Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் கனேடியத் தலைவர்கள்

Featured Replies

இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் கனேடியத் தலைவர்கள்

கனடாவின் 42ஆவது பாராளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் கனடாவின் பிரதான கட்சிகள் இறுதிகட்ட வாக்கு வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள்.

கொண்சவேட்டிவ் கட்சியினை அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவைப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் அக்கட்சியின் தலைவர் காப்பர் ஞாயிறன்று இறுதிக்கட்டச் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருக்கிறார்.

இன்று காலையில் ஸ்ராபோட் பகுதியிலிருந்து தனது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தினை ஆரம்பிக்கும் காப்பர் அங்கிருந்து ஒன்ராரியோவின் லண்டன் நோக்கிப் பயணிப்பார் எனத் தெரிகிறது.

லிபரல் கட்சியினை விட புதிய சனநாயகக் கட்சியினருக்கான ஆதரவே அதிகமிருப்பதாக அண்மையில் வெளிவந்திருக்கும் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கும் நிலையில், லிபரல்கள் மீதிருந்த தனது பார்வையினைக் காப்பர் புதிய சனநாயகக் கட்சியினை நோக்கித் திரும்பியிருந்தார்.

கொண்சவேட்டிவ் கட்சியினர் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கெல்லாம் வாக்குக் கிடைக்குமோ அங்கெல்லாம் காப்பர் பறந்து திரிகிறார்.

அறுதிப்பெரும்பான்மையின் சிறுபான்மை அரசாங்கம் அமைத்தால் ஆட்சியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் என்ன என்பதை காப்பர் நன்கறிவார்.

புதிய சனநாயக் கட்சியின் தலைவர் ஜக் லெய்ரன் அவர்கள் மொன்றியல், ஒன்ராரியோ, கிங்ஸ்ரன், ஒஸ்காவா மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களில் தனது இன்றைய பிரசாரத்தினை மேற்கொள்ளுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்.

சனியன்று பிரிட்டிஸ் கொலம்பியாவில் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், பொலிசார் தன்னை நேர்கண்டது தொடர்பாக விளக்கமளித்தார். 1996ஆம் ஆண்டு போலியானதொரு குற்றச்சாட்டினைத் தொடர்ந்து தன்னைச் சந்தேகித்த பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதாகக் கூறினார் லெய்ரன்.

ஆனால் இந்தச் சம்பவத்தினால் தான் தவறான நடந்துகொள்ளவில்லை என அவர் வாதிடுகிறார். இந்தச் சம்பவத்தின் போது இவருக்கு எதிராக முறையாக குற்றச்சுமத்தப்படவோ அன்றில் கைதுசெய்யப்படவோ இல்லை.

இது இவ்வாறிருக்க தனது இறுதிநாள் பிரசாரமாக லிபரல் கட்சியின் தலைவர் மிகையில் இக்னெற்றிவ் ரொறன்ரோ, மார்க்கம், துறோன்கில் மற்றும் மப்பில் பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்கிறார்.

இறுதியாக வெளிவந்திருக்கும் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் காப்பரின் கொண்சவேட்டிவ் கட்சி முன்னணியிலும் தேசிய சனநாயகக் கட்சி இரண்டாம் நிலையிலும் லிபரல் கட்சி மூன்றாம் நிலையிலுமுள்ளது.

புகைப்படத்துடன்கூடிய செய்திக்கு......

http://www.thedipaar.com/news/news.php?id=27713

கன்சேர்வேட்டி கட்சிக்கு எதிராக ஏன் வாக்களிக்க வேண்டும்?

by Meera Bharathy on Saturday, April 30, 2011 at 11:52pm

தேடகம் - தமிழர் வகைதுறைவள நிலையம் கன்சேவேட்டி கட்சியன் குடிவரவாளர்களுக்கு எதிரான கொள்கைகள் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது. இதில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக குடிவரவாளர்கள் தொடர்பாக கடந்த 30 வருடங்களாக பணியாற்றுகின்ற வழக்கறிஞர் மற்றும் சேரன்> ரகுமான் ஜான்> ஈழவேந்தன்> நடராஜா முரளி மற்றும் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கினர். இக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கருத்துக்களையும் எனது கருத்தையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

கன்சேர்வேட்டி கட்சி வெறும்; பழமைiயான பிற்போக்கான கருத்துக்களைப் பேணுகின்ற கட்சி என்பது நாம் அறிந்ததே. ஆனால் கடந்த ஜந்து ஆண்டுகளில் மேலும் பல சட்டங்களை இயற்றியும் செயற்பாடுகளை முன்னெடுத;தும் தாம் ஏற்கனவே கனடாவில் வாழ்கின்ற குடிவரவாளர்களுக்கும் மற்றும் புதிய குடிவரவாளர்களுக்கும் அகதிகாளக வருவோருக்கும் மத்தியதர வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் எதிரான ;கட்சி என்பதை பலமுறை நிறுபித்துள்ளனர். ஆகவே இவர்களுக்கு நாம் அளிக்கின்ற வாக்குகள் நமக்கு எதிரான நமது உரிமைகளுக்கு எதிராக நாமே அளிக்கின்ற வாக்குகளாகும். ஆகவே நாம் பலமுறை சிந்தித்தே நமது வாக்குகளை அளிக்கவேண்டியவர்களாக உள்ளோம். ஏன் இவர்களுக்கு அளிக்கின்ற வாக்குகள் நமக்கு எதிரானவை?

முதலாவது இக் கட்சியின் ஆதிக்கத்திலிருக்கின்ற அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள C - 49 சட்ட மூலமானது அகதிகளுக்கு எதிரான ஒரு சட்டமாகும். இது வெறும் மனிதக் கடத்தல்காரர்களுக்கு மட்டும் எதிரான சட்டமல்ல. மாறாக சன் சீ போன்ற கப்பல்கள் மூலம் அகதிகளாக வரும் ஆண்களை மட்டுமல்ல பெண்கள் குழந்தைகள் மற்றும் வயோதிபர்களையும் ஆகக் குறைந்தது ஒரு வருடம் கட்டாய சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு அடைத்து வைக்கலாம். மேலும் ஜந்து வருடங்களுக்கு கனேடிய நிரந்தர வதிவிட உரிமை தடுக்கப்பட்டுள்ளதால் தமது குடும்ப உறவினர்களை கனடாவிற்கு அழைக்க முடியாதவாறு தடுக்கின்றது. மேலும் பயணம் செய்வதற்கான கடவுச் சீட்டையும் பெறமுடியாது தடுக்கின்றது. குறிப்பாக இந்த சட்டமூலமானது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல தமிழர்கள் அனைவரையும் புலிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்தி தண்டிப்பதற்கு வழிசெய்கின்ற ஒன்றாகும். சுpலர் கூறுவது போன்று புலிகளே தமிழர்கள் மற்றும் தமிழர்களே புலிகள் என்பது ஒரு வெற்றுக் கோ~மே. இவ்வாறன கோ~ங்கள் புதிதாக வருகின்ற தமிழ் குடிவரவாளர்களையே பாதிக்கின்றது. ஆகவே தமிழ் பேசுகின்ற கனடா வாழ் மனிதர்கள் கன்சேவேட்டி கட்சிக்கு வாக்களிக்கின்றபோது ஒன்றுக்கு பல தடவைகள் சிந்தித்தே வாக்களியுங்கள். ஏனனில் நீங்கள் அவர்களுக்கு அளிக்கின்ற வாக்குகளை உங்களது அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவே வாக்களிக்கின்றீர்கள் என்பதை மறக்கவேண்டாம்.

சேரன் மூன்று முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்டினார். முதலாவது 2006ம் ஆண்டிலிருந்து இந்த அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தொடர்ச்சியாக தொடுக்கின்றது. ஒரு ஜனநாயக அரசானது வெளிப்படைத்தன்மை கொண்டது மட்டுமல்ல தம்மை அதிகாரத்தில் இருத்திய சகல மட்டத்திலுள்ள மக்களுக்கும் சகல வியடங்களையும் தெரியப்படுத்தும் கடமை உள்ளது. ஆனால் மக்களுக்கு தனது செயற்பாடுகள் தொடர்பான உண்மைகளை தெரிவிக்காது மட்டுப்படுத்துகின்றது. இந்த செயற்பாடானது மக்களுக்கு இருக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை அறிகின்ற உரிமையை மறுக்கின்றது. ஆகவே மக்களுக்கு எதிரான சட்டங்களையும் செயற்பாடுகளையும் மற்றும் (போர் மற்றும் போர் தளபாட ) செலவுகளையும் எந்தவிதமான பொறுப்புமின்றி செய்கின்றது. மேலும் இந்த கன்சேவேர்ட்டி அரசாங்கமானது சித்திரவதை செய்வதை அங்கிகரித்து ஆதரிக்கின்றது. ஆகவே கனேடிய இராணுவம் ஆப்கானிஸ்தானில் சித்திரவதை செய்வதையும் மற்றும் சித்திரவதைகளுக்கு ஆதரவாக இருப்பதையும் அங்கிகரித்து ஆதரிப்பதன் மூலம் ஜ.நாவின் சர்வதேச மனித உரிமை சாசனத்திற்கு எதிராகவே செயற்படுகின்றது. மேலும் மாகாண அரசாங்கங்கள் இலவச மருத்துவ சேவைகளை தனியார் மயப்படுத்துவதை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அதிகாரங்கள் இருந்தும் அதைப பயன்படுத்தாமல் இருக்கின்றது. இவ்வாறான கன்சேவேட்டி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்களை சுரண்டும் முதலாளிகளுக்கு சார்பானவைகள் என்பதை வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன. இதனால் கன்சேவேட்டி கட்சிக்கு வாக்களிப்பதால் பாதிக்கப்படப்போவது மத்தியதர வர்க்கத்தினரும் வறிய மக்களும் புதிய குடிவரவாளர்களும் மற்றும் வயோதிபர்களுமே. ஆகவே கன்சேவேட்டி கட்சிக்கு வாக்களிப்பவர்கள் தமது முடிவு தொடர்பாக மீள் சிந்தனை செய்யவேண்டி உள்ளார்கள்.

குறிப்பாக தமிழ் கனேடியர்களின் தேர்தல் கால இணக்க அரசியல் என்பது அடிப்படையில் பிழையானது மட்டுமல்ல தமிழர்களுக்கு எதிரானது எனவும் சேரன் சுட்டிக்காட்டினார். தமிழர்களின் தேசிய விடுதலை அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சியிலும் தமிழர்கள் பிரிந்து செயற்பவதல்ல சரியான பாதை. ஏந்தக்கட்சி மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக குடிவரவாளர்களின் பிரச்சனைகளைக் கதைக்கின்றது அதற்காக குரல்; கொடுக்கின்றது என கவனித்தே அக் கட்சி சார்பாக தேர்தலில் நிற்பதோ அல்லது அக்கட்சிக்கு வாக்களிப்பதாகவே இருக்கவேண்டும். இதற்கு மாறாக தமிழர் ஒருவர் தேர்தலில் நிற்கின்றார் என்பதற்காக வாக்களிப்பது மிகவும் முட்டாள்தனமான தமிழ் இனவாத செயற்பாடாகும். ஏனனில் அவர் தமிழர் என்பதற்கப்பால் அவர் சார்ந்த கட்சியும் அதனது கொள்கைகளும் கவனிக்கப்படாமல் விடுகின்றன. இது மிகப் பெரிய தவறாகும். ரா “கவன்” கன்சேர்வேட்டி கட்சி சார்பாக கேட்பது அவரது அடிப்படை உரிமை. ஆனால் தான் ஒரு தமிழர் என அடையாளப்படுத்தி கேட்பதுதான் பிரச்சனையர்னது. ஏனனில் இவர் சார்ந்த கட்சி தமிழர்களைப் போன்ற குடிவரவாளர்களுக்கு எதிராக செயற்படுகின்ற கட்சிக்கு ஆதரவாகவே தேர்தலில் நிற்கின்றார். இவர் உண்மையிலையே தமிழர்களினதும் அவர்களைப் போன்ற குடிவரவாளர்களினதும் நலன்;களிலும் அரசியல் உரிமைகளிலும் அக்கறை உள்ளவர் எனின் உடனடியாக போட்டியிலிருந்து விலகுவதே நியாயமானதாகும். ஆல்லது இவரும் தமிழர்களுக்கும் குடிவரவாளர்களுக்கும எதிராக செயற்படுகின்ற ஒரு தமிழ் பிழைப்பு அரசியல் வாதியே என்றால் மிகையல்ல. இதற்காக இவரை துரோகி என்றெல்லாம் நாம் முத்திரை குத்தமாட்டோம். மாறாக மக்கள் முன் அம்பலப்படுத்துவோம். மக்கள் தமது உண்மையான பிரதிநிதி யார் என்பதை தீர்மானிக்கட்டும்.

ரகுமான் ஜான் குறிப்பிடும் பொழுது அனைத்து குடிவரவாளர்களுக்கும் பொதுவான பிரச்சனை இருக்கின்றது. ஆகவே நாம் அனைத்து பல்லின குடிவரவாள சமூகங்களுடன் இணைந்து செயற்படவேண்டும். தமிழர்கள் என்ற குறுகிய வட்டத்திற்கு செயற்படுவது இனவாத செயற்பாடாகும் என்றார். அண்மையில் நடைபெற்ற பொருளாதரா மந்தபோக்கின்போது அல்லது உடைவின் போது அதிலிருந்து பெரும் கம்பனிகளைக் காப்பாற்றுவதற்காக மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி வழங்கினார்கள். இப்பொழுது மக்களிடம் அதிக வரியை பெற்றும் விலைவாசிகளை உயர்த்தியும் அந்தப்பணத்தை ஈடுசெய்கின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக செலவு செய்யாத இந்த அரசாங்கம் இராணுவத்திற்கான செலவை தராளமாக செய்கின்றது. ஆகவே இவ்வாறான ஒரு அரசாங்கத்திற்கு தமது வாக்கை அளிப்பதா என வாக்களார்கள் பல முறை சிந்திக்க வேண்டி உள்ளார்கள்.

இந்தத் தேர்தலில் நமக்கு இரண்டு பணிகள் உள்ளன. முதலவாது என்.டி.பி கட்சியை வெற்றி அடையச் செய்வதன் மூலம் நமது அதாவது குடிவரவாளர்களின் அரசியலை நிலைநிறுத்துவது. நமது உரிமைகளை காப்பது. சேரன் குறிப்பிட்டது போன்று இனிவரும ;காலங்களில் பல்லின அடையாளங்கொண்ட இனத்துவ அரசியலே சாத்தியமானது. இதனை மறுத்து அரசியல் செய்ய முடியாது. ஆகவே தான் குடிவரவாளர்களுக்கு எதரானவர்களாக இருந்தபோதும் கூட பல்லின சமூகங்களுக்கு பணம் மற்றும் பல்வேறு உதவிகள் வழங்கி அவர்கள் சார்பான பிரதிநிதிகளை நமது கட்சி சார்பாக கன்சேர்வேட்டி கட்சி வேட்பாளர்களாக நிறுத்துகின்றது. இவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவதன் அர்த்தம் இந்த பல்லின சமூகங்களின் அரசியலையோ பிரச்சனகளையோ பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதல்ல. ஆகவே கன்சேர்வேட்டி கட்சியை தோற்கச் செய்வதே நமது இரண்டாவது பணி. ஆகவே நாம் வாக்களிக்கும் பொழுது நமது முதல் தெரிவாக என்.டி.பி கட்சி இருப்பது நல்லது. அதாவது என்.டி.பி கட்சியும் லிபரல் கட்சியும் குறைந்த வித்தியாசத்தில் போட்டியிடுகின்ற இடங்களில் என்.டிபி கட்சிக்கே உங்கள் வாக்கை அளியுங்கள். ஆனால் சில ;இடங்கிளில் என். டீ.பி கட்சி மிகவும் பின்தங்கிய நிலையிலும் அந்த இடங்களில் லிபரல் கட்சியும் கன்சேர்வேட்டி கட்சியும் குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்தில ;போட்டி போடுகின்றது. இவ்வாறான இடங்களில்; லிபரல் கட்சிக்கும் உங்கள் வாக்கை அளியுங்கள். இந்;தப் போட்டியை அறிவதற்கு பின்வரும் இணையத்தளத்தைப் www.projectdemocracy.ca பயன்படுத்துங்கள். இங்கு குறிப்பிட்டவை கலந்துரையாடலில் கூறப்பட்ட விடயங்களே. இவை உங்களது சிந்தனைக்கு மட்டுமே. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற ஜனநாயக உரிமை உங்களுக்கே உள்ளது. ஆனால் வாக்களிக்கும் பொழுது சிந்தித்து வாக்களியுங்கள்.

தமிழ் பேசுகின்ற மனிதர்களே நாம் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதல்ல முக்கியமானது. எந்தக் கட்சிக்கு வாக்களிக்கின்றோம் என்பதே முக்கியமானது.

எனனில் ஒரு கட்சியின் கொள்கைகளே நமது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும்.இப்போதைக்கு கனடாவிலிருக்கின்ற அவ்வாறான ஒரு கட்சி என்.டி.பி கட்சி மட்டுமே;.

உங்களுடன் வேலை செய்கின்ற மற்றும் தங்கள் வீடுகளுக்கு அருகிலிருக்கின்ற பல்லினங்களைச் சேர்ந்த குடிவரவாளர்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றது என்பதிலையே நமது எதிர்கால நல்ன்களும் உரிமைகளும் தங்கியிருக்கின்றன.

ஓவ்வொரு தமிழ் ;அமைப்புகளும் அதன் பிரதிநிதிகளும் இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

http://www.facebook.com/notes/meera-bharathy/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/10150169530642404

One of the editorial board's key reasons for the endorsement is what they refer to as the “successful stewardship of the economy.” On this point, however, it could be persuasively argued that the Liberals’ solid managing of the economy in the 13 years prior to Mr. Harper’s election is what made Canada especially resilient after the severe 2008 recession. The Liberals beat back an excessive deficit and have rightly been praised internationally for having done so.

http://www.theglobeandmail.com/news/politics/anyone-but-harper-a-dissenting-endorsement/article2005395/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.