என்கிறார் புறூம்லீ. "எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் இந்தகைய தகவல்களை ஒன்றுதிரட்டும் போது மோசமானதொரு பேரவலம் அங்கு அரங்கேறியிருக்கிறது என்ற எண்ணமே எழுகிறது" என அவர் தொடர்ந்தார்.

மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்களைக் கண்காணிப்பதற்கு செய்மதிப் படங்கள் பயன்படுத்தப்படுவது அண்மைய ஆண்டுகளில் பெரிதும் அதிகரித்திருக்கிறது. ஆனால் இதற்கான செலவு மிகவும் அதிகமானது. அதியுச்ச தெளிவுடன்கூடிய ஒரு ஒளிப்படத்தினை எடுப்பதற்கு 10,000 டொலர்கள் வரை செலவாகும்.

இதர தொழிநுட்பங்களுடன் இணைக்கப்படும்போது செய்மதிப்படத்தின் அதியுச்ச பலன்களைத் தரவல்லது. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உசாகிதி (www.ushahidi.com) போன்ற இணைய வழி இயங்குதளங்கள் என்பன அனைத்துலக ரீதியிலான நெருக்கடிகால வரைபடங்களைத் தயார்செய்வதற்கு உதவுகின்றன. இந்த வரைபடங்கள் செய்மதிப் படங்கள் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டிருக்கும்.

"கிடைக்கக்கூடிய அனைத்துத் தொழில்நுட்பங்களையும் ஒருசேர இணைக்கும் போதுதான் மந்திரவித்தை நிகழ்கிறது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்வதற்கான கருவிகளாக நீங்கள் இவற்றினைப் பயன்படுத்தலாம். என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய உண்மைத் தகவல்கள் உங்களுக்குக் கிடைத்தால் கொள்கை வகுப்புக்களின்போது உங்களால் அதிக செல்வாக்குச்செலுத்தமுடியும்" என விளக்குகிறார் புறூம்லீ.

இருப்பினும் செய்மதிப் ஒளிப்படங்கள் குறிப்பிட்டதொரு மோதலின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்திவிடுவதில்லை. உதாராணமாக சிறிலங்காவினை எடுத்துக்கொண்டால், பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சம்புகுந்திருந்த புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதோடு அங்கிருந்து தப்பிச்செல்லமுற்பட்ட பொதுமக்களை இலக்குவைத்துத் துப்பாக்கிச் சூடுகளை நடாத்தியிருப்பதாக ஐ.நாவினது வல்லுநர்கள் குழு குற்றம் சுமத்துகிறது. ஆனால் இந்தச் சம்பவங்களில் எதனையும் எடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்களில் காண முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை எடுக்கப்பட்ட செய்மதிப் ஒளிப்படங்களில் காண முடியவில்லை என புறூம்லீ கூறுகிறார். 'தங்களது மோட்டார்களைக்கொண்டுவந்து ஒரு சில குண்டுகளை ஏவிவிட்டு மீண்டும் சென்று மறைந்துவிடுவார்கள். இதுபோன்ற சம்பவங்களை செய்மதிப் படங்களில் இலகுவாக உள்வாங்கிவிடமுடியாது' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

இதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு செய்மதிப்படத்தினை மாத்திரம் வைத்துக்கொண்டு முடிவெடுப்போமானால் அது சில சமயம் எங்களைத் தவறாகவும் இட்டுச்சென்றுவிடும் என்கிறார் அவர்.

"இதுபோன்ற படங்களின் ஊடாக இரண்டு தரப்பினரதும் செயற்பாடுகளைச் சமமாகப் பதிவுசெய்ய முடியாது. உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் போது, ஒரு பக்கத்தில் இடம்பெறும் சம்பவங்களைப் பதிவுசெய்துவிட்டு மறுபுறம் பதிவுசெய்ய முயலும்போது உலகம் நகர்ந்திருக்கும்" என்கிறார் புறூம்லீ.

அத்துடன் செய்மதிப் படங்களை பொதுமக்களுக்காகத் திறந்துவிடுவதிலும் சில காத்திரமான கவனயீர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறன.

"பொதுமக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சம்பவம் தொடர்பாக செய்மதிப் படங்களை சம நேரத்தில் வெளியிட்டால் அந்தத் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்தச் செய்மதிப் படங்களை ஆக்கபூர்வமான தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படாது. மோசமான எண்ணங்களுடன் காணப்படும் சிலர் இந்தச் செய்மதிப்படங்களை தவறான நோங்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்"

அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுக்கு உதவிசெய்யும் வகையில் ஐ.நாவின் UNOSAT என்ற நிறுவனத்திற்காக திரு புறூம்லீ தற்போது செய்மதிப் படங்களை ஆராய்ந்து வருகிறார். தற்போது லிபியா மீதான செய்மதிப்படங்களைத் தான் ஆராய்ந்து வருவதாகவும் தற்போதைய நிலையில் இந்தப் ஒளிப்படங்களை வெளியிடுவது தொடர்புடைய தரப்பினருக்கு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்பதால் UNOSAT இந்தப் படங்களை வெளியிடாது என்றும் புறூம்லீ கூறுகிறர்.

செய்தி வழிமூலம்: voanews

puthinappalakai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.