Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பாவத்திலிருந்து மீள வேண்டுமாயின் நிரந்தரத் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்

Featured Replies

2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் பாரிய பொறுப்பு இந்தியாவுக்கும் உள்ளது. இந்தியா அந்த பாவத்தில் இருந்து ஓரளவு விடுபட வேண்டுமென்றால் தமிழ் மக்கள் தம்மைத்தாமே ஆளும் ஒரு நிரந்தர தீர்வுத்திட்டத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்ட மைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி. சீ.யோகேஸ்வரன் தெவித்தார்.

ஐ.நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்டுள்ள அறிக்கை தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வழியை ஏற்படுத்தும். மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் கூறியே ஆகவேண்டும் என்றும் அவர் கூறினார்.

2009 ஆண்டு வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் களுவாஞ்சிக்குடி சக்தி இல்லத்தில் அனாதரவற்ற சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற் றும்போதே அவர் இவ்வாறு தெவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெவித்ததாவது இந்த நாட்டின் பூர்வீக குடிகளான நாங்கள் இன்று இந்த நாட்டின் தற்காலிக குடிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். கடந்த காலத்தில் எமது சமூகம் இந்த நாட்டில் தமது உரிமையை பெற வேண்டும் என்பதற்காக தமிழரசு சார்பில் அகிம்சை போராட்டங்களையும் காலப் போக்கில் அது செல்லுபடியற்ற நிலையில் ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளபட்டனர்.

ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் சகத்தின் வாயை அடைந்து விட்டோம் என்று சிங்கள பேரினவாதம் ஒருகுரலை எழுப்பியுள்ளது. வன்னியிலே பெருமளவிலான மக்களை அழித்த கர்வத்தினால் அத்தகைய குரல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இந்த அரசாங் கத்தினால் திட்டமிட்ட நடவடிக்கையினாலும் அயல்நாடுகளின் ஆதரவினாலும் இந்த மண்ணிலே மடிந்திருக்கின்றார்கள், அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த வேதனையான ஒரு சூழல் இந்த நாட்டுக்கு முதல்றையாக நடைபெற்றுள்ளது என்றுகூட நாங்கள் குறிப்பிடலாம். பெருந் தொகை மக்கள் ஒரு சில நாட்களில் அழிக் கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல பலர் அங் கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பல பிள்ளைகள் பெற்றோரை இழந்து அனாதைகளாக் கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த நாட்டிலே இவற்றையெல்லாம் செய்த இந்த அரசாங்கம் இந்த இனத்தை அழித்துவிட் டோம் இவற்றை நாங்கள் செய்தாலும் இனி யாராவது அந்த இனத்துக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுப்போம் அல்லது அவர்கள் திருப்திபடும் வகையில் ஏதாவது செய்வோம் என்று எண்ணவில்லை.

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று அறுக்குமென்று சொல்வார்கள். பாண்டவர்கள் தருமத்தை கடைப்பிடித்ததன் காரணமாக அவர்கள் அருகில் கடவுள் கிருஷ்ண பரமாத் மா இருந்தும் கூட அவர்கள் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. ஆனால் அதர்மவாதிகளாக இருந்த கௌரவர்கள் மகிழ்ச்சியாக விருந்தனர். ஆனால் இறுதியில் தர்மத்தை கடைப் பிடித்த பாண்டவர்கள் வெற்றி கண்டனர். கௌரவர்கள் தோல்வியை அனுபவித்தார்கள்.ஆகவே, இந்த சமூகம் இந்த நாட்டிலே எப்பவாவது ஒரு நாள் தர்மத்தின் வழியே தலை நிமிர்ந்தே நிற்கும், ஏனென்றால் ஒரு காலத்திலே இந்த நாட்டை ஆண்ட சமூகம். இந்த நாட்டின் பூர்வீக குடிகள். ஆனால் இன்று அவர்கள் சிறுபான்மையினம் என்று கூறி அடக்கியொடுக்கி வைக்க முற்படுகின்றனர்.

மனித சமூகமே வெட்கப்படவேண்டிய விடயம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் அங்கு அரங்கேற்றப்பட்டது. பெற்ற தாயையே உயிரோடு புதைத்துவிட்டு ஓடிய துர்ப்பாக்கிய நிலை தமிழ் சிறுவனுக்கு ஏற்பட்டது. இவ்வாறான பல நிகழ்வுகள் நடைபெற்றன.

யுத்த காலத்தில் படுகாயமடைந்தவர்களை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் குவித் திருந்தபோதும் அவர்களுக்கு எதனையும் செய்யாமல் மனித தர்மத்தைக் கூட மறுத்திருந்தது.

திருகோணமலை வைத்தியசாலையில் காயமடைந்தவர்களை கொண்டுவந்து அனுமதித்த போது அவர்களுக்கு சென்று உதவ, அவர்களை பார்க்ககூட எங்களால் முடியவில்லை.

அதுமட்டுமின்றி இடம்பெயர்ந்த மக்களில் பலர் கடத்தப்பட்டிருந்தனர். அவர்கள் தொடர்பில் இதுவரை அரசாங்கத்தினால் எதுவித உத்தரவாதம் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதியை சந்தித்தபோது கூட காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் வெளிப்படுத்தலை செய்ய வேண்டும் என்று கேட்டபோது அங்கிருந்த பஷில் ராஜபக்ஷ கூறினார்; அவர்கள் தாங்கள் இருப்பதையும் தங்கள் பெயரையும் சொல்ல மறுக்கின்றார்கள். அவர்கள் தங்களை சர்வதேச அமைப்புக்கள் கொண்டு சென்றுவிடும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர் என்றார். அப்படியென்றால் அதன் கருத்து அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை தெளிவு படுத்தியிருந்தார்.

அதுமட்டுமின்றி 2007ஆம் ஆண்டுக்கு பிறகு மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பட்டவர்கள் கூட கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் இல்லை. நாங்கள் விசாத்தபோது சொல்கின்றனர் இங்கிருக்கும் ஆயுதக்குழுக்களின் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள். முன் எங்களை நிறுத்துங்கள், கடத்தியவர்கள் யார் என்று நாங்கள் சொல்கின்றோம் என்று அதனைக் கூட நாங்கள் ஏற்பாடு செய்ய முனைந்து தோல்வி கண்டோம்.

2009ஆம் ஆண்டு எங்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த கொடூரமான செயல் இந்த நாட்டில் என்றும் மறக்கடியாது. எமது நாட்டின் தமிழினத்தை அழித்ததன் பெருமையை இந்தியாவும் ஏற்கவேண்டும். இந்தியா என்றாவது ஒரு காலத்தில் இது தொடர்பில் பதில்சொல்லியே ஆகவேண்டும். சென்ற வருடம் இந்தியாவுக்கு சென்றபோது கூட அங்குள்ள ஊடகங்களிடம் இதனை தெளிவாக கூறியுள்ளேன்.

இந்தியா அதில் இருந்து விடுதலையாக வேண்டுமாகவிருந்தால் இந்த தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை தமிழ் மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை, வடகிழக்கு இணைந்த தீர்வை, தமிழ் மக்கள் சுயமாக ஆளக்கூடிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த மண்ணுக்கு இந்தியா செய்த துரோகத்தில் இருந்து ஓரளவு விடுதலையாக முடியும்.

ஆனால் இன்று அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்று அறுக்குமென்ற செயல் தொடங்கிவிட்டது. எய்தவனுக்கு விசாரணை வருகின்றது. அங்கு இனத்தை அழித்த அம்பு கூட்டில் இருக்கின்றது. எய்தவர்கள் இந்த விசாரணைக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.

தெளிவாகச் சொல்கின்றேன். இலங்கை அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவருகின்ற அறிக்கையினை நூறுவீத மாக வரவேற்கின்றோம். அந்த மனித உரிமை மீறல்களுக்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவர்கள் இன்னும் எங்களை வாய் மூட வைக்க முடியாது. அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஒருபோதும் எமது மக்களுக்கு துரோகம் செய்யமாட்டோம். அதனை நாங்கள உறுதியாகக்கூறிக் கொள்கின்றோம் என்றார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.