Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீரிசின் இந்திய விஜயமும் ஐ.நா அறிக்கையை பற்றியும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் கருத்துக்கள்

Featured Replies

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற இந்தியாவின் வலியுறுத்தல் இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை இந்தியாவின் தேசிய நலனுக்காக பயன்படுத்தாது தமிழ்

மக்களின் விடிவுக்காக பயன்படுத்தவேண்டுமென்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெவித்துள்ளனர்.ஐ.நா.வின் அறிக்கைக்கு முகம் கொடுக்க இந்தியாவின் உதவி அரசாங்கத்திற்கு கட்டாயம் தேவையாகும். எனவே, இதனை பயன்படுத்தி இலங்கையில் அதிகாரத்தை பகிர்வதற்கு இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை இந்திய கூட்டறிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புளெட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் இலங்கை இந்தியா இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையை வரவேற்கிறோம் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டுமென்ற இந்தியாவின் அழுத்தம் வரவேற்புக்குயது. இது தொடர்பாக அரசாங்கம் தமிழர் தரப்புடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி தீர்வை எட்ட முடியும்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக் கூட்டறிக்கை மூலம் சில விடயங்களை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச அழுத்தங்கள் அரசாங்கம் மீது அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்வர் ஜெயலலிதாவின் ஆரம்ப பேச்சே இலங்கை பிரச்சினை தொடர்பா கவே அமைந்திருந்தது.

இவையனைத்தும் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க வேண்டுமென்ற அழுத்தத்தை இலங்கை மீது ஏற்படுத்த இந்திய மத்திய அரசாங்கத்தை தள்ளி விட்டுள்ளது.

மனோ கணேசன்

ஐ.நா. அறிக்கைக்கு முகம் கொடுக்க இந்தியாவின் உதவி அரசாங்கத்துக்கு கட்டாயம் தேவையாகும். அத்தோடு தமிழ்நாட்டில் வீழ்ச்சியுற்ற காங்கிரஸ் பலத்தை மீளக் கட்டியெழுப்பும் தேவையும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உருவாகியுள்ளது.

மத்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையை கையாண்ட விதம் பிழையானது என்பது தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.

இவையனைத்தும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான நிர்ப்பந்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது என்றார்.ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் இலங்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையை இந்தியாவின் தேசிய நலனுக்காக பயன்படுத்தாது சொல்லொணாத் துயரங் களை அனுபவிக்கும் தமிழ் மக்களின் விடிவுக்காக பயன்படுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் ன்னணியின் தலைவர் மனோ கணேஷன் தெவித்தார். மனித உமைகள் தொடர்பாக விசார ணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற இந்தியாவின் வலியுறுத்தல் இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெளிவு படுத்துகையில், அரசியல் தீர்வு, மீள் குடியேற்றமென இது வரை காலம் வலியுறுத்தி வந்த இந்தியா வின் அடிப்படைக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவசர காலச்சட்டத்தை நீக்க வேண்டுமென்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப் பட வேண்டுமென டில்லி வலியுறுத்தியுள்ளதோடு இலங்கையுடன் இணைந்து கூட்ட றிக்கையையும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டு வந்த இலங்கையில் மனித உமைகள் மீற ப்படுதல் தொடர்பான விடயத்தை இன்று டில்லியில் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. அங்கு இடம்பெற்ற ஐ.நா. அறிக்கை தொடர்பான கருத்தரங்குகளும் பத்திரிகைச் செய்திகளும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்நிலைக்கு காரணமாகும்.

அத்தோடு கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற் சென்ற தீர்வு வலியு றுத்தப்படவில்லையென்பதே உண்மையா னதாகும்.

13 ஆவது திருத்தத்தை அடிப்படையாக வைத்து அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள வேண்டுமென்றே வலியுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி. பா.அரியநேத்திரன்

ஐ.நா. அறிக்கையினால் இந்தியாவின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.இதனை இந்தியாவின் தேசிய நலனுக் காக பயன்படுத்தாது சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் தமிழ் மக்களின் விடிவுக்காக பயன்படுத்த வேண்டும்.

அதன்போதே ஓரளவாவது தமிழ் மக்களின் வெறுப்பை தவிர்த்துக் கொள்ள முடியும்.கூட்டமைப்பு எம்.பி. அயநேத்திரன் இலங்கைக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடி கூட்டறிக்கையை வெளி யிட்டுள்ளதேயொழிய இதனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப் பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பா. அரியநேத்திரன் தெவித்தார்.

அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும் எதுவிதமான பலன்களும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வில்லையென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்ட மைப்பின் எம்.பி. பா.அரியநேத்திரன் மேலும் தெளிவுப்படுத்துகையில், வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உமையுடனான பொலிஸ் காணி அதிகாரங்களுடனான அதிகாரப் பரவலாக்கலே எம் மக்களுக்கு தேவை. அதற்காகவே எம்மக்கள் தேர்தலில் அமோகமாக வாக்குகளை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்தனர்.

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.இதன் மூலம் பொலிஸ் காணி அதிகாரங்க ளுடனான அதிகாரப் பரவலாக்கலை வழங்க இந்தியா முயற்சிகளை மேற் கொள்ள வில்லை.எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டது. ஆனால் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவில்லை. எனவே இலங்கையும் இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையால் தமிழ் மக்களுக்கு எதுவிதமான தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை. கூட்டறிக்கைகள் வெறும் கண்துடைப்பாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை இந்திய உடன்படிக்கையை நடைறைப்படுத்தாத இலங்கை அரசாங்கம் கூட்டறிக்கையை நடைறைப்படுத்துமா?

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1817:2011-05-19-14-18-53&catid=1:latest-news&Itemid=18'>http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1817:2011-05-19-14-18-53&catid=1:latest-news&Itemid=18

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.