Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளை தேடி நான்காம் மாடிக்கு வந்த மக்களின் கண்ணீர் பேட்டிகள்...பேட்டி -3

Featured Replies

திருமதி. வே.நாகேந்திரன் (45 வயது) 342, அன்புவழிபுரம், திருகோணமலை.

எனது கணவர் வியாபாரம் செய்கின்றார் எனது மூத்த மகன் பிரதீபன்தான் காணாமல் போனவர். 2008.05.27 ஆம் திகதி விசாரணைக்காக திருக்கோணமலை மெதடிஸ் வித்தியாலயத்தில் பொலிசார் சொன்னதாக அவருடைய நண்பரொருவர் வந்து சொன்னதன் பேரில் முற்பகல் பத்து மணியளவில் அவரை அனுப்பிவைத்தோம்.என்னுடைய மகன் வெளிநாடு போய் வந்தவர்.

வெளிநாடு போய் வந்திருப்பதனால் தான் விசாரிக்க இருப்பதாகவும், தன்னையும் விசாரித்து விட்டு அனுப்பிவிட்டதாகவும் அந்த நண்பன் சொன்னதாலும் என் மகன் எந்தவிதக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. மற்றும் எந்தவித அமைப்புட னும் எந்தவிதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம் என்பதால் நாங்கள் எந்தவித அச்சமும் சந்தேக மின்றி அந்த நண்பனுடன் அனுப்பிவைத்தோம். மாலையில் திரும்பி வந்த அந்த இளை ஞன் அவர்கள் அவனை வெள்ளைவேனில் ஏற்றிக்கொண்டு கடற்படை முகாக்குக் கூட் டிச் சென்றார்கள் என்று சொன்னான்.

எப்படியும் விசாரித்துவிட்டு விடுவார்கள் என்று இரண்டு நாட்கள் காத்திருந்தோம். பின்னர் திருகோணமலை துறைமுகப் பொலிசில் முறைப்பாடு செய்தோம். அவ்வாறு முறைப்பாடு செய்யும் போது ஆபத்திற்கு அஞ்சி அன்றைய சூழ்நிலையில் எல்லோரும் செய்தது போல் மகன் மின்சாரக் கட்டணம் கட்டப் போகும்போது காணாமல் போய்விட்டதாகத்தான் முறைப்பாடு கொடுத்தோம்.

மேலும் முறைப்பாடு கொடுத்தால் சுட்டுக் கொன்று விடுவதாக அவர்கள் அச்சுறுத்தியிருந்தார்கள். பின்னர் மனிதவுரிமை ஆணைக் குழு மற்றும் ஐ.சி.,ஆர்.சி ஆகியவற்றிடம் முறைப்பாடு கொடுத்தோம். எந்தவிதமான பலனும் கிட்டவில்லை.

அவ்வருடம் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி சரஸ்வதி பூஜையன்று என் மகனை அழைத்துச் சென்ற அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரிபால என்ற பெயரில் கொச்சைத் தமிழில் (சிங்களவர் பேசுவது போன்று) பேசி மகனை விடுவிப்பதாயின் 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டார். அவ்வளவு காசு எங்களிடம் இருக்கவில்லை எப்படியும் மகனை விடுவிக்க வேண்டும் என்பதற்காக பேரம்பேசி 1 1/2 இலட்சம் ரூபா தருவதாக ஒப்புக்கொண்டோம்.

மகனிடம் பேச வேண்டும் என்று சொல்லவே மகனிடம் சில நிமிடங்கள் பேச அனும தித்தார்கள். திருகோணமலையிலிருந்து கொழும்பு வழியில் 97 ஆம் கட்டை என்ற இடத்திற்கு பணத்தை எடுத்து வரும்படி சொன்னார்கள். என் கணவரும், மகளும் உடன் வந்தார்கள். பின்னர் தனியே என்னை மட்டும் வரும்படி சொன்னார்கள். தனியே சென்று காசைக் கொடுத்தேன்.

மாலை 6 மணிக்கு மகன் ரயில்வே நிலையத்துக்கு வருவார் என்று சொன்னார்கள்.போய் காத்திருந்தோம் வரவில்லை. பின்னர் அந்த அதிகாரியின் மாமனார் ஒருவர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத்தொடர்பு கொண்டு மகனை விடுவிக்க உதவும்படி கேட்டோம். அவரும் இயன்ற மட்டும் காசைக் கறந்தார் 50,000 மட்டில் அவருக்குச் செலவழித்தோம். அவரும் எங்களை ஏமாற்றிவிட்டார்.

2009 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக் குழு திருகோணமலை வந்தபோது அவர்களிடம் சொல்லி அழுதேன். திருகோணமலை நீதியரசடம் முறையிட்டேன். அதன் காரணமாக என் மகனைக் கூட்டிச் சென்ற அதிகாரி அவருடைய மாமனார் மற்றும் என் மகனுடைய நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

இப்போது நாங்கள் உதுல் பிரேமரத்ன தலைமையிலான நாம் இலங்கையர் என்ற அமைப்பில் இணைந்து மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டு பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளைச் சென்று சந்தித்தோம். மகஜர் ஒன்றை கையளித்தவுடன் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதாகவும் சொன்னார்கள்.

நாலாம் மாடியில் கிராம சேவகர் கடிதம் கொண்டு போனவர்களை ஒவ்வொரு குழு வாக அழைத்து விவரங்களைக் கேட்டறிந்தார் கள். கடிதம் கொண்டு போகாதவர்களுக்கு வேறொரு நாள் ஒதுக்கித் தருவதாகச் சொன்னார்கள். காணாமல் போனவர்கள் எவரும் தங்கள் பாதுகாப்பில் இல்லை என்றே சொன்னார்கள். சிலவேளை பெயர்கள் மாற்றி எழுதப்பட்டதனால் கண்டுபிடிக்க முடியாமலிருக்கும் என்று நினைக்கின்றோம்.

தமிழ் ஆயுதக் குழுக்கள்தான் இவ்வளவுக்கும் காரணம். எங்கள் பிள்ளைகள் உயிரோடு இருப்பார்கள் என்று பெற்ற தாய்மார்கள் என்ற வகையில் நாங்கள் நம்புகிறோம். நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இப் போது எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் முறையிட்டிருக்கின்றோம். யார் குற்றினாலும் அரிசியானால் சரிதான்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1764:2011-05-08-06-56-29&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.