Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி கைதா? ஜாமீனா? மே 14ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு.

Featured Replies

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், கனிமொழியின் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மே 14-க்கு ஒத்தி வைத்தது.

கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நேற்று வாதிட்ட நிலையில், அந்த மனுவை சிபிஐ தரப்பு இன்று எதிர்த்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று காலை மீண்டும் தொடங்கியது.

இதற்காக, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் இரண்டாவது நாளாக ஆஜராகினர்.

கனிமொழிக்கே முக்கியப் பங்கு!

சிபிஐ சார்பில் தனது வாதத்தை இன்று காலை தொடங்கிய வழக்கறிஞர் யு.யு.லலித், "கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட கூடாது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குனராக சரத்குமார் இருந்தாலும், அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டின் பின்புலத்தில் கனிமொழி இருந்துள்ளார்," என்றார்.

கனிமொழி வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்தார் என்பதை ஏற்க முடியாது என்ற அவர், "கலைஞர் டிவியை துவக்குவது தொடர்பாக அப்போதைய அமைச்சர் ஆ.ராசாவிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். கலைஞர் டிவிக்கு அனுமதி பெறுவதற்காக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் ராசா பேச்சு நடத்தியுள்ளார். கலைஞர் டிவியின் பின்புலத்தில் இயங்கியவர் கனிமொழிதான்.

ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை ஒரு குடும்பம் வைத்திருக்கும்போது, அந்த நிறுவனத்தின் மூளையாக வேறு ஒருவர் செயல்பட்டு வருகிறார் என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது," என்று லலித் வாதிட்டார்.

மேலும், கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்பதால், குற்றவியல் சட்டம் 88சி-யின் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அத்துடன், அவரைக் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும். வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய மட்டுமே அவர் அனுமதிக்கப்பட வேண்டும்," என்று சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கின் முடிவை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

ஆ.ராசாவே முழு காரணம்...

முன்னதாக, தாங்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க இந்திய குற்றவியல் சட்டம் 88சி-யின் கீழ் கனிமொழி, சரத்குமார் சார்பில் வெள்ளிக்கிழமை முன் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

கனிமொழி சார்பில் ஆஜராகி வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராஜ் ஜெத்மலானி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டுக்கு முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவே காரணம் என்றும், கனிமொழிக்கும் ஆ.ராசா, ஷாஹித் உஸ்மான் பால்வா ஆகியோருக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்றும் வாதிட்டிருந்தார்.

கனிமொழி மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளவர், சமுதாயத்தில் கௌரவமானவர், அவருக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை. பெண் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி பெரிய பொறுப்பு எதையும் வகிக்கவில்லை. அவர் ஒரு சிறிய பங்குதாரர். பொதுவாக பங்குதாரகளுக்கு நிர்வாகத்தில் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியது இல்லை. நிர்வாக இயக்குநர்தான் தினம்தோறும் முடிவுகளை எடுப்பது வழக்கம் என்றும் ஜெத்மலானி வாதிட்டிருந்தார்.

அதேவேளையில், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜராகி வாதாடினார்

ஆசிப் பால்வா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால், இந்த வழக்கில் சிபிஐ பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.

லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் ஆசிஃப் பால்வாவை கைது செய்த சிபிஐ, லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழியை விட்டுவிட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பின்னர், கனிமொழி உள்ளிட்டோரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி ஓ.பி.சைனி ஒருநாள் ஒத்திவைத்தார்.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் ரூ.1.76 லட்சம் கோடி நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கில், சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி தாக்கல் செய்தது.

அதில், கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழியின் பெயர் 'கூட்டுச் சதியாளர்' என இடம்பெற்றது. ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது, லஞ்சத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பான குற்றச்சாட்டை சார்ந்ததாகும்.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரின் பெயரும் அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, இருவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய பணம், பால்வாவின் நிறுவனம் மூலம் கலைஞர் டிவி நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே குற்றச்சாட்டு.

ஆனால், பால்வாவின் நிறுவனம் மூலம் பெற்ற ரூ.100 கோடி கடன் தொகையே என்றும், அதனை திருப்பித் தந்துவிட்டோம் என்றும் கலைஞர் டிவி தரப்பு விளக்கம் அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி குறித்த படம் மற்றும் வீடியோ பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=28009

கனிமொழிக்கு சிறை: சிபிஐ வலியுறுத்தல்

kanimozhli.jpg

2ஜி வழக்கு தொடர்பாக தம்மைக் கைது செய்யாமலிருக்க கனிமொழி எம்.பி. தாக்கல் செய்திருக்கும் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் சார்பில் இந்திய குற்றவியல் சட்டம் (சி ஆர்.பி.சி) 88சி-யின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுவை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நேற்று வாதிட்டனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது. விசாரணைக்கு ஆஜராவதற்காக கனிமொழி இன்று காலை 9.40 மணி அளவில் தமிழ்நாடு பவனில் இருந்து பாட்டியாலா வளாகத்துக்கு வந்தார்.

சிபிஐ சார்பில் வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார். கலைஞர் டி.வி.யில் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரைப் போலவே கனிமொழிக்கும் 20 சதவீத பங்குகள் இருக்கின்றன. கனிமொழி வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்தார் என்பதை ஏற்க முடியாது. கலைஞர் டி.வி.யின் நிர்வாகத்தில் கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதற்காக அரசியல் தரகர் நீரா ராடியா மூலமாக கனிமொழி பரிந்துரை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

கலைஞர் டி.வி. தொடங்கப்படும்போது ராசாவுடன் கனிமொழி அடிக்கடி பேசியிருக்கிறார். இவற்றின் காரணமாக எந்த ஆவணமும் இல்லாமல் கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறியிருக்கிறது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் குற்றவியல் சட்டம் 88சியின் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரைக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும். வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய மட்டுமே அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது

http://www.alaikal.com/news/?p=68592

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.