Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றம் வருமா? வீதிக்கு வாருங்கள் -தமிழருவி மணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ராஜபக்ஷே அரசு எவ்வளவு காரணமோ, மன்மோகன்சிங்கின் மத்திய அரசு எந்தளவுக்குக் காரணமோ, அதற்கு சற்றும் குறைவி ல்லாத காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் தாயகத் தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஈழம் சார்ந்த உணர்வாளர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் முறையாக கூடி விவாதித்து ஓர் அணியாய், ஒரு குடையின் கீழ், ஒரே மேடையில் ஒரே முழக்கமாய் ஈழத்தமிழர்களுக்காக செயல்பட்டிருந்தால், உண்மையிலேயே புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஈழ நிலத்தில் நடந்த சொல்லொணாத் துயரங்களுக்கு விடிவு வந்து சேர்ந்திருக்கும்.

‘சென்றதினி மீளாது மூடர்காள்.. இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றான் பாரதி. எனவே, நாம் பழையனவற்றை ஆய்வு செய்வதைவிட இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதுதான் சரியானது. ஈழம் வாய்க்க வேண்டும் என்று நெடுங்காலமாகவே சிந்திப்பவர் நெடுமாறன். ஈழத்திற்காக உலக அரங்கில் ஓயாமல் குரல் கொடுக்கக்கூடியவர் வைகோ. ஈழப் பிரச்னையில் தன்னுடைய தார்மீக ஆதரவை அறிக்கைகளின் மூலம் தரக்கூடிய மனிதர் டாக்டர் ராமதாஸ். ஈழம் தொடர்பாக பல்வேறு சிறிய குழுக்கள் தங்களுடைய உணர்வைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த அனைத்து அமைப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற அறிக்கையை வைத்து ராஜபக்ஷே அரசை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சியை எப்படி தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மேற்கொள்வது என்ற கேள்விக்கு பதில் இதுதான்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், அரசியல்ரீதியான கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். சித்தாந்தரீதியான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இனம் என்று வருகிறபோது, மொழி என்று வருகிறபோது, அனைத்து வேற்றுமைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு ஒன்றாக நிற்பதுதான் தமிழ்ச் சமுதாயத்திற்கு இவர்கள் ஆற்றக்கூடிய பயனாக இருக்க முடியும்.

என்னைப் பொறுத்தவரையில் ஜூன் மாதத்திற்குள்ளாகவே இந்தப் பிரச்னை முழுவடிவத்திற்கு வந்து சேரக்கூடிய காலம் கனிந்திருக்கிறது. இனி நாம் காலதாமதமாக காரியங்களை ஆற்றுவதால் பயனில்லை. இப்பொழுது இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் அவசரம் அவசரமாக டெல்லிக்கு வந்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து, ‘ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேச போர்க்குற்றவாளியாக ராஜபக்ஷே சித்திரிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்’ என கேட் டிருக்கிறார்.

இந்திய அரசாங்கமும் அவர்களுக்கேற்ற பதிலைத்தான் தந்திருக்க வேண்டும். இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு. இந்திய நாடு என்பது ப ல்வேறு மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம். இதை முதலில் மத்தியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு இதில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மத்தியில் ஆள்பவர்களுக்கு இருக்க வேண்டுமானால், காயம்பட்ட ரணங்களுக்கு மருந்து தடவும் முயற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

தமிழ்நாட்டில் இரண்டு எதிரெதிர் துருவங்களாகவே இயங்கிக் கொண்டிருப்பவை திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும். இவர்கள் அரசியல்ரீதியாக ஆயிரம் பிரச்னைகளில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளட்டும். அது குறித்து நமக்குக் கவலையில்லை. ஆனால், இன்றைக்கு சர்வதேச போர்க்கு ற்றவாளியாக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு வெளிநாடுகளில் வெளிப்படையாக ஆதரவைத் திரட்டும் சூழலில், இந்திய அரசும் தன்னை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழகம் உருவாக்கியாக வேண்டும்.

எனவே தமிழகத்தின் வீதிகளில், இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என நிர்ப்பந்தப்படு த்த எல்லா கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி வீதியில் வந்து குரல் கொடுக்க வேண்டும்.

தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, ஈழத்தில் நடந்து முடிந்த எல்லா அவலங்களுக்கும் ஒரு மௌனப் பார்வையாளராகவே இருந்து மாறாத களங்கத்தை தன் வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர். ‘இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற நிலையிலாவது கலைஞரின் தலைமையில் இயங்கும் தி.மு.க. எழுந்து வர வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவே வியூகம் அமைத்துப் பழக்கப்பட்ட அண்ணா தி.மு.க.வும், ‘இது அரசியல் அல்ல. இனம் சார்ந்த பிரச்னை’ எ ன்று அவர்களும் வீதியில் வந்து நின்று குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்று கல்லறைக்குப் போகிற நிலையில் இருக்கிறது. மூச்சு இன்று நின்றுவிடுமா? நாளை நின்றுவிடுமா? என்கிற அளவுக்கு அதன் ஆரோக்கியம் தளர்ந்திருந்தாலும் தமிழகத்தில் மீண்டும் எழுந்து நிற்கும் ஆசை காங்கிரஸ்காரர்களுக்கு இருந்தால் அவர்களும் வீதியில் வந்து நிற்க வேண்டும்.

எல்லாவற்றிலும் அரசியல் கலந்துவிட்ட இந்தச் சமுதாயத்தில் இனம் சார்ந்த விவகாரத்திலாவது உங்கள் கட்சி அரசியலை மூட்டை கட்டித் தனியாக வைத்துவிட்டு உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிற 12 கோடித் தமிழர்களும் ஒரே இனம் என்ற நோக்கில், உலகின் எந்த மூலையில் ஒரு தமிழன் பாதிக்கப்பட்டாலும், 12 கோடி மக்களும் ஒன்றாக எழுந்து நிற்போம் என்ற உரிமைக் குரலோடு நம்மை வெளிப்படுத்துவதற்கான தருணம் இது.

தமிழ்நாட்டின் தலைநகரில் சுமார் ஒரு கோடித் தமிழர்கள் இருக்கிறோம். ஐந்து லட்சம் தமிழர்கள் வீதியில் வந்து நின்று மனித உரிமை மீறலை நடத்திய ராஜபக்ஷேவுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும். எல்லாக் கட்சிகளையும், சகல அமைப்புகளையும் சார்ந்தவர்கள் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் ஒன்றாகக் கூட வேண்டும்.

ஒரு நாளில் ஐந்து லட்சம் பேர் திரண்டு குரல் கொடுத்தால் நிச்சயம் இந்திய அரசு தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும். ராஜபக்ஷே அரசுக்கு ஆதரவாக இருக்கக் கூடிய நிலையை அது வலுவிழக்கச் செய்யும். அதை இந்திய அரசு செய்யத் தவறினால் தமிழகத்தில் இருக்கக் கூடிய தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இனமே நிர்க்கதியாக நிற்கிறது. ஒரேநாளில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பிழந்து கதறியிருக்கிறார்கள்.

இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய தமிழர்கள் உறைவிடமிழந்து, உறுப்பிழந்து, வாழ்வாதாரமின்றி மனநோயாளிகளாக மாறிக் கிடக்கிறார்கள். இவர்களை நெஞ்சில் நிறுத்தி ஒரே ஒருநாள் தலைநகரான சென்னையில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு நிற்க வேண்டும். இது தமிழர்கள் செய்ய வேண்டியது. தமிழகத்தில் இருக்கும் க ட்சி சார்ந்த அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டியது.

தமிழக அரசு செய்வதற்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது. அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தலின்போது, ‘நான் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசைக் கடுமையாக நிர்ப்பந்திப்பேன். இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையைக் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்வேன்’ என்றெல்லாம் வாக்களித்திருக்கிறார்.

சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் வந்து அமரப் போகிறார்கள். 204 பேர் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள். 30 பேர் தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள். அண்ணா தி.மு.க. கூட்டணி இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் கண்டித்து கடுமையாக விமர்சித்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் எதிரணியில் இருக்கும் முப்பது பேரும் அதை எதிர்க்கப் போவது கிடையாது.

எனவே, ஏகமனதாக ராஜபக்ஷே அரசைக் கண்டித்து அதனுடைய போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டு சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷேவை நிறுத்துவதற்காக இந்தியா எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

தன்னுடைய பதவி நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குக்கூட கலைஞர் தயங்கினார். அப்படித் தயங்கியதற்கு அவர் கொடுத்த விலைதான் இன்றைக்கு தி.மு.க. வரலாறு காணாத சரிவைச் சந்தித்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சியின் வீழ்ச்சி வெறும் ஊழலாலோ, அதிகார துஷ்பிரயோகத்தினாலோ, குடும்ப ஆட்சியினாலோ, விலைவாசி உயர்வினாலோ, மின்தடையினாலோ மட்டும் நிகழ்ந்தது இல்லை. யாருடைய பார்வைக்கும் படாமல் நிலத்திற்கு அடியில் ஓடும் நீரோட்டத்தைப் போல, தமிழர்களின் இதயங்களுக்குள் இருந்த இன உணர்வுதான் தி.மு.க.வுக்கு மோசமான வீழ்ச்சியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கருணாநிதி செய்யத் தவறியதை ஜெயலலிதா செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

பதவிப் பிரமாணம் எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்து செய்ய வேண்டிய முதல் காரியம். அதை அவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமை என்று சொல்வேன். கண்டன தீர்மானத்தை ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நிறைவேற்றி இந்திய அரசை நிர்ப்பந்திக்கிற வாசகங்களை வைத்து டெல்லிக்கு அனுப்ப வேண் டும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும். இதைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தயங்கினால், இனியும் மௌனப் பார்வையாளர்களாக தமிழர்கள் இருக்கலாகாது.

ஒட்டுமொத்த தமிழ் இனமும் தெருக்களில் வந்து நின்று கூடிக் குரல் கொடுப்பது ஈழப் பிரச்னைக்காகத்தான் என்று காங்கிரஸ்காரர்களோ, ஜெயலலிதாவோ கருதலாகாது. ஒரு பிரச்னையில் ஒட்டுமொத்த தமிழ் இனமும் வந்து நின்று தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தி விட்டால், அது முல்லைப் பெரியாறுக்கும் இப்படித்தான் நேரும். காவிரிப் பிரச்னைக்கும் இப்படித்தான் நேரும். பாலாறு பிரச்னைக்கும் இப்படித்தான் நேரும் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும். அண்டை மாநிலங்களில் உள்ள அரசுகளும் அறிந்து கொள்ளும்.

எனவே, இது வெறும் ஈழத் தமிழருக்காக நடக்கும் போராட்டம் அல்ல. தாயகத் தமிழகத்தில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளை ஈடு செய்யவும், நாம் எடுக்க வேண்டிய கருவி லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் ஒருநாளில் கூடி நம்முடைய குரலை வெளிப்படுத்துவதுதான். இதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் ஈழத்தில் இருக்கக் கூடிய தமிழர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு ராஜபக்ஷே ஒரு காரணம். ராஜபக்ஷேவுக்கு உதவிய மத்திய அரசும் ஒரு காரணம். இதை எல்லாவற்றையும்விட சுயநலமாய்ச் சுருங்கிவிட்ட தமிழ்ச் சமுதாயமும், இவர்களுக்கு தலைமையேற்று நடக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும், இன உணர்வாளர்களும்தான் துரோகிகள் என்பதை உரக்கச் சொல்வேன்.

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.