Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது!

-தமிழருவி மணியன்

உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள்

வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காகஇ ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. 'ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?’ என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள்இ தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில்இ பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!

கலைஞரும் ஜெயலலிதாவும்இ 'ஈழத் தமிழரின் இன்னல் குறித்து இங்கு இருந்தபடியே அதிகமாக இரு விழி நீர் ஆறாகப் பெருக்கியவர் யார்?’ என்று அறிக்கைப் போர் நடத்தத் தொடங்கிவிட்டனர். 'இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை’ என்ற பாடல்தான் நெஞ்சில் நிழலாடுகிறது.

'இலங்கையில் நடந்த இனப் படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காகஇ கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார் ஜெயலலிதா. 'நடந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல்இ இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுஇ போர்க் குற்றத்துக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால்இ இந்திய அரசோஇ தமிழக அரசோஇ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோகூட தெரிவிக்க​வில்லை’ என்று குற்றம் சாட்டுகிறார் முன்னாள் முதல்வர். 'இந்திய அரசு இலங்கைக்கு உதவியதுஇ இந்திய அரசுக்குக் கலைஞர் உதவிக் கரம் நீட்டினார்’ என்பது யாராலும் மறுக்க முடியாத உலகறிந்த உண்மை. ஆனால்இ வன்னிப் பகுதியில் தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் வெறியாட்டம் நிகழ்ந்தபோதுஇ முள்ளி வாய்க்காலில் எம் இனம் முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டபோது ஜெயலலிதா என்ன செய்தார்? 'ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள அரசியல் அமைப்பு அ.தி.மு.க.’ என்று அடிக்கடி அறிவித்துப் பரவசப்பட்டுக்கொள்ளும் 'புரட்சித் தலைவி’ மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கில் தன்னுடைய தொண்டர்களை வீதியில் நிறுத்தி இந்திய அரசுக்கு எதிராக ஏன் போர்க் குரல் கொடுக்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்இ 'இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தைப் பெறப் பாடுபடுவேன்’ என்று திடீரென்று சன்னதம் வந்ததுபோல் மேடை​களில் ஆவேசக் குரல் கொடுத்த 'அம்மா’இ தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு ஈழம் குறித்து இதழ் திறந்து இரண்டு வார்த்தைகள்கூட இயம்பாமல் மௌனத் தவம் இயற்றியது ஏன்? ஈழம் பற்றி ஜெயலலிதா பேசுவது தகாது. அப்படியானால்இ 'தமிழினத் தலைவர்’ கலைஞர் பேசுதல் தகுமா?

ஈழத் தமிழர் நலன் காக்க இன்று வரை கலைஞர் செய்த அளப்பரிய சேவைகளைஇ எண்ணிலடங்காத தியாகங்களைஇ கை வலிக்க எழுதிய கடிதங்களைஇ மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களைஇ நெஞ்சு வலிக்க மேடைகளில் முழங்கிய வீர முழக்கங்களைஇ மூன்று மணி நேரம் பசியடக்கி நடத்தி முடித்த உண்ணாவிரத சாகசங்களைஇ மக்கள் மழையில் நனைந்தபடி மனிதச் சங்கிலியாய் நிற்கஇ காரில் அமர்ந்தபடி பார்வையிட்ட வெஞ்சமர் வேள்வியை விரிவாக விளக்கி அறிக்கை வடிவத்தில் அளித்து இருக்கிறார்.

கலைஞரின் தியாகப் பயணத்தின் திருப்பு முனை நிகழ்வுகளில் ஓர் அரிய அரசியல் உண்மை புதையுண்டு​கிடக்கிறது. எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை முதல்வராக இருந்தபோதுஇ கோட்டை நாற்காலியில் அமர முயன்றும் கலைஞரால் கோபாலபுரத்தில்தான் முடங்கிக்கிடக்க நேர்ந்தது. அவர் பட்டியலிடும் போராட்டங்களின் புறமுகம் 'ஈழ மக்கள் ஆதரவு’ என்றாலும்இ அவற்றின் உண்மையான சுயமுகம் 'எம்.ஜி.ஆர். எதிர்ப்பு’ என்பதுதான் அரசியல் சூட்சுமம்!

ஈழத் தமிழருக்காக 1977-ல் சென்னையில் 5 லட்சம் பேரையும்இ 1983-ல் 7 மணி நேரத்தில் 8 லட்சம் பேரை​யும் திரட்ட முடிந்த கலைஞரால்இ செப்டம்பர் 2008 முதல்இ மே 2009 வரை ஈழ நிலத்தில் தமிழர் ரத்தம் வெள்ளம் எனப் பாய்ந்தபோதுஇ எண்ணற்ற குலப் பெண்டிர் கற்பிழந்து கதறித் துடித்தபோதுஇ சின்னஞ்சிறார்கள் சிதைக்கப்பட்டபோதுஇ உறுப்பிழந்து - உடைமையிழந்து - வாழ்விழந்து வதை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர் நரகத்தின் பாழ்வெளியில் நடைப்பிணங்களாக உருக்குலைந்தபோதுஇ வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற நடேசனும்இ புலித்தேவனும்இ நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்களும் கொன்றழிக்கப்பட்டபோதுஇ தமிழகத்தின் வீதிகளில் கழக உடன்பிறப்புகளைப் போர் நிறுத்தம் வேண்டி லட்சக்கணக்கில் திரட்டி இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரமுடியாமற் போனதன் பின்னணி என்ன?!

'இரு வாரங்களில் ஈழப் போர் நிறுத்தப்படாவிடில்இ 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள்’ என்று அறிவித்துவிட்டுப் புறநானூறு பேசியவர்கள்இ அதை நடைமுறைப்படுத்தாமல் புறமுதுகிட்டதின் மர்மம் என்ன?!

எம்.ஜி.ஆர். இருந்தபோது கலைஞர் ஈழ மக்களுக்காக அணி திரட்டியதுஇ முதல்வர் நாற்காலியைக் கைப்பற்று​வதற்காக!

இன்று ஈழ மக்களைக் கை கழுவியதுஇ அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்​கொள்வதற்காக!

சிங்களப் படை ஈழத்தில் இழைத்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்குக்கூட முன்வராத முதல்வர்இ தன்னை விமர்சித்த இளங்கோவனையும்இ காடு வெட்டி குருவையும் கண்டித்துத் தீர்மானம் தீட்டு​வதற்குக் கழகத்தின் உயர்மட்டக் குழுவைக் கூட்டியவர். அதே உயர்மட்டக் குழுவில் ராஜ​பக்ஷேவைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றத் துணி​வற்றவர் கலைஞர். ஈழம் குறித்துக் கலைஞர் கண்ணீர்விடுவதும்இ ஜெயலலிதாவின் ஈழ உணர்வு குறித்து ஆய்வு நடத்துவதும்இ கலைஞரின் வழக்கமான 'ஆதாய அரசியல் நாடகம்’ அல்லாமல் வேறு என்ன?

தியாகத் திருவிளக்குஇ சொக்கத் தங்கம் சோனியா காந்தியின் தயவுக்காகத் தவம் இருப்பது ஒரு பக்கம்... 'மத்திய அரசு ஐ.நா-வின் மூவர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்ததும் கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பணிவோடு விண்ணப்பம் தருவது மறு பக்கம்... இதுதான் நம் கலைஞரின் இன்றைய 'இரு’ பக்கம்!

'கனைக்கும் உரிமைகூட மாநிலக் குதிரைகளுக்கு டெல்லிப் பேரரசின் லாயத்தில் கிடையாது’ (கலைஞர் கடிதம் 3.12.1973) என்று 37 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொண்டவர் நம் முதல்வர். ஆனால்இ மேடைகளில் மட்டும் அவருக்குப் பாரதிதாசன் எழுதி அனுப்பிவைத்த 'கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் - கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்​டத்தை’ என்று மறவாமல் முழங்குவார்.

'கூட்டாட்சியும்இ மாநிலச் சுயாட்சியும் பிரிக்க முடியா​தவை. சுயாட்சி இல்லாமல்இ கூட்டாட்சி இருக்​கவே முடியாது’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பாராவ் சொன்னதை (கலைஞர் கடிதம் 23.6.74) உடன்பிறப்புக்கு உணர்த்தியவர்இ 'ஈழத் தமிழருக்குக் கொஞ்சம் போட்டுக் கொடுங்கள்’ என்ற பாணியில் மத்திய அரசிடம் மனுப் போடுகிறார். 'கொட்டும் மழையைச் சுட்டுப் பொசுக்குகிறேன் பார் என்று கொள்ளிக் கட்டையை எடுத்து நீட்டினால் கட்டைதான் அணையுமே தவிரஇ மழையா நின்றுவிடும்?’ (கலைஞர் கடிதம் 6-10-74) என்று எள்ளல் சுவையோடு கேள்வி கேட்ட நம் கலைஞர்இ இன்று ஈழம் காண எந்தக் கட்டையைக் கையில் எடுத்திருக்கிறார்?!

ஈழத்தைவைத்து இங்கே கலைஞரும் ஜெயலலிதாவும் தொடர்ந்து செய்து வருவது கடைந்தெடுத்த ஆதாய அரசியல்! போகட்டும்இ நம் இனவுணர்வாளர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? வழக்கம்போல் வைகோவும் நெடுமாறனும் ஒரு பக்கம் கூடுவார்கள். வீரமணி வேறு ஒரு நாள் வீதியில் குரல் கொடுப்பார். சீமான் தனியாக மேடை போட்டு சீற்றவுரை ஆற்றுவார். தமிழினத்தின் நலிவு நீங்கக் குரல் கொடுக்கும்போதும் கூடி நிற்க முடியாதவர்கள்இ எதற்காகத் தமிழினத்தின் பேரால்இ தமிழின் பேரால் ஆளுக்கு ஓர் அரசியல் கடை திறக்க வேண்டும்? தமிழ்நாட்டில் இனி யாரும் ஈழத் தமிழர் குறித்துப் பேசாதிருப்பதே... அவர்களுக்குச் செய்யும் பெருந்தொண்டு!

'மனித குலத்தின் மிகப் பெரிய அவலம் சிலரால் இழைக்கப்படும் கொடுமைகள் அன்று; அந்தக் கொடுமைகளை எதிர்க்கத் துணிவின்றி வேடிக்கை பார்க்கும் பலரின் மௌனம்’ என்றார் கறுப்பினப் போராளி மார்ட்டின் லூதர் கிங். தமிழ் மண்ணில் நாம் அந்த அவலத்தைத்தான் அரங்கேற்றி வருகிறோம். இனி ஒரு விதி செய்வோம். கட்சி அரசியல் கலக்காமல் ஏழு கோடி மக்களும் நம் இனம் காக்க எழுந்து நின்று போராடுவோம். கலைஞரும்இ ஜெயலலிதாவும்இ இனவுணர்வுப் போராளிகளும்இ ஈழத்துக்காக இணைந்து குரல் கொடுக்க முடியாதெனில்இ அதுபற்றிப் பேசுவதை அறவே விட்டுவிடுவோம். கொசோவா குடியரசாக முடியும் எனில்இ இந்தோனேஷியாவின் பிடியில் இருந்து கிழக்கு திமூர் விடுபட இயலும் எனில்இ 2 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவானஇ 35 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழும் 'மொனகோ’ ஒரு தனி நாடாக இயங்குவது சாத்தியம் எனில்இ ஈழமும் ஒரு நாள் உலக அரங்கில் தனி நாடாய் நிச்சயம் உருவாகும். அதற்கான அடித்தளத்தைப் புலம் பெயர்ந்த தமிழர்களே அமைத்துக்கொள்வார்கள். ஈழத்தின் பெயரால் இங்கே நடப்பது நாற்காலி அரசியல். அதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.

கவிஞர் இளம்பிறை இங்கு உள்ள தமிழரை நெஞ்சில் நிறுத்தி எழுதிய அர்த்தமுள்ள கவிதையின் கடைசி வரிகள் போதும்இ நம் இயலாமையைத் தோல் உரிக்க...

'உம் இறந்த உடல்களில் அசைகிறது உயிர்

எம் உயிருள்ள உடல்களில் நடக்கிறது பிணம்!’

நன்றி-விகடன்

இது தொடர்பாக விகடனில் வந்த சில பின்னூட்டங்கள்

கலைஞரைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் அவரது குடும்பப் பற்றினையும் மீறி இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும் எனத் தமிழருவியார் எண்ணினால் ஏமாந்தே போவார்.தமிழின அழிவினை நிறுத்தும் வகையில் தி.மு.கவின் மத்திய அமைச்சர்களது பதவியைத்தானும்ஜபதவி இல்லாவிடில் கோடிகளைப் பார்க்க முடியாதேஸ இழக்க விரும்பாத கலைஞர் வெகு விரைவில் தனது மகளுக்காக தமது கட்சியினரைப் பதவி விலகச் செய்வார்!

எம்.ஜி.ஆர். இருந்தபோது கலைஞர் ஈழ மக்களுக்காக அணி திரட்டியதுஇ முதல்வர் நாற்காலியைக் கைப்பற்று​வதற்காக!

இன்று ஈழ மக்களைக் கை கழுவியதுஇ அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்​கொள்வதற்காக!

தா மா க வில் இருந்தபோது கலைஞர் கிட்ட சொல்லி இருக்கலாம்ல......

உண்மை ..ஈழமக்கள் எல்லோரும் தமிழ்நாட்டு தமிழர்களை நம்பாமல் இருப்பதே சிறந்தது.மேற்க்கத்திய நாடுகள் உதவி செய்தாலும் செய்யுமே தவிர இந்தியா செய்யாது. - திரு

டென்சன் தான் ஆகிறது இதைப் படிக்க படிக்க.. கேடு கெட்ட அரசியல்வாதிகள் நமக்குத் தேவையா? தூ...

கட்டுரையில் இருப்பது யாவும் முற்றிலும் உண்மை. சிந்திக்க தூண்டும் நிறைவு பகுதி.

Like|Report Abuse|7 Hours ago

Srinivasan

அம்மாவின் பின்னால் ஒரு கோடி பேரும், அய்யாவின் பின்னால் ஒரு கோடி பேரும், இன்னபிற தலைவர்களுக்குப் பின்னால் ஒரு கோடி பேரும், சினிமா - சாதி தலைவர்களுக்குப் பின்னால் ஒரு கோடி பேரும், யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன வம்பு என ஒரு கோடி பேரும் இருப்பதால், இனத்திற்காக நாம் எப்படி ஏழுகோடி பேரைத் திரட்டுவது? அந்த நம்பிக்கை நம்மிடையேயும், ஈழத்தமிழரிடையேயும் போய் வெகு நாட்களாகிவிட்டது. இனி நாம் ஈழத்தமிழருக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டுமெனில், அவர்களைப் பற்றி பேசாமலும், எழுதாமலும் இருப்பதே!

Like|Report Abuse|7 Hours ago

rengana

தமிழ்நாட்டில் இனி யாரும் ஈழத் தமிழர் குறித்துப் பேசாதிருப்பதே... அவர்களுக்குச் செய்யும் பெருந்தொண்டு!

உம்மையும் சேர்த்து!

Like|Report Abuse|8 Hours ago

Srinivasan Murugan

இவ்வளவு கூறும் தமிழருவி கரை புரண்டு ஓடி தமிழினத்திற்கு தலைமை தாங்க வருவாராகில் அவர் பின்னால் முதல் தொண்டனாக நான் நின்று போராட தயார். தலைமை ஏற்பாரா!!

1 Like|Report Abuse|8 Hours ago

Sysyan

எத்தனை பேர் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்று சொல்வதற்கு ஐ.நா. சபை எதற்கு. அதற்குத்தான் செய்தித்தால்களும் நியூஸ் சேனல்களும் உள்ளனவே. அதிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை டிஸ்கவுண்ட் அப்ளை பண்ணி பாதியாக குறைத்து விட்டனர்.

1 Like|Report Abuse|8 Hours ago

மைனர்

அய்யகோ!உடன் பிறப்பே,இரண்டாவது குற்றபத்திரிக்கைய வந்துவிட்டது!உடனே எழுது பதவி விலகல் கடிதத்தை.ஈழத்தை அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்வோம்.

1 Like|Report Abuse|8 Hours ago

edwin

முழுவதும் உண்மையே..!!

Like|Report Abuse|8 Hours ago

Sarvachitthan

கலைஞரைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவதால் அவரது குடும்பப் பற்றினையும் மீறி இன உணர்வு பீறிட்டுக் கிளம்பும் எனத் தமிழருவியார் எண்ணினால் ஏமாந்தே போவார்.தமிழின அழிவினை நிறுத்தும் வகையில் தி.மு.கவின் மத்திய அமைச்சர்களது பதவியைத்தானும்[பதவி இல்லாவிடில் கோடிகளைப் பார்க்க முடியாதே] இழக்க விரும்பாத கலைஞர் வெகு விரைவில் தனது மகளுக்காக தமது கட்சியினரைப் பதவி விலகச் செய்வார்!

2 Like|Report Abuse|9 Hours ago

sivakumar

ilampirai's words are pinching my(our) heart(s). very true. when so many people incl. women and children killed, we were watching movies, working normally, eating dishes, etc., i feel like a dead man. am just 36 years old, have 2 children. I pray to god...let my children grow fast.... i want to dis-appear once i know they can stand on their own.

1 Like|Report Abuse|9 Hours ago

1 2 Displaying 11 - 19 of 19

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.