Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனையை தீர்க்க ஐ.நா அறிக்கையை எப்படி பயன்படுத்தலாம்

Featured Replies

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்ற வகையில் தமிழர்களுக்கு இன்னொரு அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை இன்னும் சரியாகச் சொன்னால், இலங்கையிலுள்ள அனைவருக்கும் கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பு இது என்றும் சொல்லலாம். இந்த வாய்ப்பு

என்பது ஏற்கெனவே தமிழர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அதைப்போல அனைத்துத் தரப்பினர்களுக்கும் இது ஒரு நல்வாய்ப்பேயாகும்.

அதேவேளை, இந்த வாய்ப்பு முன்னைய வாய்ப்புகளையும் விடப் பெறுமதி கூடியதும் கூட.இங்கே தமிழர்களை அல்லது தமிழ் பேசும் மக்களை அழுத்தமாக ஏன் விழிக்க வேண்டியிருக்கிறது என்றால், இந்தத் தரப்பினர்கள் இன ரீதியாக ஒடுக்கு முறைக்குள்ளாகுவோராக இருப்பதனாலும் அதன் விளைவாக இந்தத் தரப்பினரே அதிக பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்பதாலுமேயாகும்.

சரி இப்போது இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றிப் பார்க்கலாம்.

1. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை ஆதாரமாகக் கொண்டு ஒரு அழுத்தத்தை வெளியுலகம் பிரயோகிக்க முனைகின்ற சந்தர்ப்பத்தை தமிழர்கள் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அ) இந்த அறிக்கையைக் கருவியாக்கி இலங்கை அரசாங்கத்தை ஒரு இணக்கப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிப்பது, இதில் ஒரு நிபந்தனையை விதித்து அரசாங்கத்தை அதன்படி இணங்க வைத்தல். அல்லது இன்னொரு நிபந்தனையின் மூலம் சர்வதேச சமூகத்தை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உத்தரவாதப்படுத்திக் கொள்வது.

ஆ) இவ்வளவு இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் காரணம் இனப்பிரச்சினையே என்ற புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்தி, அதன் மூலம் தீர்வுக்கான சாத்தியங்களை உருவாக்குதல்.

2. பெருந்தொகையான மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உயிழந்திருக்கின்றனர். சொத்துகளை இழந்திருக்கின்றனர். தங்கள் எதிர்காலத்தை இழந்திருக்கின்றனர். இறுதிப் போரின் போது பெரும் படுகொலைகளுக்குள்ளாகி யிருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், இவையெல்லாம் இந்த மக்கள் செய்திருக்கின்ற பெரும் தியாகங்கள் என்றே சொல்ல வேண்டும். ஆகையால், இதையெல்லாம் எவரும் புறக்கணிக்கக் கூடாது என்ற உண்மையின் அவசியத்தை உணர்த்துதல்.

3. இலங்கையின் இனப் பிரச்சினையினால் முழு நாடுமே அழிவுக்கும் பொருளாதார நெருக்குடிக்கும் உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை மேலும் நீடிக்கக் கூடாது. இன்னும் இலங்கை முற்று முழுதாகப் பதற்றத்திலிருந்து நீங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வைத்தல்.

4. இலங்கையின் இன முரண்களைப் பயன்படுத்தி பிராந்திய, சர்வதேச அரசியல் ஆதிக்க சக்திகள் தமது நலன்களைப் பேண முற்படுகின்றன. அவற்றின் விளைவுகளை இலங்கை மக்களே சந்திக்க வேண்டியிருக் கிறது என்பதால் நிச்சயமாக இன முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு ஒரு முழுமையான ஐக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர், இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. போரில் பட்ட காயங்களுக்கும் இழப்புகளுக்கும் பரிகாரமாக இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து அதை நடைறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கை அரசாங்கம் இதைப்பற்றி அதிகமாக அக்கறை கொண்டதாக இல்லை.

பதிலாக இன முரண்கள் இன்னும் அதிகரிக்கத்தக்க நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் இந்த அறிக்கை தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என அனைவருக்கும் வாய்ப்பான தொன்றாகவே இருக்கிறது.

சிங்களவர்களைப் பொறுத்தவரை அவர்களிற் பெரும்பான்மையானவர்கள் இந்த அறிக்கையை எதிர்க்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கையானது தங்களுக்கு எதிரானது இலங்கைக்கு ஆபத்தானது என்றே விளங்கியுள்ளனர்.

தமிழர்களிற் பெரும்பான்மையானவர்கள் இந்த அறிக்கை தங்களுக்குச் சாதகமானது.

எனவே, இந்த அறிக்கையைப் பயன்படுத்தி அரசாங்கத்தைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கூட்டு உளவியல் விருப்பம் என்றாலும் இந்த அறிக்கையின் மூலம் சிலருடைய தலைகளுக்கு மேலே சுருக்குக் கயிறு மாட்டப்படுவதை விடவும் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதே சிறப்பானது. ஆகவே, அதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில், இப்போது வெளிவந்திருக்கும் இந்த அறிக்கையும் இந்த அறிக்கையின் பின்னால் இருக்கும் சக்திகளும் அடுத்து என்னவாறு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால், இலங்கை அரசாங்கத்தைத் தமது நலன்களுக்கேற்ப இணங்க வைக்கும் நடவடிக்கையில் கடந்த காலங்களில் செயற்பட்ட தரப்புகள் இலங்கை அரசுக்கு முன்னர் போருக்கான உதவிகளையும் ஆதரவையும் தாராளமாக வழங்கியிருந்தன.

அதாவது போர்க்குற்றங்களுக்குக் காரணமாகவும் தூண்டலாகவும் இருந்துள்ளனர்.

இதன் நோக்கம் அப்போது இலங்கை அரசுக்குத் தேவையாக இருந்தது போருக்குய உதவிகளும் ஆதரவுமே. எனவே, அவற்றைச் செய்து தமது நெருக்கத்தை அதிகக்க முயன்றன இந்தத் தரப்புகள்.

இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், அமெக்கா, பிரிட்டன், ஈரான், ரஷ்யா என சகல தரப்புகளும் அடங்கும்.

போர் முடிந்த பிறகு இலங்கை தனது போக்கில் செயற்படத் தொடங்கியது. அது ஈரானையும் சீனாவையும் பாகிஸ்தானையும் ரஷ்யாவையும் அதிகமாக நெருங்கியது.

இந்த நாடுகளுடனான நெருக்கத்தின் மூலம் உதவிகளும் கிடைக்கும். அதேவேளையில் அதிக தலையீடு நெருக்கடிகள் என்பன கிடையாது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நெருக்கம் என்பது அதிக தலையீடுகளையுடையது. குறைந்த பட்சமான சுயாதீனத்துக்கும் இவை இடமளிப்பது குறைவு என்பது இலங்கையின் நம்பிக்கை.

ஆனால், இலங்கை எதிர்பார்த்ததைப் போல நிலைமைகளின் போக்கு அமையவில்லை.

இதன் விளைவு இந்தியாவையும் மேற்குலகையும் மேலும் நெருக்கமாக்கி, இலங்கைக்கு எதிராக அல்லது இலங்கைக்கு நெருக்கடியைத் தரக்கூடிய ஒரு செயற்பாட்டு வடிவம் உருவாகியது.

போர்க்குற்றத்தைச் செய்யத் தூண்டிய போர்குற்றங்களுக்கு ஆதரவளித்த இந்த நாடுகள் குற்றங்களைச் செய்யத் தூண்டிவிட்டு அந்தக் குற்றங்களை ஆதாரப்படுத்தக் கூடியவாறு ஆதாரங்களையும் சேகத்துக் கொண்டன. செய்மதிகள் மூலமாகவும் போர்ப்பகுதியில் இருந்த படையினடமிருந்த தகவல்கள் மற்றும் ஆதாரமான படங்கள் போன்றவற்றின் வழியாகவும் இந்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அத்துடன் படையினடம் சரணடைந்து அகதி முகாக்கு வந்த மக்களை தாராளமாக இந்தியாவும் மேற்குலகும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் அனுமதித்திருந்தன.

இது எதற்காக? போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களைப் பெறுவதற்காகவும் சாட்சியங்களை உருவாக்கிக் கொள்வதற்காகவுமே. அதாவது, இலங்கைக்கு ஒரு நெருக்கடிப் பிராந்தியத்துக்குள் தள்ளி தமக்கு சாதகமாகப் பணிய வைப்பதற்காகவுமே. எனவே, இலங்கைக்கு நெருக்கடியைத் தரக்கூடிய இந்தச் செயற்பாட்டு வடிவ வரைவாகவே ஐ.நா.செயலர் பான்கீ னின் நிபுணர்குழு அறிக்கையைப் பெருமளவுக்கும் கருதடிகிறது.

போர் நடைபெற்ற போது நடைபெற்ற குற்றங்கள் மற்றும் சம்பவங்கள், நிலைமைகள் பற்றியெல்லாம் ஐ.நா.வுக்கு அந்தச் சந்தர்ப்பத்திலேயே நன்றாகத் தெரியும். போருக்குப் பின்னர் அகதிகளின் நிலைமை பற்றியும் சரணடைந்தோன் நிலைமையைப் பற்றியும் ஐ. நா.வுக்குத் தெயும்.

ஐ.நாவுக்கு மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முழுவதற்கும் இலங்கையில் என்ன நடந்தது என்று தெளிவாகவே தெயும்.ஆகவே, இப்பொழுது சொல்லப்படும் செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையும் புதினமான ஒன்றல்ல.

ஆனால், இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் தரப்பும் இந்த அறிக்கையை ஒரு ஆதாரமாகக் கொண்டு நடவடிக்கைக்கான அழுத்தத்தைக் கொடுக்க முனையும் நாடுகளும் இலங்கையைத் தமக்கு இசைவாகப் பணிய வைக்க முயற்சிக்கின்றன.இதுவே உண்மை.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையர்கள் என்ன தீர்மானத்துக்கு வரவுள்ளனர்? என்ற இந்தக் கேள்வி முக்கியமானது.இந்த இடத்தில், இன்னொரு பிரதானமான கேள்வி எழுகிறது. இந்த அழுத்தத்தை நெருக்கடியை இலங்கையர்கள் அனைவரும் கடக்க வேண்டுமாயின் அவர்களிடையே ஒரு ஒருமித்த உணர்வைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அந்த உணர்வு என்பது இன முரண்பாடு தீர்க்கப்படும் பட்சத்திலேயே நிகழும். அல்லது அந்த உணர்வை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இலங்கையர்கள் என்ற உணர்வு உருவாகும்.

இதற்கு இந்தச் சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாய்ப்பானது என்பதை மீண்டும் இங்கே அழுத்திச் சொல்லலாம்.இன முரண் என்பது முழு இலங்கைக்கும் என்றும் நன்மையைத் தரப்போவதில்லை.

பதிலாக அது நெருக்கடியையும் நிம்மதியின்மையையும் பாதிப்பையம் அழிவுகளையும் அந்நிய சக்திகளின் தலையீட்டையும் தரும் என்று விளக்கக் கூடிய சந்தர்ப்பம் இதுவாகும்.

முக்கியமாக சிங்கள இனவாதத் தரப்புகளுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நிலைமையை உண்மையை விளக்கி இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.

அவ்வாறே பெருமளவு தமிழ்பேசும் மக்களின் இழப்புகளுக்கும் நீண்டகாலத் துயருக்கும் ஒரு முடிவாக ஒரு பேறாக இப்போது இந்த வாய்ப்புக் கிட்டியிருக்கிறது என்பதைத் தமிழ் பேசும் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குதல்.

இந்த இரண்டு தரப்பினருக்குமான விளக்கங்களை நிச்சயமாக விரைவாகச் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இது நடக்கவில்லை. பதிலாக இரண்டு பிரதான சமூகங்களும் (தமிழ் சிங்களச் சமூகங்கள்) இந்தப் பிரச்சினையை தத்தமது வழமையான இனவாத நோக்கு நிலைகளில் இருந்தே அணுகுகின்றன.

இது மேலும் அபாயநிலைமைகளையே நீடிக்க வைக்கும். இப்போதுதான் நீண்டகாலப் போரிலிருந்து நாடு மீண்டிருக்கிறது. மக்கள் இப்பொழுதுதான் சற்று நிம்மதிப் பெருச்சு விடுகிறார்கள்.

இந்த வளர்ச்சி நிலையைப் பாழடிக்கும் காரியங்கள் உணர்ச்சி வேகத்தில் நிகழக் கூடாது. அதற்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவரும் இடமளிப்பது நல்லதல்ல.

சர்வதேச நெருக்கடியோ, உள்நாட்டு நெருக்கடியோ அது மக்களையே அதிகமாகப் பாதிக்கிறது.

இதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக கடந்த கால அனுபவங்களுக்கூடாக இதை அவர்கள் நன்றாக விளக்கமாகப் புந்து கொள்ள வேண்டும்.

போருக்கு ஆதரவளித்த தரப்புகள் இப்போது போர்க்குற்றங்களை வைத்தே சுருக்குக் கயிற்றை உருவாக்கியிருப்பதைப் போல இந்த அறிக்கையை ஒரு கத்தியாக கருவியாகப் பயன்படுத்த விளையும் இந்தியாவும் மேற்குலகும் நிச்சயம் இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறொரு தந்திரோபாயத்துக்கும் அணுகு முறைக்கும் செல்லலாம்.

ஆகவே, அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டதைப் போலல்லாமல், சொந்தப் புத்தியில் சிந்தித்து செயற்படுவது நல்லது.அது அவசியமானதும் கூட.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.