Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலவே செயற்படுகின்றது இலங்கை அரசு

Featured Replies

அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி தேசிய பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அறிவுரை வழங்கும் போது அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலவே செயற்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜய சூரீய குறிப்பிட்டார்.இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத தற்போதைய சூழலில் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிராக அவசரகாலச் சட்டம் பிரயோகிக்கப் படுகின்றமையால் மேலும் சர்வதேச அழுத்தங்களே அதிகரிக்கும். எனவே அரசு உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கவேணன்டும் என்றும் அவர் கோரினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட விசேட செய்திக் குறிப்பிலேயே கரு ஜயசூரீய எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், யுத்த வெற்றியின் பின்னர் நாட்டின் சகல இனங்களையும் ஓரணிப்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இதில் பயங்கரவாதத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களை விலக்கி சகல இன மக்களையும் ஒற்றுமையாக இணைத்து நாட்டில் மனித உரிமைகளை பாதுகாத்து ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் தற்போதைய பணியாக அமைய வேண்டும்.

2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐ.தே.க மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்க மாற்று வழிகளில் நடவடிக்கை எடுத்தது. ஆனால் அரசாங்கம் தற்போது பயங்கரவாத சூழல் இல்லாத நிலையில் அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் விலக்கிக் கொள்ளாது அச்சட்டங்களை தொழிற் சங்க நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்களை தண்டிப்பதற்காக பயன்படுத்தியது.

அத்தோடு நல்லாட்சியை உறுதிப்படுத்திய 17வது திருத்தச் சட்டத்தை அகற்றி 18வது அரசியலமைப்புத் திருத்தத்தை முன் வைத்து நாட்டின் ஜனநாயகத் தன்மையை கேள்விக் குறியாக்கியது. இதனால் சர்வதேச சமூகம் நேரடியாகவே இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட ஆரம்பித்தது. அதுமட்டுமன்றி கடந்த வெசாக் வாரத்தில் கூட அரசு கருணை ஆதரவை போதித்து பிரசாரம் செய்தது. ஆனால் யுத்த வெற்றியின் முக்கியஸ்தரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை சிறையிலிட்டு வதைத்துள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் இலங்கை சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் நிலையே உருவாகியுள்ளது. எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகளும் உள்ளன. எனவே மக்களை ஏமாற்றும் அரசு நாட்டின் முன்னுள்ள ஆபத்தான சூழலை தெளிவுபடுத்த தவறியுள்ளது என்றார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.